நடிகை வனிதா விஜயகுமார் இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் படம் இது . பாங்காக் பின்னணியில் அலைக்கும் சொல்லப்பட்ட கதைக்களம் எந்த மாதிரியானது என்பதை பார்ப்போம். கதைப்படி ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்து கொள்கிறார். இதில் ராபர்ட் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார். ஆரம்பத்தில் வனிதாவும் ஏறக்குறைய அந்த முடிவில் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை என்றால் வாழ்வதே வேஸ்ட் என்று தோழிகள் சிலர் வனிதாவை தூண்டி விட, இதனால் 40 வயதில் தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் வனிதா. இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் நேரத்தில் வயிற்றில் கரு தங்குகிறது. அதை கணவரிடம் சொல்ல முடியாத சூழலில் பாங்காக்கில் இருந்து தன் சொந்த ஊரான சித்தூர் வந்து விடுகிறார்.…
Read MoreCategory: விமர்சனம்
மாயக்கூத்து – திரை விமர்சனம்
மானிட ஜாதியில் நான் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று ஒரு பாடலில் எழுதி இருப்பார் கவிஞர் கண்ணதாசன். பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருக்கும் வாசன் என்ற முன்னணி எழுத்தாளரும் படைப்பாளி என்பதால் தன்னை இறைவனாக எண்ணிக் கொள்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் எழுதும் கதையில் பாதிக்கப்படும் கதாபாத்திரங்கள் அவரை தேடி வந்து இம்சை செய்கின்றன. தங்களது சிக்கல்களுக்கெல்லாம் படைத்தவன் தான் காரணம் என எண்ணி கோபத்தில் அவரை துரத்துகின்றன. அந்த கதாபாத்திரங்களிடம் இருந்து எழுத்தாளர் எப்படித் தப்பிக்கிறார் என்பது தான் கதைக்களம். சமூகத்தை தங்கள் எழுத்தால் மேம்படுத்துவதில் எழுத்தாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இங்கே நமது படைப்பாளியோ தனது கதாபாத்திரங்களுக்கு சுமுகமான தீர்வளிக்க தவறிவிடுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த கதாபாத்திரங்கள் கதையின் போக்கை மாற்றி தங்களுக்கு நல்லதோர் தீர்வை…
Read Moreப்ரீடம் – திரை விமர்சனம்
95 காலகட்டத்தில் வேலூர் சிறையில் இருந்து தப்பித்த இலங்கை அகதிகளின் போராட்டமே கதைக்களம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அங்கிருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்து அகதி முகாமில் தங்கினால் அங்கும் நிம்மதியற்ற வாழ்க்கை. இப்படி இலங்கையில் இருந்து வந்த ஒரு கும்பலில் கர்ப்பிணி யாக இருக்கும் மனைவி வந்துவிட, அவளை தேடி கணவனும் வருகிறார். இந்த சமயத்தில் முன்னாள் பாரத பிரதமரை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்த தீவிரவாத இயக்கத்தை கண்டுபிடிக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது. அதில் ஒன்று, கடந்த ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரணை நடத்துவது. இந்த விசாரணை வளையத்தில் மனைவியை தேடி தமிழகம் வந்த சசிகுமாரும் சிக்கிக் கொள்கிறார். போலீசார் சசி உள்ளிட்டவர்களை வேலூர் சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து கொடுமைப் படுத்துகிறார்கள். .…
Read Moreஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் – திரை விமர்சனம்
32 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீபன் பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் திரைப்படம் டைனோசர் மீதான பிரமிப்பை ரசி கனுக்குள் விதைத்தது. தொடர்ச்சியாக இதே பின்னணியில் வந்த டைனோசர்கள் கதையில் இது ஏழாவது பாகம். இந்த கதைப்படி நிகழ்காலத்தில் பூமியின் சுற்றுச்சூழல் டைனோசர்களுக்கு ஏற்ற விதத்தில் இல்லாமல் போக, தற்போதுள்ள டைனோசர்கள் கடலிலும் அடர்ந்த காடுகளை கொண்ட தீவுகளிலும் வாழத் தொடங்கி விட்டன. இதில் இன்னொரு ஆச்சரியமாக பறக்கும் டைனோசர்களும் உண்டு. மூன்று வகைகளிலும் அபாயம் இந்தப் பறக்கும் டைனோசர் தான். ஓங்கு தாங்கான அதன் உயரம், பயமுறுத்தும் தோற்றம், அதன் பார்வையில் சிக்கி விட்டால் அடுத்த கணமே அதன் வாய்க்குள் சமாதி தான். இப்படி உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலும் அதைத் தேடி பயணப்படுகிறது ஒரு குழு. தீவுகளுக்குள் இருக்கும் டைனோசர்களின் டி…
Read Moreபீனிக்ஸ் – திரை விமர்சனம்
சென்னையில் எம். எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக கைதாகிறார் சூர்யா சேதுபதி. கொலை செய்யப்பட்டவர் எம். எல்.ஏ. என்பதால் அந்த ஏரியாவே கொந்தளிப்பாக இருக்கிறது. நீதிமன்ற காவலில் இருக்கும் சூர்யா சேதுபதியை கொல்ல எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்ஷ்மி சரத்குமார், தனது அடியாட்களை சிறைக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் சூர்யாவோ அத்தனை பேரையும் அடித்து துவைத்து அனுப்பி வைக்கிறார். யார் இந்த சூர்யா.? இவர் எதற்காக எம் எல் ஏ-வை கொன்றார்? கேள்விக்கு விடை அதிரடி மேளாவுடன் கூடிய கிளைமாக்ஸ். தனது முதல் படத்திலேயே அதிரடி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் சூர்யா சேதுபதி. நடிப்பில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்து விடுவார் என்று நம்புவோம் வரலக்ஷ்மி சரத்குமார், முத்துக்குமார், ஹரீஷ் உத்தமன், சம்பத், அபி நக்ஷத்ரா,…
Read Moreபறந்து போ – திரை விமர்சனம்
இன்றைய குழந்தைகளின் உலகம் பெரும்பாலான பெற்றோரின் கணிப்புக்கு அப்பாற்பட்டது.குழந்தைகளுக்கான நேரம் ஒதுக்கி அவர்களிடம் நட்பு பாராட்டினால் மட்டுமே அவர்களின் அந்த பருவத்து எண்ணங்களை புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை கொஞ்சம் எமோஷனல், அதிக காமெடியுடன் சொல்லியிருப்பதே இந்த பறந்து போ. மிர்ச்சி சிவா-கிரேஸ் ஆண்டனி தம்பதிகள் தங்கள் ஒரே மகன் விஷயத்தில் பெரிய கனவுடன் இருக்கிறார்கள். இதனால்குடும்பத்தின் அதிகபட்ச தேவைக்காக கணவர் சென்னையிலும் மனைவி கோவையிலுமாக வேலை, தொழில் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். மகன் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவன் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அந்த பிஞ்சு நெஞ்சின் விருப்பமோ அவர்கள் எதிர்பாராத கோணத்தில் இருக்கிறது. அதை மகனுடனான பைக் டூரில் அறிந்து கொள்ளும் அப்பா அதன் பிறகு என்ன முடிவு…
Read More3 பி எச். கே – திரை விமர்சனம்
ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் வீடு வாங்கும் கனவு நனவு ஆனதா என்பதே படம். மனைவி, மகன், மகள் என்று அளவான குடும்பம் வாசுதேவனுடையது. வாடகை வீடு, மகன் மகள் படிப்பு என்று வாங்கும் சம்பளம் போதாத நிலையிலும் சொந்தமாய் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது வாசுதேவனின் லட்சியமாக இருக்கிறது. அதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். இதற்கிடையே குறைந்தபட்ச மார்க்கில் பாசான மகனை இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க பெரும்பகுதி பணம் போகிறது. மறுபடி கொஞ்சம் பணம் சேர்ந்தபோது மகள் திருமணம் நிச்சயம் ஆகிறது. கணிசமான கையிருப்பை அது காலி செய்கிறது. இதற்கிடையே வாசுதேவனுக்கு மாரடைப்பு வந்து கட்டாய இதய ஆபரேஷன். இப்படி பணம் சேரச் சேர, செலவுகளும் அதற்கேற்ப வந்து சேர்ந்து கொள்ள, மேலும் சோதனையாக இன்ஜினியரிங் படிப்பில் கோட்டை விட்டு வந்து கண்ணீர்…
Read Moreஅர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்பது மகிழ்ச்சி!! -இயக்குனர் ஷெரிப்
தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண், தற்போது தயாரிப்பாளராக தனது முதல் படமான ‘காந்தி கண்ணாடி’ மூலம் புதிய பயணத்தை தொடங்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியதாவது, “காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாக கேட்டவுடனே என் நெஞ்சை தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும்…
Read Moreகண்ணப்பா – திரை விமர்சனம்
சிறு வயது முதலே தெய்வ நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன். அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றனர். அங்குள்ள மலையில் இருக்கும் வாயு லிங்கத்தை கவர்ந்து செல்ல, காளமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் திண்ணனின் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட சிக்கலில் திண்ணனை ஊரை விட்டுத் தள்ளி வைக்கிறார், தலைவரும் அவனது தந்தையுமான நாகநாதன்.திண்ணன் பட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நேரத்தில் காளமுகி தலைவன் வாயு லிங்கத்தை கைப்பற்ற பெரும்படையுடன் வருகிறான். இந்த வீர தீர போரில் நாகநாதன் வீர மரணம் அடைகிறார்.இதன் பிறகு தந்தையை கொன்ற காள முகியை திண்ணன் எப்படி அழித்தார்? நாத்திகராக இருந்த அவர், எப்படி சிவபக்தராக மாறினார் என்பது பரபரப்புக்கு குறைவில்லாத கதைக்களம். 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப…
Read Moreமார்கன் – திரை விமர்சனம்
க்ரைம் ஃபார்முலா கதைகள் எப்போதுமே சரியான விதத்தில் சொல்லப்பட்டால் வெற்றி நிச்சயம். ஒரு ஊசி போட்டால் உடல் கறுப்பாகி இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை கண்டு பிடித்த வில்லன், அதை பழி வாங்க பயன்படுத்துகிறார். இந்த விஷ ஊசியால் உயிர் இழக்கும் ரம்யாவின் கொலையில் இருந்து படம் தொடங்குகிறது. தனது மகள் கொல்லப்பட்ட சாயலிலேயே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் கொலை வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி. அவரால் கொலையாளியை நெருங்க முடிந்ததா? . அந்த கொடூர கொலையாளி யார்? என்பதை புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார்கள். கொலைகாரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா பாத்திரத்தில் கனிமொழி நடிப்பு மிகவும் சிறப்பு. விசாரணைக்கு உதவும் காவல்துறை அதிகாரிகளாக மகாநதி சங்கர், பிரிகிடா, SDAT ஊழியராக வரும் அம்ஜத் கான் பொருத்தமான…
Read More