குடும்பஸ்தன் – திரை விமர்சனம்

நாயகன் மணிகண்டனும் நாயகி ஷான்வியும் காதலர்கள். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப, ஒரு கட்டத்தில் காதல் ஜோடிகள் ஓடிப்போய் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சம்பாதிக்கும் மகனை பகைத்துக் கொள்ள விரும்பாத நாயகனின் பெற்றோர் ஒரு வழியாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும் தங்கள் வீட்டில் இருக்கும் மருமகளை நாசூக்காக அவ்வப்போதுமாமியார் இடித்துரைப்பதும் நடக்கிறது. திருமணம் ஆகி குடும்பஸ்தன் ஆகிவிட்டபோதிலும் பெற்றோரையும் கவனிக்கும் நிலையில் இருக்கிறார் மணிகண்டன். அப்பாவுக்கு பழைய வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. அம்மாவுக்குa ஆன்மீக டூர் போக வேண்டும். இது போக திருமணமாகிவிட்ட அக்காவுக்கும் சில தேவைகள். இதனால் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார் மணிகண்டன். மகிழ்ச்சியான இல் வாழ்க்கையில் கர்ப்பமாகிறாள் மனைவி. இப்போது…

Read More

வல்லான் – திரை விமர்சனம்

இளம் தொழிலதிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொலை வழக்கில் விசாரணை செய்யும் அதிகாரிகளால் எந்தவித துப்பும் துலங்காமல் போன நிலையில், ஏற்கனவே சஸ்பெண்டாகி இருக்கும் சுந்தர் சி. யிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார் போலீஸ் கமிஷனர். பணியில் இல்லாத நிலையிலும் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு துப்புதுலக்க புறப்படுகிறார் சுந்தர் சி. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஒப்புக்கொண்ட பின்னணியில் அவரது தனிப்பட்ட இழப்பு ஒன்றும் இணைந்திருப்பதால் தனது அதி வேக விசாரணையை தொடங்குகிறார். இதற்கிடையே கொலையானவரின் கைவசம் இருந்த ஏதோ ஒன்றுக்காக அரசியல்வாதிகளும் போலீஸ் அதிகாரிகளும் சுந்தர் சி.யின் ஒவ்வொரு ஆட்டத்தையும் கலை த்துப் போடுகிறார்கள். இதையெல்லாம் மீறி சதிகளை தகர்த்து தடைகளை உடைத்து கொலையாளியை நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது திகு திகு திரைக்களம். ஆரம்பம் முதல் முடிவு…

Read More

பாட்டல் ராதா – திரை விமர்சனம்

மதுவின் கேடுகளை ஆணி அடித்து சொல்லியிருக்கும் படம்.மதுப்பழக்கம் தனி மனிதனின் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது மட்டுமின்றி அவன் குடும்பத்தின் நிம்மதியையும் எப்படி சீர் குலைக்கிறது என்பதை தெளிவான பார்வையோடு சொல்லி இருக்கிறார்கள். கட்டுமான தொழிலாளர் குரு சோமசுந்தரம் அந்த தொழில் நுணுக்கங்களில் தேர்ந்தவர். இதனால் அந்த துறையில் வளர்ந்து வரும் அவருக்கு அழகான மனைவி, அன்பான ஆண் பெண் குழந்தைகள் என நல்லதோர் குடும்பம் அமைகிறது. வாழ்க்கை சக்கரம் நிம்மதியாக சூழலும் நேரத்தில் பேரிடியாக அந்த குடும்பத்துக்கு அமைகிறது நாயகனின் திடீர் குடிப்பழக்கம். இதனால் அந்த குடும்பத்தின் நிம்மதி படிப்படியாக குலைகிறது. குடி நோயாளியாகவே மாறிவிட்டதால் நாயகனின் உடலும் சீர்கெடுகிறது. மதுவின் கோரப்படியில் இருந்து இனி கணவரை மீட்க முடியாது என்று எண்ணும் மனைவி இப்போது ஒரு அதிரடி முடிவெடுக்கிறாள். அந்த முடிவால் கணவன் குடி…

Read More

பூர்வீகம் – திரை விமர்சனம்

குடும்ப பின்னணியில் விவசாயத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.அந்த கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது தாத்தா, அப்பாவை போல அல்லாமல் மகன் கதிரை பட்டணத்தில் மேற்படிப்பு படிப்பு படிக்க வைக்கிறார். அதற்காக தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியை விற்கிறார். படித்து முடித்ததும் அரசாங்க வேலை. அதைத் தொடர்ந்து பணக்கார குடும்பத்தில் மணப்பெண் என்று அமைய, போஸ் வெங்கட்டின் சந்தோசம் கூடிப் போகிறது. இதன் பிறகு தான் பிரச்சனை. பங்களா வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கு கணவன் இருக்கும் பட்டணத்து வீடு சின்னதாய் தெரிய, பெரிய வீடு வாங்கினால் தான் கணவருடன் இருப்பேன் என்று கண்டிஷன் போடுகிறாள். இது தெரிந்த போஸ் வெங்கட், மகனின் சந்தோஷத்துக்காக மேலும் சில வயல் களை விற்று பணம் அனுப்புகிறார். இப்பொழுது புது வீடு அமைந்த மகிழ்ச்சியில் பேரனும்…

Read More

நேசிப்பாயா – திரை விமர்சனம்

வெறுத்து ஒதுக்கிய நாயகி இப்போது வெளிநாட்டில் நல்ல வேலையில். புதிய வாழ்க்கைக்குள் அவள் பழசை அடியோடு மறந்திட்ட நேரத்தில் அவளுக்கு கிடைக்கிறது கொலைகாரி பட்டம். வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி மகனையே அவள் கொன்றதாக குற்றச்சாட்டு. அதுவும் போதிய சான்றுகளுடன். சட்டத்துக்கு இது போதாதா? கைதாகிறாள். கொடும் சிறைவாசம். முன்னாள் காதலியை கொலையாளியாக தொலைக்காட்சியில் பார்த்த நாயகன், காதலியை மீட்க அந்த நாட்டுக்கே போகிறான். கொலைப் பழியில் இருந்து அவளை மீட்க முடிந்ததா? முன்னாள் காதலி அவன் வருகையை எப்படி எடுத்துக்கொண்டாள்? என்பது பரபரப்பான திரைக்கதை. காதலுடனே தொடங்குகிறது, கதை. பார்த்த மாத்திரத்தில் காதல் சொல்லும் இளைஞனை தவிர்க்கப் பார்க்கிறார் அந்தப் பெண். ஒரு கட்டத்தில் அந்த காதலை ஏற்றுக் கொள்பவர், போகப் போக தனது முன்னேற்றத்திற்கு தடையாக காதலனின் நடவடிக்கைகள் இருப்பதாக நினைக்கிறாள் நாயகி, அந்தக்…

Read More

காதலிக்க நேரமில்லை – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதுசாக சொல்லப்பட்டிருக்கும் கதை. செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணை புதிய கோணத்தில் நம்மை அணுக வைத்திருக்கும் படம். பெங்களூருவில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணிபுரிகிறான் சித்தார்த்..அவனது காதலி பானு. இவர்களின் காதல் வெறும் வீட்டு பெற்றோரின் அங்கீகாரம் பெற்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், திருமணதுக்குப் பின் குழந்தை அவசியமில்லை என்கிறான், சித்தார்த். இது பானுவுக்கு பிடிக்காமல் போக, நிச்சயதார்த்த தினத்தன்று வராமல் இருந்து விடுகிறாள். இதை தனக்கு நேர்ந்த பெரிய அவமானமாக கருதும் சித்தார்த், காதலியுடனான ரிலேஷன்ஷிப்பை முறிக்கிறான். இந்நிலையில் தன் நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்க விந்து தானம் செய்கிறான் சித்தார்த். இன்னொரு பக்கம் பதிவுத் திருமணம் செய்து கொண்ட தனது கணவரை இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக பார்த்த ஸ்ரேயா கணவனை அடியோடு தலை முழுகுகிறாள். இதற்கிடையே குழந்தை மீதான…

Read More

கேம் சேஞ்சர் – திரை விமர்சனம்

மாநில முதல்வருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் இடையே ‘நீயா… நானா’ போட்டி வந்தால் அதுதான் இந்த கேம் சேஞ்சர். ஆந்திர முதல்வர் ஸ்ரீ காந்த்துக்கு ஜெயராம், எஸ் ஜே சூர்யா என இரு மகன்கள். மகன்கள் இருவருக்குமே அப்பாவின் முதல்வர் நாற்காலி மீது ஒரு கண். இதற்கிடையே விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்கும் ராம் சரண் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் முதலமைச்சர் கனவில் இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறார்.இதில் உச்சக்கட்டமாக முதல்வர் பங்கேற்கும் விழா ஒன்றின் பாதுகாப்பு பணிக்கு ராம்சரண் மீது கை நீட்டி விடுகிறார் எஸ். ஜே.சூர்யா. பதிலுக்கு ராம் சரணும் கை நீட்ட, தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில் கலெக்டர் சஸ்பெண்ட் ஆகிறார்.எஸ்.ஜே. சூர்யாவுக்கு மந்திரி பதவி பறி போகிறது. தந்தையே தன்னை பதவி நீக்கம் செய்ததை தாங்க முடியாத எஸ்…

Read More

 வணங்கான்  – திரை விமர்சனம்

பேசும் திறனும்  கேட்கும் திறனுமற்ற கோட்டிக்கு  தனது தங்கை தான் உலகம். கன்னியாகுமரியில் கிடைத்த வேலையை  செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் கோட்டி தன் பார்வையில் முறைகேடாக எது நடந்தாலும் அதை தட்டிக் கேட்பவன். கை கால்களை உடைக்கவும் தயங்க மாட்டான். அவனது இந்த முரட்டுத்தனம்  மாற நிரந்தரமாக ஒரு வேலை இருந்தால் நல்லது என்று முடிவு செய்யும் அவனது நலம் விரும்பிகள் மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுக்கிறார்கள். அங்கே நடக்கும் ஒரு விபரீத சம்பவம் அவன் காதுக்கு வரும்போது அவன் எடுக்கும் விஸ்வரூபமே மீதிக்கதை. கோட்டியாக அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் வருத்தி தன்னை நிறுத்தி இருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அந்தக் கோட்டி கேரக்டரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீஸ் நிலையத்தில் இருக்கும் அண்ணனிடம் என்ன…

Read More

மெட்ராஸ் காரன்- திரை விமர்சனம்

விடிந்தால் கல்யாணம். ஆனால் முந்தின இரவு மாப்பிள்ளை ஒரு கொலை குற்றத்தில் மாட்டிக்கொண்டால்… சென்னையில் நல்ல உத்தியோகத்தில் இருக்கும் நாயகன் தனது காதல் திருமணத்தை புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த விரும்புகிறான் அதற்கான வேலைகள் நடந்து விடிந்தால் கல்யாணம் என்கிற சூழலில், ஹோட்டலில் தங்கி இருக்கும் தனது நாளைய மனைவி அழைப்பின் பேரில் அங்கே காரில் போகிறான். போகும் வழியில் நாயகனின் கார் ஒரு கர்ப்பிணி பெண்ணின் மீது மோத, அதனால் அந்த ஊர் மக்களின் ஆவேசம், போலீசில் புகார் என்று அந்த ராத்திரி நாயகனின் வாழ்வை ரணகளமாக்க… திருமணம் நடந்ததா அல்லது அந்த பிரச்சனை நாயகனை ஜெயிலுக்கு அனுப்பியதா? என்பது விறுவிறுப்பான அதே நேரம் எதிர்பார்ப்புக்குரிய திரைக்களம். மலையாளத் திரை உலகில் புகழ் பெற்ற நாயகனாக வழங்கும் ஷேன் நிகம்…

Read More

ஐடென்டிட்டி – திரை விமர்சனம்

ஒரு கொலையில் தொடங்கி முடிவு வரை விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதை இந்த படத்தின் முதல் பலம். ஜவுளிக் கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து பணம் பார்க்கும் ஒருவன் கொல்லப்படுகிறான். அப்படியே உடம்பை எரித்தும் விடுகிறான் இந்தக் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சி திரிஷா. அவர் மூலம் கொலையாளியை கண்டு பிடிக்க முடிவு செய்யும் போலீஸ் அதிகாரி வினய், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து அப்படியே வரையும் ஆற்றல் பெற்ற டொமினோ தாமசின் உதவியை நாடுகிறார். திரிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து முகத்தோற்றத்தை வரையும் டொவினோ தாமஸ் வரைந்திருப்பது அவர் படத்தையே. இந்தக் கொலையை நேரில் பார்த்த சில நாட்களுக்கு முன்பு தான் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு காப்பாற்றப்படுகிறார் திரிஷா. இதன் பிறகு அவரது ஊகித்தறியும் ஆற்றல் சற்று தாமதப்படுகிறது. இந்த…

Read More