போட்றா புக்கிங்கை. NGK தெறிக்கும் முன்பதிவு

இந்த வாட்டி சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. தொடர்ந்து தனது படங்கள் பாக்ஸ் ஆபிஸை நொறுக்கத் தவற விட்டதால் இந்தமுறை அடிச்சித் தூக்க வேண்டும் என்ற வேட்கை அவரது வேகத்தில் தெரிகிறது. வேகமென்றால் படத்தின் ட்ரைலர் ப்ரோமோ எல்லாவற்றிலும் சூர்யா அவ்ளோ எனர்ஜியாக இருக்கிறார். செல்வராகவன் சூர்யா சாய்பல்லவி என இக்கூட்டணியே பலே கூட்டணியாக இருப்பதால் கோடம்பாக்கம் தாண்டி உலகம் எங்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. நேற்றே புக்கிங் ஓப்பனாகும் என்று ரசிகர்கள் தவங்கிடந்த நிலையில் இப்போது தான் புக்கிங் ஓப்பனாகியுள்ளது. ரசிகர்களும் வெறித்தனமாக முன்பதிவு செய்து வருகிறார்கள். எப்படியாவது இந்தப்படம் மூலமாக சூர்யா செல்வராகவன் இருவருக்கும் திருப்புமுனை கிடைச்சா சரி. அப்படியே எஸ். ஆர் பிரபுவும் நல்லாருக்கணும். ஆமா அவர் தானே தயாரிப்பாளர்

Read More

கொலைவெறியில் வரும் கொலைகாரன்

எப்படியும் ஹிட்டு கொடுத்தே ஆகணும் என்ற வேட்கையோடு இருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏனென்றால் காளி, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் அவருக்கு சரிவர கை கொடுக்கவில்லை. அதனாலே கொலைகாரனை பெரிதாக நம்பி இருக்கிறார். படத்தின் ட்ரைலர் ஸ்னீக்பீக் எல்லாம் பெரிய அளவில் ரீச் ஆகி இருப்பதால் படம் எப்படியும் ஹிட்டடிக்கும் என்று நம்புகிறார் விஜய் ஆண்டனி. அவரின் நம்பிக்கைக்கு உரமூட்டுவது போல படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பாப்டா தனஞ்செயன் கொத்தாக படத்தை ரேட் பேசி அள்ளிக்கொண்டார். அதனால் கொலைகாரன் எப்படியும் கொலவெறி ஹிட்டடிக்கும் என்பது கன்பார்ம். மேலும் படம் வெளியாகும் நாள் விடுமுறை தினமான ரம்ஜான் என்பதால் வசூலுக்குப் பஞ்சம் இருக்காது என்கிறார்கள். நல்லது நடக்கட்டும்.

Read More

லாரன்ஸ் இடத்தை நோக்கி எஸ்.ஜே சூர்யா

குழந்தைகள் விரும்பும் ஹீரோக்கள் தமிழ்சினிமாவில் மிகவும் குறைவு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என வெகுசிலர் தான் குழந்தைகளை ஈர்த்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் காஞ்சனா சீரிஸ் படங்கள் மூலமாக லாரன்ஸும் இடம் பிடித்து விட்டார். அவரது படங்கள் தொடர்ந்து குழந்தைகளை ஈர்த்து வருகிறது. தற்போது அவர் இடத்தை நோக்கி வருவதற்கான முதல் கல்லைப் போட்டிருக்கிறார் நடிகர் எஸ்.ஜே சூர்யா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல ரீச் ஆகியுள்ளது. எஸ்.ஜே சூர்யாவும், “திரையில் குழந்தைகள் என்னைக் கண்டு மகிழ்வதைப் பார்க்கும் போது உண்மையிலே பெரும் சந்தோஷமாக உள்ளது” என்று கூறி இருக்கிறார். அதனால் இனி அவர் குழந்தைகளை கவரும் விதமான படங்களில் அவ்வப்போது நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஒருவேளை இந்த மான்ஸ்டர் படம் கூட இரண்டாம் பாகம் வந்தாலும் வரலாம். எப்படி…

Read More

எனக்குக் கல்யாணமா? – சிம்பு மறுப்பு!

சிம்புவின் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் பரவிவரும் நிலையில், சில நாள்களாக தனது தாயார் பார்த்துள்ள உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கு சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார் என்று செய்திகள் பரவின. அது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். ‘என்னுடைய பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. ஒருவேளை ஊடகங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள்…

Read More

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!!

திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ  வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக…

Read More

‘களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக களமிறங்கும் ‘பப்ளிக் ஸ்டார்’!

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான். இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ‘களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தனது கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் சில சிறு முதலீட்டு படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், பிறகு…

Read More

ஆர்கே சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கிக் கலக்கும் தமிழ் ,மலையாளப் படம் ‘ கொச்சின் ஷாதி அட் சென்னை 03’

வில்லனாக அறிமுகமாகி கதைநாயகனாக வளர்ந்திருக்கும்  ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கி  இரு மொழிப் படமொன்றில் நடித்திருக்கிறார்.. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .  அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.  படத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது . இப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்கள் 70%  தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன. ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் காதல் லீலைகளின் விளைவு அடுக்கடுக்கான காதல்கள்,  அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஒரு ஏழை மகள் ஷாதி என்கிற ஷாதிகா.  தன் தாயிடம் சென்னைக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்குச் செல்வதாகக் கூறிக் கருவைக் கலைக்கச் செல்கிறாள். போகிற வழியிலும், சென்னை சென்ற…

Read More

கீ – திரை விமர்சனம்

வெகு நாட்களாக கீ இல்லாமல் கிடப்பில் கிடந்த கீ படம்  வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை இந்தக் கீ முன்னாடி கொண்டுவரும் என்று பார்த்தால் பாவம் ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாடி தள்ளி விட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி தனிமனித சுதந்திரத்தை எப்படியெல்லாம் ஆக்கிரமிக்கும் என்பதையும், அந்த தொழிநுட்பத்தை அதிகமாக கத்துக்கிட்டவன் அதை வைத்து என்னவெல்லாம் பண்ணுவான் பண்ணலாம் என்ற பயமுறுத்தலும் தான் இப்படத்தின் கதை. விதை நெல்லாய் இருக்க வேண்டிய கதை உமிகளைப் போல போய்விட்டது. படத்தில் லாஜிக் என்பது ஊறுகாய் அளவிற்கு கூட இல்லை. ஜீவா என்ற நல்ல நடிகர் படத்திற்கு பெரும் எனர்ஜியாக இருந்து மொத்த உழைபையும் கொடுத்திருக்கிறார். ஆனால் இயக்குநர் அவரின் உழைப்பை அநியாயத்திற்கு தன் சொதப்பல் திரைக்கதையால் வீணடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி கதாபாத்திரத்தில் துளி அளவு கூட ஈர்ப்பில்லை. ஆர்.ஜே…

Read More

தணிக்கை குழுவில் ‘U/A’ சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’

சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள். சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கூடுதலாக, அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும்,…

Read More

காவல்துறை கட்டுப்பாட்டு அறை பின்னணியில் நடக்கும் படம் 100!

தனது ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் புதுமையான மற்றும் புதிய விஷயங்களை வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி, தனது திறமையை மற்றும் தனித்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்குமே ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார். சமீபத்தில் அதர்வா முரளி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள “100” படத்தின் டிரைலரில் அவரின் இசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறும்போது, “என் இசையை பற்றி பலர் சொல்லும் நல்ல கருத்துக்களை கேட்க எப்போதுமே நன்றாக இருக்கும், குறிப்பாக எனது பின்னணி இசையை பற்றி. ஆனால் உண்மையில், மிகச்சிறந்த இசையை வழங்கும் அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் படங்கள் எனக்கு அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. “100”…

Read More