போலீசாக நடித்த அனுபவம் : நடிகர் நகுல் பேச்சு !

நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, “இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசிகுமார் சார் இன்று வெளியிட்டார். எனது முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார்,அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார்.அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். இந்தப் படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ் . அவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மூன்று…

Read More

‘கட்சி சேரா’ & ‘ஆச கூட’ புகழ் சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

இசையின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர்கள் திரைத்துறையிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார்கள். சாய் அபயங்கர் தனது முதல் முயற்சியான ‘கட்சி சேரா’ மற்றும் ‘ஆச கூட’ ஆகிய சுயாதீன டிரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இப்போது, லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார். ‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட சிறந்த அறிமுகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தத் தருணத்தில் உற்சாகமும் பொறுப்புகளும் எனக்கு அதிகமாகியிருக்கிறது. இந்த சிறப்பான வாய்ப்பை வழங்கிய பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் சார், லோகேஷ்…

Read More

கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் தயாரிப்பில் விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் தொழில்நுட்பத்தில் பாடல் உருவாக்கம்

இந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. யுவன் 360 நிகழ்ச்சி அதன் சமீபத்திய மைல்கல் ஆகும். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் (Ping Records) வாயிலாக ‘ராக்காயி’ என்ற பாடலை வழங்குகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர். தொலைக்காட்சி பிரபலமான கேபிஒய் பாலா மற்றும் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், தேவதர்ஷினியின் மகளான ’96’ திரைப்பட புகழ் நியதி முதன்மை வேடங்களில் இதில் தோன்றுகின்றனர். கலகலப்பான காதல் பாடலான ‘ராக்காயி’ ஏ.கே.…

Read More

“பாகுபலி முதல் கல்கி வரை: இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ்!”

தற்போதைய இந்திய திரை உலகில், மொழி இன எல்லைகளை கடந்து, இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன், தொடர்ச்சியான ப்ளாக்பஸ்டர்களை தந்து இந்தியாவின் ஒரே பான் இந்திய சூப்பர்ஸ்டாரால மலர்ந்திருக்கிறார் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஆரம்பித்த பான் இந்திய ப்ளாக்பஸ்டர் பயணம் இப்போது கல்கி வரை தொடர்கிறது. தெலுங்கில் மட்டுமல்லாது பாலிவுட்டை தாண்டி இந்தியாவெங்கும் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து பெரும் உயரத்தை எட்டியுள்ளது. இந்திய சினிமாவில் மிகச்சில நட்சத்திரங்களே நம் மாநில எல்லைகளை கடந்து, இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தின் மனங்களை கவர்ந்து, இந்திய முழுமைக்குமான நட்சத்திரமாக மாறியுள்ளார்கள். அந்த வகையில் தற்போது பிரபாஸ் பான் இந்திய நட்சத்திரமாக மாறியுள்ளார். பிரபாஸ் ஸ்டைலிஷ் ஆக்சன், மாஸ் லுக், அற்புதமான திறமை மிக்க நடிப்பு மற்றும் வசீகரம் என ரசிகர்கள் கொண்டாடும் அனைத்தும் பிரபாஸிடம் நிறைந்து இருக்கிறது.…

Read More

மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டசாலி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது. ஃபேண்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் அதிர்ஷ்டசாலி திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி & மனோஜ் முல்கி ஆகியோர் பிரமாண்டமாக…

Read More

ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைத் தாண்டி, சாதனைப் படைத்து வருகிறது “ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் !

ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான குறுகிய காலத்தில் ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம், 50 மில்லியன் பார்வையாளர் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கல்ட் கிளாசிக் மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கத்தில், அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸில், சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், மற்றும் பொன்வண்ணன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஒரு பெண் தன் தாயின் இறுதிச் சடங்குகளுக்காக வாரணாசிக்குச் செல்லும் ஒரு பெண்ணின் பயணத்தில் இந்தக்கதை துவங்குகிறது, மர்மங்கள் சூழ்ந்த பழங்கால அடையாள சின்னமான ஐந்தாம் வேதத்தின் மாய சுழலுக்குள் அவள் சிக்குகிறாள்.…

Read More

தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன்…

Read More

“சீதா பயணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

அனைவரும் கொண்டாடி மகிழும், தீபாவளி நன்நாளில், மேலும் இனிமை சேர்க்கும் விதமாக, குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகும், “சீதா பயணம்” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும், அபி மற்றும் சீதா கதாப்பாத்திரங்களை இந்த போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. மகிழ்ச்சியான ஒரு இனிய பயணத்தை உறுதி செய்கிறது, இந்த போஸ்டர். பிரபல நட்சத்திர நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா தயாரித்து, இயக்கும் “சீதா பயணம்” திரைப்படம், இதயம் நெகிழும் தருணங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் அம்சங்களை ஒன்றாக இணைத்து, ஒரு அருமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. முன்னணி பிரபலங்களான சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது, கதைக்கு கூடுதல் ஈர்ப்பைக் கொண்டு வந்துள்ளது.…

Read More

முன்னாள் ராணுவ வீரர் எம்.ஏ.பாலா இயக்கும் படத்தில் டாக்டராக நடிக்கும் யாஷிகா ஆனந்த்

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை தீபாவளி பண்டிகை தினமான நேற்று (அக்டோபர் 31) சென்னையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார். எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார்.…

Read More

‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்துறை நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் அவரது வெற்றிமுகம், திருமணம் ஆகியவை குறித்து இந்த டாக்குமெண்ட்ரி எடுத்துரைக்க இருக்கிறது. அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக இது ப்ரீமியராகிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிர்ந்திடாத நடிகை நயன்தாராவின் இதுவரை கண்டிராத அழகிய பக்கத்தை இந்த டாக்குமெண்ட்ரியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். தங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய நினைப்பவர்களுக்கான உத்வேகமாக இந்த டாக்குமெண்ட்ரி இருக்கும். மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணையாக, அம்மாவாக, தோழியாக, தொழில்துறையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அவரது பல முகங்களை இந்த டாக்குமெண்ட்ரியில் பார்க்கலாம். இந்தியா முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசை…

Read More