‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக்சுப்புராஜ்,’சிறுத்தை’சிவா,பேரரசு,கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,R.V.உதயகுமார்,P.வாசு, இயக்குனர் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி,R.பார்த்திபன் K. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ்,தயாரிப்பாளர்கள் கலைப்புலி.S.தாணு,T.சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நிகழ்ச்சியின் முதலில் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.ரவிக்குமாரின் அழைப்பிற்கிணங்க படத்தின் இரண்டு இயக்குனர்களில் ஒருவரான சூர்யகதிர் அவர்களை இயக்குனர் K.பாக்யராஜ் அறிமுகம் செய்து வைத்தார். இன்னொரு இயக்குனர் கார்த்திகேயன் அவர்களை இயக்குனர் P.வாசு அறிமுகம் செய்து…
Read Moreதிரைத்துறை கனவை நனவாக்க அரிய வாய்ப்பு!
கனவுக் கல்வி ! கட்டணமின்றி! “திரைகள் வழி சமத்துவம் நோக்கி” என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் , இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை- பண்பாடு ஆய்வகம் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து தனித்துவமான, படைப்புலகத்திற்கான பாதையை அறிமுகம் செய்யும் திரைப்படக் கல்வியில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை ( B.Sc., Film studeis) 100% உதவித்தொகையுடன் வழங்குகிறது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் . முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் திரைத்துறை கனவை நனவாக்க அரிய வாய்ப்பு! B.Sc Film Studies (3 year Degree Course) https://iifcinstitute.com/admission/
Read Moreஅடையாரில் மற்றொரு நடனப்பள்ளி துவங்கிய கிகி சாந்தனு
சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் கலையாகவும் திகழ்கிறது. இதனால் நாட்டிய பயிற்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகள் நாட்டிய பயிற்சியைப் பெற பெற்றோர்கள் மனமுவந்து அனுமதி அளிக்கிறார்கள். சிறார்களும், சிறுமிகளும் தங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும், கவன சிதறலிலிருந்து ஒருமுகமான கவனத்தை பெறவும், உத்வேகத்துடன் தொடர்ந்து…
Read Moreகார்த்தி பிறந்தநாளில் நலத்திட்ட பணிகளுக்கு களம் காணும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தமிழகம் முழுக்க 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. முதலாவதாக மே 12 ஆம் தேதி (நேற்று) சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மே-19, மே-26…
Read Moreசீன அனிமேஷன் நகைச்சுவை திரைப்படமான BOONIE BEARS: GUARDIAN CODE
இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் தொடரில் வெளியாகும் ஒன்பதாவது படமிது. இப்படத்தை Lin Yongchang-உம், Shao Heqi-உம் இயக்கியுள்ளனர். இளம் வயது ப்ரையரும் ப்ராம்பளும், கிரிஸ்டல் பீக்ஸ் காட்டில் ஏற்படும் காட்டுத்தீயில் தங்கள் தாயை இழக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரையும் ரோபோட் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக். அங்கே, எதிர்பாராத விதமாகத் தங்கள் தாயைப் பற்றிய செய்தி ஒன்றினைக் கேள்விப்படுகின்றனர். எப்படியாவது தங்கள் தாயைக் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தீர்மானித்து, சார்லோட்டைச் சந்திக்கிறார்கள். அவளுடைய ஆம்பர் கல் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஸ்க்ராப் ரெபல் கும்பலால் சார்லோட் கடத்தப்பட்டபோது, சகோதரர்களான ப்ரையரும் ப்ராம்பளும் விக்குடன் இணைந்து, அவளை மீட்பதற்காக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்தச் சவாலான பயணத்தின் நடுவில், கரடி சகோதரர்களின்…
Read Moreசிவம் பஜே படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக்
‘சிவம் பஜே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்டது! கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிப்பில், அப்சர் இயக்கத்தில் அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் படம் புரொடக்ஷன் 1. இந்தப் படம் ‘சிவம் பஜே’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது, அஸ்வின் பாபு கவனம் ஈர்க்கும் விதத்தில் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில், அஸ்வின் கோபத்தோடு காணப்படுகிறார். அவர் ஒற்றைக் காலில் நின்று கோபத்துடன் ஒரு கையால் ஒரு குண்டர்களைத் தூக்குவதை இதில் பார்க்கலாம். அகோரிகள், திரிசூலங்கள், இருட்டில் காகங்கள் மற்றும் கடவுள் சிலை பின்னணியில் இருப்பதைப் பார்க்கலாம். இவை எல்லாம், படம் தீவிர ஆக்ஷன் ஜானரில் இருக்கும் என்பதை உணர்த்துகிறது. திகங்கனா நாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான்,…
Read Moreஉஸ்தாத் ராம் பொதினேனியின் “டபுள் ஐஸ்மார்ட்” டீசர் தேதி அறிவிப்பு
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது! ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் டபுள் இம்பேக்ட் ரெடி! டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் அட்டகாசமான கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்ன்மெண்ட் டீசர் மே 15 ஆம் தேதி ராமின் பிறந்தநாளன்று வெளியாகிறது. டீசர் அறிவிப்பு போஸ்டரில் ராம் ஒரு பவர் பேக் அவதாரத்தில் இருக்கிறார். டைகர் ஸ்ட்ரிப் சட்டை மற்றும் டோர்ன் ஜீன்ஸ் அணிந்துள்ள ராம் ஒரு கையில் சிகரெட்டையும், மற்றொரு கையில் பட்டாசுகளையும் பிடித்திருக்கிறார். இதில் இருந்து மாஸ் ஆக்ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு இருக்கிறது…
Read More’உயிர் தமிழுக்குப் படத்தைப் பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன்
இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து நேற்று (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்து ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிலையில் தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க…
Read More”நடிகர் மோகனுக்கு “ஹரா” திருப்புமுனை படமாக இருக்கும்” – கே.பாக்யராஜ்
கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஹரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாகக் நடைபெற்றது. ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டு நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் மோகன் தனது கையால் பல ஏழை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் பல ஏழைப் பெண்களுக்குத்…
Read Moreகதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி
ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் பொருத்தமான குரல்கள், பிரத்யேக இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் உடன் சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும் ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் (Regional Story Tellers) குழுமத்தின் தலைவர் AL. வெங்கடாசலம் எனும் வெங்கிக்கு ஊடக வட்டாரங்களில் அறிமுகம் தேவையில்லை. விஜய் தொலைக்காட்சி மற்றும் புது யுகம் தொலைக்காட்சிகளில் தலைவராக இருந்த இவர், சுயாதீன தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தரமான பல நிகழ்ச்சிகளை உருவாக்கியவர் ஆவார். வெங்கியின் பரந்த அனுபவத்தினாலும் சீரிய திறமையினாலும் ரேடியோ ரூம் என்ற புதிய முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்,…
Read More