ஹரீஷ் கல்யாண் ஜோடியான ரெபா மோனிகா ஜான்!

நவநாகரீக தோற்றமும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ஒரு சில  நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அம்சம். ரெபா மோனிகா ஜான் இந்த இரு அம்சங்களிலும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக நடிக்கிறார். நிவின் பாலியின் ஜாக்கோபிண்டே ஸ்வர்க்கராஜ்ஜியம் படத்திற்கு பிறகு அவரது புகழ் கேரளா தாண்டியும் பரவலாகி இருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து வரும் ரெபா, தற்போது ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ரியா சக்ரவர்த்தியை சமீபத்தில் அறிவித்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. தயாரிப்பாளர் மலையாளத்தில் நான் நடித்த படங்களை பற்றி அறிந்திருக்கிறார். அதனால் இந்த…

Read More

விவசாயத்தையும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொல்ல வரும் ‘ஐ.ஆர்.8’ படம்|!

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐ.ஆர்.8’.இந்தப் படத்தில் அனீபா, விஷ்வா இருவரும் கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஓளிப்பதிவு – கே.வி.மணி, பாடல்கள், இசை – கோண்ஸ், படத் தொகுப்பு – B.S.வாசு, சண்டை இயக்கம் – ‘நாக் அவுட்’ நந்தா, தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.பி. இஸ்மாயில். ‘சிங்க முகம்’, ‘சொல்ல மாட்டேன்’, ‘வாங்க வாங்க’ போன்ற படங்களை தொடர்ந்து இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியுள்ள நான்காவது படம் இது. இத்திரைப்படம் விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காமல் படித்த இளைஞர்களிடத்தில்…

Read More