அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் என்பதே நோக்கம் ஆகும். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ். வித்தியாசமான…

Read More

தனஞ்ஜெயன் வழங்கும் தமன்குமாரின் “ஒரு நொடி”

  அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் புரடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி…

Read More

ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “தினசரி”

ஸ்ரீகாந்த்- சிந்தியா லெளர் டே ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் ” தினசரி “. மேலும் இதில் எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, இன்னும் பலர் நடிக்கின்றனர். இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் இதற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஜான் பிரிட்டோ கலையையும், சாம் சண்டை பயிற்சியையும், தினேஷ் நடன பயிற்சியையும் , பாலமுருகன்– சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல் படமாக இயக்கி வரும் சங்கர் பாரதி படத்தை பற்றி கூறியதாவது, ” மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன்…

Read More

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபுதேவா பட டைட்டில் “ஜாலியோ ஜிம்கானா”

தமிழ்சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டைட்டில் கொண்ட ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தினை டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- நடிகர் பிரபுதேவா காம்போ இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது! டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தை சிறப்பாக தயாரித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளது. ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ…

Read More

’பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசியதாவது, “படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம்குமார், தயாரிப்பாளருக்கு நன்றி. ஒத்துழைப்புக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. உங்களால்தான் என்னால் நன்றாக பணி செய்ய முடிந்தது. ‘பார்க்கிங்’ போல எங்களது அடுத்தடுத்தப் படங்களையும் வெற்றி பெற வையுங்கள்”. நடிகர் சுரேஷ் பேசியிருப்பதாவது, “இந்தப் படத்தை வெற்றிப் பெற வைத்த உங்களுக்கு நன்றி. வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”. நடிகை பிரார்த்தனா, “இந்தப் படத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு…

Read More

“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

  ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில்… தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக்…

Read More

மீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி

7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிக்க, இயக்குனர் அறிவழகனின் ‘ஆல்பா ஃப்ரேம்ஸ்’ சார்பில் இணைந்து தயாரிக்கும் ஹாரர், திரில்லர் படம் ‘சப்தம்.’ தனது மேக்கிங் மற்றும் கதை சொல்லலில் அனைவரையும் ஈர்த்த, வெற்றிப்பட இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்திற்கு அடுத்து இயக்கி இருக்கும் ஹாரர் திரில்லர் படம் இது. இதில் இயக்குனர் அறிவழகன்,நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். ஈரம் திரைப்படம் முழுவதும் மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. இதில் சிறப்பு பேய் தண்ணீரின் வழி வரும். அதுபோல், சப்தம் திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் இறுதிக்கட்ட காட்சிக்காக ரூபாய்…

Read More

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

  ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.…

Read More

பார்க்கிங் சினிமா விமர்சனம் :

இரு குடித்தனங்கள் வசிக்கும் ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பில் இருக்கும் சிறிய பார்க்கிங் ஏரியாவில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பிரச்சனையால் இரு நல்ல மனிதர்கள் எப்படி மிக மோசமான மிருகங்களைப் போல் மாறுகிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு தவறை உணர்ந்து திருந்தினார்களா..? இல்லை அந்த ஈகோவிற்கு தங்களை பலி கொடுத்தார்களா..? என்பதை விறுவிறுப்புடனும் சுவாரஸ்யத்துடனும் பேசி இருக்கும் திரைப்படம் தான் “பார்க்கிங்”. ஒற்றை மாடி அடுக்கக குடியிருப்பின் கீழ் தளத்தில் 10 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அரசாங்க ஊழியர் இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்). நகராட்சி அலுவலகத்தில் வி.ஏ.ஓ வாக பணிபுரியும் அவர் நேர்மைக்குப் பெயர் போனவர், அதே போல் தனக்கு இருக்கும் ஒற்றை மகளை செல்வ செழிப்புடன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கின்ற கனவிற்காக சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து, பார்த்துப் பார்த்து செலவழித்து,…

Read More