இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மvனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விட… அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார் ட்டிஸ்க்கும் மாயமாகி விட… கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம்…
Read MoreCategory: விமர்சனம்
’கலன்’ திரைப்பட விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம் இருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் வேங்கை, அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்கிறார். வேங்கை உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால், அவரது நண்பன் மூலமாகவே அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்துவிடுகிறது. அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க வேங்கையின் தாய் வெட்டுடையார் காளியும், அவரது தம்பி அப்புக்குட்டியும் களம் இறங்க,…
Read Moreமேக்ஸ் – திரை விமர்சனம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் கிச்சா சுதீப் நேர்மையானவர். தப்பு செய்பவர்களுக்கு அவர் கொடுக்கும் ட்ரீட்மென்ட்டே தனி. இதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தால் கூட அஞ்சாமல் நடவடிக்கை எடுப்பவர். அரசியல்வாதிகள் தரப்பில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இரு ந்து பிரஷர் வந்தாலும் அதையெல்லாம் சட்டை செய்யாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பவர். இதனால் இந்த நேர்மைக்கான பரிசாக அடிக்கடி சஸ்பெண்டும் உண்டு. இந்நிலையில் சஸ்பெண்ட் முடிந்து புதிய ஊருக்கு மாற்றலாகி வருகிறார். நாளை பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இன்று பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இரண்டு மந்திரிகளின் மகன்களை ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். அவர்கள் மீது எஃப் ஐ ஆர் போடச் சொல்பவர், மறுநாள் சார்ஜ் எடுத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளதாக கூறி செல்கிறார். மறுநாள் காலை அதிர்ச்சி பொழுதாக விடிகிறது. லாக்கப்பில் இருந்த அந்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்த…
Read Moreராஜா கிளி – திரை விமர்சனம்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வரும் சமுத்திரக்கனி, ஒரு நாள் குப்பையில் கிடைப்பதை எடுத்து பசியாறும் பெரியவர் ஒருவரை பார்க்கிறார். அவரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். ஒரு நாள்அவர் வசம் இருந்த டைரியை படித்து பார்த்த போது உண்மையிலேயே அவர் பிச்சைக்காரர் அல்ல.கோடீஸ்வரனான பிரபல தொழிலதிபர் முருகப்பன் என்பது தெரிய வர, அதிர்ந்து போகிறார் சமுத்திரக்கனி. கோடிகளை குவித்த அவர் ஏன் இந்த கடை நிலைக்கு வந்தார்? என்பதை சொல்வதே இந்த ராஜாகிளி. மனம் நலம் பாதிக்கப்பட்டவராக அந்த கேரக்டரில் தம்பி ராமையா பார்க்கும்போதே மனதுக்குள் பரிதாபம் எட்டிப் பார்த்து விடுகிறது. இதே தம்பி ராமையா செல்வந்தர் முருகப்பனாக வரும் காட்சிகளில் நடிப்பில் ஏகப்பட்ட வித்தியாசம். நடை உடை பாவனை என அனைத்திலும் செல்வந்தருக்கான கெத்து அச்சு பிசகாமல் வெளிப்படுகிறது. பெண்கள் மீதான…
Read Moreஸ்மைல் மேன் – திரை விமர்சனம்
கிரைம் திரில்லர் பட ரசிகர்களுக்கான ஸ்பெஷல் படையல் இது. நடிகர் சரத்குமார் நடிப்பில் இது 150 வது படம் என்பதும், இந்தப் படமும் அவர் பெயர் சொல்லும் என்பதும் இன்னொரு சிறப்பு. தலையில் அடிபட்டு சிகிச்சைக்குப் பின் தேறி வந்த சரத்குமாருக்கு ஓராண்டுக்குள் படிப்படியாக பழைய நினைவுகள் மறந்து போகும் என்று டாக்டர் பயமுறுத்த… இந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரை அதிர்ச்சியில் வைத்திருந்த ஸ்மைல் மேன் கொலை மீண்டும் தொடர்கிறது. மனிதர்களை கடத்திச் சென்று கொலை செய்வதோடு, பிணத்தின் வாயை கிழித்து பற்கள் தெரிய சிரிப்பது போல் பொது இடத்தில் வைப்பது கொலையாளி ஸ்டைல். இந்த வழக்கை சி.பி.சி. ஐ.டி. ஸ்ரீகுமார் விசாரிக்கிறார். இந்த விசாரணையில் அவரோடு சரத்குமாரும் இணைந்து கொள்கிறார். முன்னதாக இந்த வழக்கால் தான் தன் வாழ்க்கையே திசை மாறியது என்பதை…
Read Moreஅலங்கு – திரை விமர்சனம்
மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குணாநிதி, காளி என்ற நாயை வளர்க்கிறார். நாய் இல்லாமல் நான் இல்லை என்கிற அளவுக்கு நாய் மீது பிரியம் கொண்டவர் அவர். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேலைக்காக கேரளா செல்பவர் கூடவே தன் பிரியத்துக்குரிய நாயை அழைத்து செல்கிறார். அங்கு எதிர்பாராமல் நடக்கும் வேண்டாத சம்பவத்தை தொடர்ந்து நாய்க்கு ஆபத்து ஏற்படுகிறது. நாயைக் காப்பாற்றும் முயற்சியில் ஒருவரது கையை நாயகன் வெட்டி விடுகிறார். கையை இழந்தவர் ‘குணாநிதி அண்ட் &கோ’வை கொல்ல துடிக்க…அந்த காட்டு வழி பயணம் அவர்களை எதிரிகளிடமிருந்து தப்பிக்க வைத்ததா? என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை.. மலைவாழ் பழங்குடி இளைஞனாக குணாநிதி காட்டுக்குள் நடக்கும் அந்த வீர தீர போராட்டத்தில் அவரது துடிப்பான நடிப்பு அந்த கேரக்டருக்கான நியாயத்தை செய்து விடுகிறது. மலையன் கதாபாத்திரத்தில் காளி…
Read Moreதிரு. மாணிக்கம் – திரை விமர்சனம்
கேரள மாநிலம் குமுளியில் சின்னதாய் ஒரு லாட்டரி கடை நடத்தும் மாணிக்கம் நேர்மையின் அவதாரம். கிடைக்கிற கொஞ்சம் வருமானத்தில் மனைவி இரண்டு குட்டி மகள்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் கடைக்கு வந்த வெளியூர் பெரியவர் ஒருவர் இரண்டு லாட்டரி சீட்டு வாங்கும் நேரத்தில் அவரது வசம் இருந்த பணம் தொலைந்து போனது தெரிய வர, அந்த சீட்டுகளை பத்திரமாக வைத்திருக்கும்படியும் திரும்ப வரும்போது காசு கொடுத்து வாங்கி செல்வதாகவும் கூறிவிட்டு போகிறார். ஆனால் அவர் வாங்கி இருந்த ரெண்டு சீட்டில் ஒரு சீட்டுக்கு ரூபாய் ஒன்றரை கோடி பரிசு கிடைக்கவே, முகவரி கூட தெரியாத நிலையில் பெரியவரை தேடி பஸ்ஸில் பயணப்படுகிறார். இதற்கிடையே கணவருக்கு சாப்பாடு கொண்டு வரும் மனைவி கடை பூட்டி இருப்பதை கண்டு பக்கத்து கடையில் விசாரிக்கிறார். பக்கத்து…
Read Moreமுஃபாஸா தி லயன் கிங் – திரை விமர்சனம்
2019 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான தி லயன் கிங் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த வெற்றியை குறிவைத்து வெளியாகி இருக்கும் படம், ‘முபாசா தி லயன் கிங்.’ பபூன் குரங்கான ரபீக் சிம்பாவின் மகளிடம் சொல்லும் பிளாஷ்பேக்குடன் படம் தொடங்குகிறது. சிறுவயதில் தங்கள் பூர்வீக இடத்தை விட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒபாசா வேறொரு சிங்கஆளுகை இருக்கும் காட்டுக்குள் வந்து சேர்கிறது. ஆனால் அந்த சிங்கக் கூட்டத்தின் தலைவனான முபாசி, இடம் பெயர்ந்து வந்த இந்த குட்டி சிங்கத்தை ஏற்க மறுக்கிறது. இதற்குள் முபாசியின் மகன் டாக்காவின் அன்பை பெற்று விட்ட படியால் பெண் சிங்கங்கள் கூட்டத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கிடைக்கிறது. இந்நிலையில் எதிர்பாராமல் நடந்த ஒரு சண்டையில் வெள்ளை நிற சிங்கக் கூட்டத்தை சேர்ந்த ஒரு குட்டி சிங்கத்தை முபாசா கொன்று…
Read MoreUI (உய்) – திரை விமர்சனம்
உலகளாவிய நுண்ணறிவு என்ற பொருள் படும் யுனிவர்சல் இன்டெலிஜென்ஸ் என்பதன் சுருக்கமே இந்த ui. கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில். படத்திலும் அவர் இயக்குனராகவே வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்க்கும் ரசிகர்களில் பலர் பித்து பிடித்தது போல் ஆகிறார்கள். அதுவரை கோழையாக இருந்த சிலர் தைரியமான முடிவுகள் எடுக்கிறார்கள். இதனால் இந்த படத்தை ஒரு தரப்பு கொண்டாடி தீர்க்க, மற்றொரு தரப்போ படத்தை தடை செய்தாக வேண்டும் என்று போராடுகிறது. பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் மூன்று முறை அந்த படத்தை பார்த்த பிறகும் எப்படி விமர்சனம் எழுதுவது என்று தடுமாறுகிறார். அதனால் அவர் அந்தப் படத்தை இயக்கிய உபேந்திராவையே சந்திக்க புறப்படுகிறார். அந்த சந்திப்பில் அவரு க்கு கிடைத்த…
Read Moreவிடுதலை 2 – திரை விமர்சனம்
முதல் பாகத்தின் இறுதியில் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு மலை கிராமத்தில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் வாத்தியார் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிந்து அவரை துணிச்சலாக கைது செய்கிறார் குமரேசன். சித்திரவதை சகிதம் போலீசார் பெருமாள் வாத்தியாரைவிசாரிப்பது போல முதல் பாகம் நிறைவடைகிறது. இரண்டாம் பாகத்திலோ பெருமாள் வாத்தியாரின் முன் கதை சொல்லப்படுகிறது. போலீஸ் காவலில் இருக்கும் அவரது வாக்குமூலமும் அதைத் தொடர்ந்து காவல்துறையின் ரியாக்சனும் தான் இந்த இரண்டாம் பாகம். இந்த இரண்டாம் பாகத்தில் பண்ணை அடிமை முறை, fஉழைக்கும் வர்க்க மக்களை தங்களது உடைமையாக கருதும் பண்ணைகளின் வக்ரம், கூலி உயர்வு கேட்டதால் நிகழ்த்தப்பட்ட கட்டாய மரணங்கள்என அங்குள்ள மக்களின் வலி வேதனைகளை…
Read More