அகத்தியா – திரை விமர்சனம்

சித்த மருத்துவத்தின் சிறப்பை ஒரு திகில் கதை வழியே நம்முள் கடத்திருக்கிறார்கள். கதை சொன்ன விதத்தில் படம் ரசிகனுக்கு புதிய அனுபவம் ஆகி விடுகிறது. அதாவது இனிய அனுபவம். சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ரூ.6 லட்சம் செலவழித்து அரண்மனை செட் போடுகிறார். செட் வேலை முடிந்த நிலையில் அந்தப் படம் ட்ராப் ஆகிவிட, செட்டுக்காக போட்ட பணத்தை திரும்ப எடுக்க அந்த செட்டை திகில் பங்களா வடிவில் மாற்றியமைத்து அதில் பார்வையாளர்கள் மூலம் வசூல் செய்கிறார்கள். கூடவே பிரச்சனையும் வந்து சேர்கிறது. அந்த அரண்மனை செட்டிற்குள் உள்ளே சென்ற காதல் ஜோடி ஒன்றில் காதலன் மாயமாகி விட, செட்டை இழுத்து மூடுகிறது அரசாங்கம்.ஏற்கனவே குணப்படுத்த முடியாத நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாயை நினைத்து கவலையாக இருக்கும் ஜீவா…

Read More

சுழல்-2 இணையத்தொடர் விமர்சனம்

முதல் பாகத்தின் தொடர்ச்சி தான் இரண்டாம் பாகம் என்றாலும், முதல் பாகத்தை விட இதில் காட்சி அமைப்புகள் இன்னும் மிரட்டலாக அமைந்திருப்பது சிறப்பு. முதல் பாகத்தில் சொந்த சித்தப்பாவாலேயே பாலியல் பலவந்தம் பண்ணப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், துப்பாக்கியால் சுட்டு சித்தப்பாவை சாகடிக்கிறார். அதற்காக கைதாகி ஜெயிலில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்காக வாதாடுகிறார், பிரபல வழக்கறிஞர் லால். கிட்டத்தட்ட வழக்கு வெற்றி பெறும் நிலையில் நான் அவரது கடற்கரை பங்களாவில் பிணமாக கிடக்கிறார், அதுவும் தலையை தோட்டா துளைத்த நிலையில். வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் கதிரிடம் ஒப்படைக்கும் டி.ஐ.ஜி. அந்த ஏரியா காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து செயல்பட உத்தரவிடுகிறார். ஆய்வாளர் சரவணன் அது தற்கொலை தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் அது கொலை என்பதற்கு ஆதாரமாக லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில்…

Read More

ட்ராகன் – திரை விமர்சனம்

ப்ளஸ் டூ வில் 96 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற ராகவன் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கிறார். அங்கே படிப்பை ஒதுக்கி வைத்து விட்டு கெத்து காட்டுவதில் மட்டும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார். இதனால் நான்காம் ஆண்டு கல்லூரி முடிக்கும் காலகட்டத்தில் 48 அரியஸ் வைத்து வெளியேறுகிறார். இந்தக் கல்லூரியில் அவர் சம்பாதித்தஒன்று காதல். நாயகன் மீது உயிரையே வைத்திருக்கிறார் காதலி அனுபமா பரமேஸ்வரன்.. கல்லூரியில் இருந்து விடைபெற்ற நேரத்தில் காதலி அவனை சந்திக்கிறாள். பெற்றோர் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாக கலக்கத்துடன் கூறுகிறாள். ஆனால் அதை சட்டை செய்யாத நாயகன் வார்த்தைகளால் காதலியை காயப்படுத்துகிறான். பதிலுக்கு காதலியும், ‘உனக்கு படிப்பும் இல்லை. வேலையும் இல்லை. வருங்கால கணவருக்கு மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க துப்பில்லாத உன்னைப் பற்றி…

Read More

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -திரை விமர்சனம்

காதல் தோல்வியால் திருமணத்தை தவிர்க்கும் பிரபுவை (பவிஷ் நாராயண் ) வற்புறுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே போன பிறகுதான் அவர்கள் பார்க்கப் போன பெண் அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வாரியர்) என்று தெரிய வருகிறது. இருவரும் பேசும்போது தோற்றுப்போன தன் முதல் காதலை பற்றி பகிர்ந்து கொள்கிறான் பவிஷ். அதைக் கேட்டு முடித்ததும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்ச நாட்கள் எடுத்துக் கொள்வோம். அதன் பிறகு திருமண பேச்சுக்கு வரலாம் என்கிறார் பள்ளிக்கால தோழி. இதேநேரத்தில் அடுத்த கட்ட அதிர்ச்சியாக முன்னாள் காதலி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்தன்) கல்யாண பத்திரிகை வர, நீ போய் உன் பழைய காதலியை பார்த்து விட்டு வா என்கிறாள் தோழி. நண்பனுடன் நிலா திருமணத்திற்கு செல்லும் பிரபுவுக்கு அங்கே…

Read More

ராமம் ராகவம்- திரை விமர்சனம்

நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி. அவரது ஒரே மகன் தனராஜ் அப்பாவுக்கு நேர் எதிர். சிறு வயதில் இருந்தே சிகரெட் , சூதாட்டம், மது என்று எல்லா கெட்ட பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள, படிப்பு அவரிடமிருந்து விடைபெற்று போய் விடுகிறது. மகனின் இந்த செயல்களுக்காக அவனை வெறுத்தாலும் உள்ளூர மகன் திருந்தி விட மாட்டானா என்ற நப்பாசை அப்பாவுக்கு. மகனோ திருந்துவதாக இல்லை. வேலைக்குப் போகும் இடங்களிலும் போர்ஜரி செய்து மாட்டிக்கொண்டு அப்பாவுக்கு தலைவலி தர… ஒரு கட்டத்தில் அப்பாவே மகனை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார். தன் எதிர்கால சந்தோஷங்களுக்கு முட்டுக்கட்டை போடும் இந்த அப்பாவை இனி கொன்றால் தான் ஆயிற்று என்று முடிவெடுக்கிறான் மகன். அதற்காக தனக்குத் தெரிந்த லாரி டிரைவர் ஒருவரையும் ஏற்பாடு செய்கிறான்.ஆனால் மகனின் சதி திட்டம் தெரிந்த அப்பா என்ன முடிவு எடுக்கிறார்?…

Read More

ஒத்த ஓட்டு முத்தையா- திரை விமர்சனம்

ஒத்த ஓட்டு முத்தையா எப்படி மொத்த ஓட்டு முத்தையாவாக மாறுகிறார் என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கும்படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படமும் கூட. அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டும் முத்தையாவுக்கு திருமண வயதில் மூன்று தங்கைகள். மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அது தொடர்பாக விளம்பரமும் செய்கிறார். ஆனால் அவரது மூன்று தங்கைகளும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 3 இளைஞர்களை காதலிக்கிறார்கள். அதனால் அப்பா தங்கள் காதலுக்கு நிச்சயம் ஓகே சொல்ல மாட்டார் என்பதால் மூன்று இளைஞர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை நம்ப வைக்க போலி பெற்றோரை செட்டப் செய்கிறார்கள். இதே நேரம் மனைவியுடன் சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் சிங்கமுத்து ஏற்கனவே சிறையில் இருந்து…

Read More

காதல் என்பது பொதுவுடமை – திரை விமர்சனம்

முற்போக்கு சிந்தனை கொண்ட ரோகிணிக்கு ஒரே பெண். கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் கலங்காமல் அன்பை கொட்டி மகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் மகள் லிஜாமோல் ஜோஸ் தனது காதல் பற்றி பேச வேண்டும் என்று அம்மாவிடம் கூற… அம்மாவும் மகிழ்ந்து ‘அழைத்து வா என் மருமகனை’ என்க… மகள் அழைத்து வந்ததோ ஒரு பெண்ணை. அப்போது தான் மகளின் தன்பாலின ஈடுபாடு தெரிய வர… இப்போது அப்பா அழைத்து வரப்படுகிறார். மகளுடன் வாழ வந்த பெண்ணை பார்த்ததும் அவரும் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் பக்குவமாக பேசி பார்க்கிறார். மகள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க, அப்பாவின் எதிர்வாதம் எடுபடாமல் போகிறது. அம்மாவும் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. முடிவு என்ன தான் ஆகிறது என்பது பரபர திரைக்கதை. படத்தில் எல்லாரையும் விட…

Read More

பேபிஅண்ட் பேபி – திரை விமர்சனம்

இடம் மாறிய குழந்தைகளால் நிகழும் பரபரப்பு பயணமே கதை. அதை கலகலப்பில் தோய்த்து படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்கள். சென்னை விமான நிலையத்திலிருந்து கோவை செல்வதற்காக கிளம்பும் சிவாவும் மதுரை செல்வதற்கு தயாராகும் குணாவும் தங்களது மனைவி குழந்தைகளுடன் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் இந்த இருவர் குழந்தையும் இடம் மாறி விடுகிறது. விமானத்தில் ஏறிய பிறகு தான் சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும் குணாவின் பெண் குழந்தை சிவாவிடமும் இருப்பது தெரிய வர… ஊரிலோ சிவாவின் தந்தை சத்யராஜோ தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசை எதிர்பார்த்து காத்து இருப்பவர். காதல் திருமணம் செய்து வீட்டை விட்டுப் போன சிவாவுக்கு ஆண் குழந்தை பிறந்த தக ல் தெரிந்த பிறகே மகனுக்கு அழைப்பு விடுக்கிறார். குணாவின் தந்தை இளவரசின் நிலைப்பாடோ இன்னொரு ரகம். ஜோதிடத்தில் தீவிரம் காட்டும்…

Read More

2 k லவ் ஸ்டோரி – திரை விமர்சனம்

கார்த்திக்-மோனிகா 2கே இளைஞர்கள். சிறு வயது முதலே நண்பர்கள். இருவரும் இணைந்து ப்ரி வெட்டிங் போட்டோ சூட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களிடையே நீடிக்கும் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறும் என்று நண்பர்கள் வட்டாரம் எதிர்பார்த்து இருக்க ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக இவர்கள் நட்பிலேயே நிலைத்து நிற்கிறார்கள். இந்நிலையில் சக கல்லூரித் தோழி பவித்ரா கார்த்திக் மேல் காதலாகி தன் விருப்பம் தெரிவிக்க, அவனோ மோனிகா ஓகே சொன்னால் உன் காதலை ஏற்பதில் தடை ஏதும் இல்லை என்கிறான். ஒரு சில கண்டிஷன்களோடு மோனிகாவும் கார்த்திக்- பவித்ரா காதலுக்கு ஓகே சொல்ல….இதன் பிறகு புதிய காதல் ஜோடி கேரளாவுக்கு பைக்கில் டூர் செல்ல, பாதி வழியில் நடந்த விபத்தில் பவித்ரா உயிரிழக்கிறாள். இந்த காலகட்டத்தில் கார்த்திக்,- மோனிகாவின் நட்பு அவர்களின் பெற்றோர்களையே இது…

Read More

தினசரி – திரை விமர்சனம்

ஐடி துறையில் கை நிறைய சம்பாதிக்கும் ஸ்ரீகாந்த்துக்கு தன் வருங்கால மனைவி தன்னைவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் அவருக்கு அமைந்த மனைவியோ திருமணத்துக்கு பின் வேலைக்கு போவதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார். பெண் பார்க்க போகும் ஸ்ரீகாந்தின் அம்மா மணப்பெண்ணின் இந்த கண்டிஷனை மகனிடம் மறைத்து விட… திருமணம் நடக்கிறது. அதன் பிறகு ஸ்ரீகாந்த் உண்மை தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை உள்வாங்கி கொள்ளும் ஸ்ரீகாந்த் தனியார் எதிர்நிறுவனத்தில் கடன் வாங்கி அதிக முதலீடுகளை செய்கிறார். இப்படி ஒரு கோடி வரை அவர் பணம் கட்டிய நிலையில்தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்து விட… இதனால் ஒரு கட்டத்தில் பெற்றோருக்கே அன்னியமாகி போகிறார் ஸ்ரீகாந்த். கடலில் இருந்து மேய்டாரா கடலில் இருந்து மேட்டரா அவரை ஒதுக்கி வைத்த குடும்பம் மீண்டும் அவரை அரவணைத்துக்…

Read More