தூவல் என்பது மூங்கில் மூலம் மீன் பிடிக்கும் ஒரு முறையாகும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ள சிங்காரப்பேட்டை கிராமம் தான் கதைக்களம். அந்த ஊரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் வரும் மீன்களை தூவல் முறை மூலம் பிடிப்பதே இவர்களது தொழில். இந்த தொழில் அந்த ஊரின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாகவும் ஆகிவிடுகிறது. இந்நிலையில் தூவல் முறை மூலம் பிடிக்கும் மீன்களை விட வெடி வைத்து பிடித்தால் அதிக மீன்களை அள்ளலாமே என்று பேராசை கொள்ளும் ஊர் பெரியவர் ஒருவர் மீன்களை வெடி வைத்து பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் இதுவே பிரச்சனையாகிறது. ஏற்கனவே அந்த ஊரின் வனச்சரகர் காட்டு வளங்களை எப்படி எல்லாம் சுரண்ட முடியுமோ அப்படி எல்லாம் சுரண்டுகிறார். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கூட தேடிப் பிடித்து மாமூலை பெற்றுக் கொள்கிறார். இந்நிலையில் இவரது கவனம் ஆற்று…
Read Moreஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆன்மிக ஆல்பம் !!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர், இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சுயாதீன ஆல்பங்கள், திரைப்பட பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் இந்த “அஷ்ட ஐயப்ப அவதாரம்” இசை…
Read Moreஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக…
Read MoreZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை…
Read Moreடிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!
கடந்த 2019 இன் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பில் கதாபாத்திரங்களுக்கு பல முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். முஃபாசாவாக அர்ஜுன் தாஸ், டாக்காவாக அசோக் செல்வன், நடிகர்கள் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டைமனுக்கு குரல் கொடுத்துள்ளனர். மேலும், இளைய ரஃபிக்கின் குரலாக விடிவி கணேஷ் மற்றும் கிரோஸிற்கு நடிகர் நாசரும் குரல் கொடுத்துள்ளனர். இந்த அனுபவம் குறித்து சிங்கம் புலி பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படத்தில் நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது முற்றிலும் தற்செயலானது. 2019 இல் எனக்கு முதலில் வாய்ப்பு கிடைத்த போது, நான் தயங்கினேன். ஆனால் என்…
Read Moreபேமிலி படம் – திரை விமர்சனம்
திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் நாயகன் உதய் கார்த்திக், பல தேடல்களுக்கு பிறகு தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்கிறார். இவர் சொன்ன கதை பிடித்து போக, படத்தை தயாரிக்க முன்வருகிறார் அந்த தயாரிப்பாளர். ஆனால் படத்தில் இன்றைய முன்னணி நடிகரான தன் தம்பி தான் நாயகன் என்கிறார். ஆனால் கதைபிடித்த தயாரிப்பாளரின் தம்பியோ புது இயக்குனருக்கு சரி வர இயக்க தெரியுமோ என்னவோ… அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தன் அண்ணனிடம் சொல்லி விட, சிதைந்து போகிறது உதய் கார்த்திக்கின் இயக்குனர் கனவு. மூத்தஅண்ணன் வழக்கறிஞர். அடுத்த அண்ணன் ஐ டி துறையில் என குடும்பத்தில் சம்பாதிப்பவர்களாக இருக்க, கடைசி தம்பி மட்டும் இயக்குனர் கனவில் ஏக்கத்துடன் கனவுகளை சுமந்து திரிய… இந்நிலையில் தான் திடீர் திருப்பம். உதய் கார்த்திக் இயக்கும் படத்தை தயாரிக்க அவரின்…
Read Moreபுஷ்பா தி ரூல் – திரை விமர்சனம்
புஷ்பா முதல் பாகத்தில் செம்மரம் மட்டும் கூலி தொழிலாளியாக இருந்து படிப்படியாக செம்மர கடத்தல் கும்பல் தலைவனாக மாறுவார் அல்லு அர்ஜுன். இந்த இரண்டாம் பாகத்தில் அவரது தலைமை பொறுப்பை தட்டி பறிக்க திட்டமிடும் தொழில் எதிரிகளிடம் இருந்து எப்படி அதை மீட்டுக் கொள்கிறார் என்பதை கோடிகளை கொட்டி சொல்லி இருக்கிறார்கள். இந்த கதைக் களத்துக்குள் மனைவியின் புகைப்பட ஆசையை நிறைவேற்ற முதலமைச்சரையே மாற்றும் புஷ்பா, தனது குடும்ப அடையாளத் துக்காக அண்ணனிடம் அவமானப்படுவது, அதே அண்ணன் மகளுக்கு ஆபத்து என்றதும் உயிரைப் பணயம் வைத்து மீட்க புறப்படுவது போன்ற கிளை க் கதைகளும் பிரமாதம் சொல்ல வைக்கின்றன. ஒற்றைக் காலில் கயிற்றைக் கட்டி தலைகீழாக தொங்க விடப்பட்டிருக்கும் முதல் காட்சியிலேயே தனது வீர தீர பிரதாபத்தில் புஷ்பா, ரசிகர்களை தனக்கு நெருக்கமாக்கி கொள்கிறார். பெண் வேடமிட்டு…
Read Moreபொங்கல் பண்டிகை ரேஸில் முதல் படமாக களமிறங்கிய ‘வணங்கான்’
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். நாயகி ரித்தா மற்றொரு நாயகியாக நடித்தூள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜன-10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ‘வணங்கான்’ திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. பொங்கல் வெளியீட்டு பட்டியலில் எந்தெந்த படங்கள் இடம்பிடிக்க இருக்கின்றன என்கிற அறிவிப்புகள் எதுவும் இதுவரை உறுதியாகாத நிலையில் ‘வணங்கான்’ படத்தின் ரிலீஸ் முதல் அறிவிப்பாக வெளியாகி உள்ளது குறிப்படத்தக்கது. அதற்கு கட்டியம் கூறும் விதமாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தபடத்தில் இருந்து அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையும், ஒரு கையில் விநாயகர்…
Read Moreசோசியல் மீடியா விமர்சனம் செய்ய அனுமதியுங்கள்-‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ பட தயாரிப்பாளர் கோரிக்கை!
அன்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்,செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வணக்கம்.. வரும் டிசம்பர் 13 அன்று எனது ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர் நடிப்பில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. தற்போது திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக் , எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்ற உங்களின் அறிக்கை என் போன்ற சிறுபட தயாரிப்பாளர்களுக்காக சற்று பரிசீலனை செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆம் பல சிறு படங்கள் இது போன்ற சோசியல் மீடியா மற்றும் இணையதளங்களினால் மட்டுமே வெளியே தெரிகிறது. எனவே தயாரிப்பாளர்கள் அனுமதியோடு அவர்கள் பரிந்துரைக்கும் யூடியூப் சேனல் மட்டுமாவது விமர்சனங்களை வெளியிட்டால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்து. எத்தனையோ பெரிய நடிகர்கள்…
Read Moreசிரஞ்சீவியின் அடுத்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்: SLV சினிமாஸுடன், “தசரா” இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா புதிய படம்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார். நம்பிக்கைக்குரிய வளரும் இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம், அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா” மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பரவலான பாராட்டையும் பெற்றது. பல மதிப்புமிக்க விருதுகளையும் இயக்குநர் வென்றார். சிரஞ்சீவி உடனான அவரது இந்தத் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா மிகவும் ஸ்பெஷலான இந்த திரைப்படம் குறித்து, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேச்சுரல் ஸ்டார் நானியின் யுனானிமஸ்…
Read More