ஆசிய தடகளம்: ததமிழக வீராங்கனை ங்கம் வென்றார் !

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.

திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜபிர் மதாரியும், பெண்கள் பிரிவில் சரிதா பென்னும் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இதன் மூலம் இந்தியா இந்த தொடரில் மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது.

Related posts

Leave a Comment