சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ‘மண்டவெட்டி’ படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி. இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு உடல்ரீதியாகவும் மாறி வாழ்ந்திருக்கிறார் கோமலி. மிகுந்த சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல் ரீதியாக கடினமான தருணங்கள் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு அவர் நடித்தார். இந்தக்…
Read MoreAuthor: reporter
தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க வேண்டும் – ’சிலம்பம்’ பட விழாவில் முதல்வர் விஜய்க்கு இயக்குநர் மோகன்.ஜி கோரிக்கை
லக்ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளரான ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்கள். டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் M ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பு செய்ய, கென்னடி நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். பொன்னேரி புயல் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். இணை இயக்குநராக ஏ.அருண்குமார் பணியாற்ற, தயாரிப்பு நிர்வாகியாக கோவிந்தராஜ் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 16 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்ஸி விஜயன், இயக்குநர் பேரரசு, பவர் பாண்டியன், இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் கூல்…
Read Moreஇண்டிபெண்டன்ட் ஆல்பங்களில் நடித்த kCP மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக அறிமுகமாகும் “பூ காய் கனி”
இப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை…. இப்படத்தை *அரும்பு மீசை குறும்பு பார்வை*, *வெண்ணிலா வீடு* ,*விசிறி*, போன்ற படங்களை இயக்கிய. இயக்குனர் *வெற்றிவீரன் மகாலிங்கம்*இயக்குகிறார். இவர் சமீபத்தில் தான் *அயலி* வெப் தொடர் நட்சத்திரங்களுடன் விஜய் டிவி *புகழ் * நடித்த *சூட்கேஸ்* படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது…. மேலும் தற்போது முழுக்க முழுக்க மண்வாசத்துடன் எழுதி இயக்கும் படம் தான் *பூ காய் கனி*. தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும் என்கிறார்…. *சூட்கேஸ்* படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த *ராஜேஸ்வரி வெற்றிவீரன்* அவர்கள் *பூ காய் கனி* படத்தை *பழையனூர் சந்தனம் பட கம்பெனி* சார்பாக தயாரிக்கிறார்…
Read Moreசட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்
கதை… ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெய் நாயகி மீனாட்சியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.. இருவரும் காதலிக்க அவர்களின் திருமணம் சுபமாக முடிகிறது.. இதனையடுத்து தேன் நிலவுக்கு கொடைக்கானல் செல்கின்றனர்.. அங்கு கருடா ராம் நடத்தும் ரிசார்டில் தங்குகின்றனர்.. அதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்கள் உருவாகிறது.. ஒரு பக்கம் இரண்டாம் திருமணத்திற்கு வற்புறுத்துகிறார் மீனாட்சி அப்பா அமைச்சர் அஜய். மறுபக்கம் நண்பரும் இவரை கட்டிக்க ஆசைப்படுகிறார்.. இப்படியான சூழ்நிலையில் மீனாட்சி என்ன செய்தார்.? ஜெய்யுடன் மீண்டும் இணைந்தாரா.? இவர்களுக்கு பிரச்சனை எப்படி உருவானது.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… கிட்டத்தட்ட விஜய்யின் ரசிகராகவே சில இடங்களில் உருவெடுத்து இருக்கிறார் ஜெய்.. சமீபத்தில் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்து இருந்தார். அதன் பிரதிபலிப்பு என்னவோ..?? ஐடி கம்பெனி துள்ளல் இளைஞராக…
Read Moreநாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்
நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார். வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்: * செயற்கைக் கால்கள்: ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. * மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை…
Read Moreஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!
ஜியோஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும். ஜியோஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான ‘உப்பு புளி காரம்’, ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘ரிசார்ட்’ ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது. இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (நடிகர் போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் கலகலப்பும்,…
Read Moreநடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!
விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும் திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம்…
Read Moreஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை
கமல்ஹாசன் அறிக்கையின் சாராம்சம்: என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும். இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும். சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் திரைப்படத்திற்கு முறையாகப் பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி…
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!
நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்! இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் ‘சிறை’…
Read MoreEXAM – வெப் சீரிஸ் விமர்சனம்
கதை… அரசு உயர் பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை வைத்து இந்த எக்ஸாம் என்ற இணைய தொடர் உருவாகியுள்ளது.. ஒரு பகுதியில் உள்ள அரசு பதவிப் பணியில் சேர வருகிறார் அதிதி பாலன்.. வரும் வழியில் அவரை கடத்தி விடுகிறார் துஷாரா விஜயன்.. கடத்தி விட்டு அந்த இடத்திற்கு பணியில் சேர நுழைகிறார்.. அவரை விட்டு இவர் அந்த பணியில் சேர என்ன காரணம்.? இதன் பின்னணியில் நடந்தது என்ன.? அரசு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் என்ன.? அதற்கு சில அதிகாரிகளை உடந்தையாக இருப்பதன் பின்னணி என்ன.? இதனால் திறமையானவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் பாதிக்கப்படுவது ஆகியவைகளை EXAM இணைய தொடர் விவரிக்கிறது.. நடிகர்கள்… துஷாரா விஜயன் – ஜான்சி அதிதி பாலன் – மரமல்லி அப்பாஸ் – ஜெயச்சந்திரன் வசுந்தரா. சி – சரண்யா…
Read More