வருணன் – திரை விமர்சனம்

  சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு முதலாளிகள் ராதாரவி, சரண்ராஜ். இருவருமே தொழிலில் நேர்மையை கடைப்பிடிப்பவர்கள். ஆனால் இவர்களின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தான் இங்கே பிரச்சனை ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ரெகுலராக தண்ணீர் கேன் போடும் வீடுகளில் இன்னொருவர் தண்ணீர் கேன் போட்டால் பிரச்சனை வராமல் இருக்குமா? அடி தடியில் ஒருவரை மற்றவர் காலி பண்ணும் அளவுக்கு போகிறார்கள். இதற்கிடையே குழம்பிய குட்டையில் மீன் பிடித்த கதையாக காவல்துறை அதிகாரி ஜீவா ரவி புகுந்து ஒரு தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார். இதுவே இரு தரப்பினருக்குமான பெரும் பகையாக உருவெடுக்கும் நேரத்தில் இன்னொரு நிறுவனத்தின் முதலாளியான ராதாரவி அதை சரி செய்கிறார். இதை ஏற்றுக் கொள்ள முடியாத சரண்ராஜின் ஆட்கள் ராதாரவியின் ஊழியர்களை கொல்ல திட்டமிடுகிறார்கள்.…

Read More

பெருசு – திரை விமர்சனம்

கிராமங்களில் பெரியவர்களை பெருசு என்றும் அழைப்பதுண்டு அப்படி அழைக்கப்படும் ஒரு பெரியவர் ஒருநாள் காலைப் பொழுதில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உயிர் போய்விடுகிறது. அவரது மகன்கள் சுனில், வைபவ். தந்தையின் எதிர்பாராத மரணத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் அடுத்து ஆக வேண்டிய காரியங்களைபார்க்க முடிவு செய்கிறார்கள். அப்போது தான் மரணம் அடைந்த பெரியவரின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அது வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத அதிர்ச்சி. இதனால், அவரது உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் மரண சம்பவம் தெரிந்து பெரியவரின் தம்பி முனீஷ்காந்த் பதறி அடித்து ஓடி வருகிறார். ஒரு சண்டையில் இரண்டு குடும்பத்துக்கும் ஆகாமல் பேச்சுவார்த்தை நின்று போய் வருடக் கணக்கான நிலையில் இப்போது அண்ணன் மரணச் செய்தி கேட்ட மாத்திரத்தில் பகை மறந்து ஓடோடி வந்திருக்கிறார். வந்ததிலிருந்து…

Read More

ஸ்வீட் ஹார்ட் – திரை விமர்சனம்

சிறு வயதில்தன் தாய் மூலம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். குறிப்பாக திருமண வாழ்க்கை மீது அப்படி ஒரு கசப்பு. ஒரு சூழலில் அவருக்கும் காதல் வருகிறது ஆனால், அவரது காதலி கோபிகா ரமேஷுக்கு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை.இதற்கிடையே நெருக்கமான நேசத்தில் காதலி கர்ப்பம் ஆகிறார். காதலனோ கருவை கலைக்க கட்டாயப்படுத்துகிறார். ஆனால் கோபிகாவுக்கோ குழந்தை பெற்றுக் கொண்டு ரியோ ராஜுடன் சேர்ந்து வாழ விருப்பம். இதனால் இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் முட்டிக் கொள்கிறது. இந்த மோதலில் காதலியின் விருப்பம் நிறைவேறியதா? காதலன் பிடிவாதம் வென்றதா? என்பதை சூடு குறையாத சுவை விருந்தாக பரிமாறி இருக்கிறார்கள். நாயகனாக ரியோ ராஜ். தனக்கான வாழ்க்கை காதலுடன் நெருங்கி வரும் போது…

Read More

ராபர் – திரை விமர்சனம்

வழிப்பறி கொள்ளையர்களால் பறி போகும் உயிர்களுக்கு ரத்தமும் சதையுமாய் நீதி சொல்லும் படம். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்தன. இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அதையே தொழிலாக கொண்டவர்கள் இல்லை என்பதுதான் அப்போது கிடைத்த அதிர்ச்சி செய்தி. வழிப்பறி திருடர்கள் மக்களோடு மக்களாக இருந்ததால் அவர்களை கண்டுபிடிக்க போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இந்தக் கதையிலும் அப்படி ஒரு திருடன் தான் நாயகன். கிராமத்திலிருந்து சென்னை வரும் சத்யா, இங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். மற்றவர்களைப் போல் பெண்களிடம் தாமும் பழக வேண்டுமானால் வேலையில் சம்பாதிக்கிற பணம் மட்டும் போதாது என்ற முடிவுக்கு வரும் அவர், பணிக்கிடையே பார்ட் டைமாக வழிப்பறியையும் தொடர்கிறார். இதே போல் ஐடியில் வேலை செய்து கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் டேனி கூட்டாளியிடம், வழிப்பறி செய்த…

Read More

படவா – திரை விமர்சனம்

ஊருக்கு ஆகாதவன் அந்த ஊருக்கே சிறப்பு சேர்த்த கதை.எக்காரணம் கொண்டும் வேலை செய்யக் கூடாது என்ற முடிவில் இருப்பவர் விமல். வேலை செய்யப் போகிறவர்களையும் தடுத்து விடுவார். சூரியுடன் சேர்ந்து வெட்டியாக ஊர் சுற்றுவது, நள்ளிரவில் பட்டாசு வெடித்து ஊர் மக்களை பீதி ஆக்குவது, கண்ணில் பட்ட பொருட்களை திருடி விற்பது என ஜாலியாக சுற்றித் திரிகிறார். அந்த ஊருக்கே அவரால் தலைவலி. சொந்த அக்கா வீட்டிலேயே ஏமாற்றி பணத்தை ஆட்டை போடுவதால் அக்கா குடும்பமும் அவரைப் பார்த்தால் அலறுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், ஆட்குறைப்பில் அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக, மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார்.விமலை கண்டாலே பயந்து ஓடும்…

Read More

நிறம் மாறும் உலகில் – திரை விமர்சனம்

தனது காதலை அங்கீகரிக்காத அம்மாவுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் தோழியின் ஊருக்கு பயணமாகிறார். ரயிலில் அவரை சந்திக்கும் டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு, லவ்லினிடம் நடந்ததை கேட்டு அறிந்து கொள்கிறார். அப்போது அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். நான்குமே தாயின் பெருமைக்கானது. முதல் கதையில் அம்மா பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதாவாக நட்டி வருகிறார். அவரைப் போட்டுத்தள்ள துடிக்கும் கேரக்டரில் வரும் சுரேஷ் மேனன் தமிழ்நாட்டில் இருந்து ஓடிவந்த கிராமத்து காதல் ஜோடிகளை இதற்கென பயன்படுத்திக் கொள்கிறார். காதலன் கத்தி நட்டியை பதம் பார்த்ததா? காதல் ஜோடிகள் அங்கிருந்து உயிருடன் தப்ப முடிந்ததா? பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, அப்பா கதை இரண்டாவது. (நான்கு…

Read More

கிங்ஸ்டன் – திரை விமர்சனம்

 தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலில் மீன் பிடிக்க தடைவிதிக்கப் பட்டிருக்கிறது. இந்த தடையை மீறி மீன் பிடிக்க சென்றவர்கள்பிணமாக கரை ஒதுங்குவார்கள். இதற்கு இடையே அந்த ஊரின் கன்னிப்பெண்களும் அவ்வப்போது காணாமல் போகிறார்கள். உள்ளூர் தாதா தாமஸிடம் (ஷிபுமோன்) மீனவராக பணியாற்றும் நாயகன் கிங் (ஜி.வி.பிரகாஷ்) இந்த மர்மத்தை கண்டறிய நண்பர்களோடு துணிச்சலாக கடலுக்குள் படகில் பயணப்படுகிறார். அவர் கடல் மர்மத்தை கண்டு பிடித்தாரா? உயிரோடு கரைக்கு திரும்பினாரா? என்பது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை. படத்தின் தொடக்கக் காட்சிகள் வழக்கமான படமாகச் சென்றாலும் தடையை மீறி கடலுக்கு நாயகன் செல்லும்போது படம் வேகம் பிடித்து விடுகிறது. கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களுக்குபடபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் அக்காட்சிகள் ஏற்படுத்தி விடுகின்றன. மேற்கொண்டு நகரும்…

Read More

ஜென்டில் வுமன்- திரை விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லிஜோமோல் ஜோஸை திருமணம் செய்து, தான் பணிபுரியும் சென்னைக்கு அழைத்து வருகிறார் ஹரி கிருஷ்ணன். எல் ஐ சி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் அவர் சென்னையில் ஒரு பிளாட்டில் தனது மனைவி லிஜோ மோலுடன் இனிதான இல்லறம் நடத்துகிறார். மனைவியை தங்கமாக தாங்குகிறார். இனிதான இல்லறம் மூன்று மாதங்களை கடந்த நிலையில் லிஜாவின் தோழியின் தங்கை ஒரு இன்டர்வியூவிற்காக சென்னை வர, கணவரின் அனுமதி பெற்று தனது இல்லத்தில் தங்க வைக்கிறார். இந்நிலையில் லிஜோமோல் கோவிலுக்குச் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்ணிடம் குடிக்க வென்னீர் கேட்கிறார் ஹரிகிருஷ்ணன். அப்போது அந்தப் பெண்ணை தொடர்ந்து ஹரிகிருஷ்ணன் உடன் போகிறார். வென்னீர் போடுவதில் மும்முர மாக இருந்த அந்த பெண்ணுக்கே தெரியாமல் போய் அவள் பின்னால் நிற்கிறார். அப்போது எதிர்பாராமல் ஹரி…

Read More

மர்மர் -திரை விமர்சனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைப் பகுதி தான் இந்த கதையின் நாயகன். அங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் ஏழு கன்னி தெய்வங்கள் இருப்பதாகவும், அவர்கள் பெளணர்மி தினத்தில் அங்கிருக்கும் குளத்தில் நீராட வருவதாகவும், அந்த கன்னி தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் செய்ய வேண்டிய பூஜையை செய்ய விடாமல், அங்கிருக்கும் சூனியக்காரியின் ஆவி தடுப்பதாகவும்அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். அந்த சூனியக்காரி காட்டில் ஆவியாக அலைவதால், அந்த காட்டுக்குள் சென்ற யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை என்பதும் கிராம மக்கள் திகிலுடன் தரும் செய்தியாக இருக்க…இதை கட்டுக்கதை என்று நம்பும் கூட்டமும் இருக்கும் அல்லவா.அந்தப்படியே இது வெறும் கட்டுக்கதை என்பதை நிரூபிக்க அந்த காட்டுக்குள் சென்று ஆவணப்படம் எடுக்க முடிவு செய்கிறது இரண்டு ஆண் இரண்டு பெண் அடங்கிய ஒரு இளைஞர் கூட்டம். இதற்காக அந்த காட்டுப் பகுதியில் உள்ள…

Read More

எமகாதகி – திரை விமர்சனம்

பாசமிகு அப்பா, கனிவு காட்டும் அம்மா, அண்ணன், அண்ணி என்று சின்ன குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறார் ரூபா குடவையூர்.ஆஸ்துமா பேஷண்டான அவர் ஒருநாள் தனது அப்பா கோபத்தில் கன்னத்தில் அறைந்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கில் தொங்கிவிடுகிறார்.ரூபா தற்கொலை செய்து கொண்டார் என்பது வெளியே தெரிந்தால் ஊரார் பலவிதமாக கதை கட்டுவார்கள் என பயந்த குடும்பத்தார், அவருக்கு ஏற்கனவே இருந்த ஆஸ்துமா பிரச்சனையால் இறந்தவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல தயாராகும் போது தான் பிரச்சனை ஆரம்பம். தூக்க முடியாத அளவுக்கு சடலம் கனமாக இருக்க, சடலத்தை தூக்க முயன்றவர்கள் சடலத்தில் ஏற்பட்ட திடீர் அசைவுக்கு பயந்து அலறி அடித்து வெளியே ஓடி வருகிறார்கள்.மீண்டும் சடலத்தை தூக்க இப்போது முன்பை விடவும் அதிகம் பேர் வருகிறார்கள்.…

Read More