கமல்ஹாசன் – வெற்றிமாறன் சந்திப்பு எதற்காக நடைபெற்றது

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப்போவதாக யூகத்தில் வெளியிடப்பட்ட செய்தி உலகம் சுற்றும் வாலிபனாக அனைத்து ஊடகங்களிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப மிகைப்படுத்தப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது ஆனால் வெற்றிமாறன் தரப்பு அப்படியெல்லாம் இல்லை என்று கூறுகிறது

அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்குக் காரணம், மத்திய அரசாங்கத்தால் திரைப்படத்துறைக்கு வரவிருக்கும் ஆபத்து ஒன்றைத் தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து போராடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே கமலஹாசனை வெற்றிமாறன் சந்தித்திருக்கிறார்

கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா துறை சம்பந்தபட்ட தீர்ப்பாயத்தை திரைத்துறையினரின் கருத்துக்கூட கேட்காமல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் கலைத்துவிட்டது சினிமா என்கிற காட்சி ஊடகம் வலிமையானது  சர்வாதிகார, மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சிகளுக்கு எதிராக சினிமா என்கிற காட்சி ஊடகம் இந்தியாவில் வலிமையாக பயன்படுத்தப்பட்டு வெற்றி கிடைத்திருக்கிறது அதனால் தணிக்கை முடிந்து தியேட்டர்கள்,OTT தளங்கள் மூலம் வெளியாகும் திரைப்படங்களை தடுக்கவோ மறுஆய்வுக்கு உட்படுத்தவோ முடியாது அதனால் சூலையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, திரைப்படங்கள்தொடர்பாகப்புதிய
சட்டம் ஒன்றை இயற்றவிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அது சம்பந்தமாக விவாதிக்கவே இயக்குநர் வெற்றிமாறன் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் அதாவது

தற்போதுதணிக்கைச் சான்று பெற்ற பின்பு வெளியாகும் திரைப்படங்கள் மீது விமர்சனம் இருந்தால் சட்டப்படி ஒன்றும் செய்ய இயலாது. இப்போது கொண்டுவரப்படுகிற புதிய சட்டத்தின்படி (சூப்பர் சென்சார்) திரையரங்குகளில் படம் வெளியான பின்பு அப்படத்தின் மீது பலர் சேர்ந்து புகார் கொடுத்தால், அப்படத்தைத் தடை செய்யவும், படத்தை உருவாக்கியவர்களைக் கைது செய்யவும் முடியும் என்கிறார்கள்.

இச்சட்டம் படைப்பாளிகள் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் சட்டம் என்பதால் அறிமுக நிலையிலேயே இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், அதற்காக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கமல்ஹாசனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இத்தகவலைக்கேட்டகமலஹாசன்

இப்படி ஒரு சட்டம் வரவே கூடாது அனைவரும் இணைந்து தடுத்து நிறுத்துவோம் என்று உறுதியளித்திருக்கிறாராம்

இச்சட்டத்திற்கு எதிராக அனைத்து வகைகளிலும் போராடத்தயாராகி வருகிறார் வெற்றிமாறன். அது தொடர்பாக கமல்ஹாசன் மட்டுமின்றி சினிமா, அரசியல் பிரபலங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இயக்குநர் வெற்றிமாறன் தீவிரமாக பணியாற்றி வருகிறாராம்.

Related posts

Leave a Comment