நிறம் மாறும் உலகில் படத்தில் பாரதிராஜாவுடன் இணையும் நட்டி, சாண்டி, ரியோராஜ்

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை,…

Read More

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபுதேவா பட டைட்டில் “ஜாலியோ ஜிம்கானா”

தமிழ்சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டைட்டில் கொண்ட ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தினை டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- நடிகர் பிரபுதேவா காம்போ இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது! டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தை சிறப்பாக தயாரித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளது. ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ…

Read More

“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

  ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில்… தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக்…

Read More

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

  ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.…

Read More

சென்னை மெட்ரோவை கைப்பற்றி, பயணிகளுக்கு ஆச்சர்ய ஹாரர் விருந்தளித்த, பிரைம் வீடியோவின் தி வில்லேஜ் சீரிஸ் !!

பிரைம் வீடியோ தமிழ் திகில் தொடரான ​​தி வில்லேஜ் சீரிஸை விளம்பரப்படுத்தும் விதமாக , சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஆச்சர்ய ஹாரர் விருந்தளித்தது. இந்நிகழ்வு ஆர்யாவின் தீவிர ரசிகர்கள் மற்றும் திகில் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ பயணிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு ஆச்சரிய நிகழ்வை பிரைம் வீடியோ நடத்தியது. தி வில்லேஜ் சீரிஸில் வரும் ஹாரர் நிகழ்வை, அந்த சீரிஸில் நடித்த நடிகர்களைக் கூட்டி வந்து மெட்ரோ ரெயிலுக்குள் நடத்தி, பயணிகளை எதிர்பாராத ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது தி வில்லேஜ் படக்குழு. இக்குழுவில் தி வில்லேஜ் நாயகன் முன்னணி திரைப்பட நடிகர் ஆர்யா கலந்து கொள்ள பயணிகள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களும் இந்த குழுவில் கலந்துகொண்டார். கிராஃபிக் நாவலின் திகில் அனுபவத்தை…

Read More

இந்தியாவின் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் காலா பிரீமியரில் திரையிடப்பட்ட ‘தி வில்லேஜ்’

தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணனின் ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் ‘தி வில்லேஜ்’. இந்திய அளவிலான ஸ்ட்ரீமிங்கில் இதுவரை கண்டிராத திகில் ஜானரிலான படைப்பை இந்த தொடர் ஆராய்கிறது. ‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான தமிழ் ஒரிஜினல் திகில் இணையத் தொடரில் நடிகர் ஆர்யா முதன் முதலாக அறிமுகமாகிறார். இவருடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ‘ஆடுகளம்’ நரேன், எம். ஜார்ஜ், ‘பூ’ ராம், முத்துக்குமார், கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நவம்பர் 24ஆம் தேதி முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில்‌ ‘தி வில்லேஜ்’ திரையிடப்படவுள்ளது. கோவா -இந்தியா- நவம்பர் 22 2023- இந்தியாவின் மிகவும்…

Read More