தணிக்கை குழுவில் ‘U/A’ சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’

சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள். சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கூடுதலாக, அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும்,…

Read More

காவல்துறை கட்டுப்பாட்டு அறை பின்னணியில் நடக்கும் படம் 100!

தனது ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் புதுமையான மற்றும் புதிய விஷயங்களை வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி, தனது திறமையை மற்றும் தனித்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்குமே ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார். சமீபத்தில் அதர்வா முரளி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள “100” படத்தின் டிரைலரில் அவரின் இசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறும்போது, “என் இசையை பற்றி பலர் சொல்லும் நல்ல கருத்துக்களை கேட்க எப்போதுமே நன்றாக இருக்கும், குறிப்பாக எனது பின்னணி இசையை பற்றி. ஆனால் உண்மையில், மிகச்சிறந்த இசையை வழங்கும் அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் படங்கள் எனக்கு அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. “100”…

Read More

தனுசு ராசி நேயர்களே படத்தில் சகலரையும் கவரும் பாடல்!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படப்பிடிப்பு தளம் முழுக்க பிரமாண்டம் நிறைந்திருக்கிறது. இந்த படம் அதன் தனித்துவமான தலைப்பினாலும் மற்றும் அழகான நாயகன் ஹரீஷ் கல்யாண் நடிப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை இப்போதே ஏற்படுத்தியுள்ளது. மிகச்சரியான ஒரு முன் திட்டமிடலுடன் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாக கொண்டு மிக பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்து வருகிறார்கள்.  இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, “தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம். இந்த படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன் அடிப்படையில் தான் வாழ்க்கையில் எல்லா…

Read More

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ‘ எனக்கு பெருமைக்குரிய படம் – நடிகர் தினேஷ்.

“அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் முக்கியமானவை “குக்கூ”, “விசாரணை” ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.   குக்கூ மற்றும் விசாரணை படங்களைப் போல சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் “திருடன் போலீஸ்”, ” அண்ணனுக்கு ஜே” என பக்காவான எண்டெர்டெயினிங் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.அந்த வரிசையில்  தற்பொழுது  இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில்  “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.  “குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும்…

Read More

ஹரீஷ் கல்யாண் ஜோடியான ரெபா மோனிகா ஜான்!

நவநாகரீக தோற்றமும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ஒரு சில  நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அம்சம். ரெபா மோனிகா ஜான் இந்த இரு அம்சங்களிலும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக நடிக்கிறார். நிவின் பாலியின் ஜாக்கோபிண்டே ஸ்வர்க்கராஜ்ஜியம் படத்திற்கு பிறகு அவரது புகழ் கேரளா தாண்டியும் பரவலாகி இருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து வரும் ரெபா, தற்போது ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ரியா சக்ரவர்த்தியை சமீபத்தில் அறிவித்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. தயாரிப்பாளர் மலையாளத்தில் நான் நடித்த படங்களை பற்றி அறிந்திருக்கிறார். அதனால் இந்த…

Read More

“ வகிபா “ வண்ணக்கிளி பாரதி ஜாதி ஒரு தனி மனிதனின் வாழ்கையை எப்படி மாற்றுகிறது என்பதை சொல்லும் படம்!

பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி    தயாரித்திருக்கும் படம் “ வகிபா “ இது  வண்ணக்கிளி பாரதி எனும்  பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன்,  கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  –   S.சக்திவேல் இசை   –  முஜிப்ரஹ்மான் வசனம்  – ரா,கண்ணன் பாடல்கள்  –  மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி எடிட்டிங்   –  G.சந்திரகுமார் கலை  –  சாய்மணி நடனம்  – ரமேஷ் சண்டை  – நைப் நரேன் தயாரிப்பு மேற்பார்வை –  சங்கர் நிர்வாக தயாரிப்பு –  ராமு கதை, தயாரிப்பு  –  ஸ்சொப்பன் பிரதான் திரைக்கதை, இயக்கம்  –  இகோர் . இவர்…

Read More

ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR & கௌதம் கார்த்திக்.

இந்த கோடையில் தகிக்கும் வெயில் தான் அனைத்து இடங்களிலும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை தணிக்கும் வகையில் இதமான குளிர்ந்த ஒரு சாரல் மழையாக வந்திருக்கிறது இந்த செய்தி. ஆம், தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது அவர்களின் அவர்களின் அடுத்த பிரமாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பு தான். கே .ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 20’ STR, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. KGF இயக்குனர் பிரஷாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணி புரிந்த நர்த்தன் இந்த படத்தை இயக்குகிறார். தனித்துவமான கதைகளை வணிக அம்சங்களை கலந்து மிகச்சிறப்பாக கொடுக்கும் ஒரு அரிய தயாரிப்பாளர் தான் ஞானவேல் ராஜா. அதனாலேயே, இந்த படத்தில் என்னவெல்லாம்…

Read More

நிதின்சத்யா தயாரிப்பில் முதன்முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு வில்லன் வேடத்தில் நடிக்கும் புதிய படம்!

சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின்சத்யா “ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்திற்காக பல நட்சத்திரங்கள் கைக்கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.  சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர்…

Read More

ராகுல் தேவ், இனியா, முக்தா கோட்சே நடிப்பில் ‘காபி’ !

‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து  இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்குப் படம் ;காபி. ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது,சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை. நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக்…

Read More

இளையதிலகம் பிரபுவின் 225வது திரைப்படம் “காலேஜ் குமார்”!

கன்னட திரையுலகத்திலிருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ். இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்க உள்ளார். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் அக்னிதேவி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள மதுபாலா நடிக்க உள்ளார். இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் நடந்தது.இந்த விழாவில் பிரபு பேசும்போது, ’கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம்“ என்றார். படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் மதுபாலா பேசும்போது ’ரோஜா, அழகன், ஜென்டில்மேன் அப்படின்னு தமிழ் சினிமா எனக்கு நிறைய பேர் வாங்கிக்…

Read More