இளையதிலகம் பிரபுவின் 225வது திரைப்படம் “காலேஜ் குமார்”!

கன்னட திரையுலகத்திலிருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ். இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்க உள்ளார். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் அக்னிதேவி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள மதுபாலா நடிக்க உள்ளார். இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் நடந்தது.இந்த விழாவில் பிரபு பேசும்போது, ’கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம்“ என்றார். படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் மதுபாலா பேசும்போது ’ரோஜா, அழகன், ஜென்டில்மேன் அப்படின்னு தமிழ் சினிமா எனக்கு நிறைய பேர் வாங்கிக்…

Read More

சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான் – பா. இரஞ்சித் பேச்சு

‘வர்ணாலயா சினி கிரியேசன்ஸ்’ சார்பாக ‘ராமச்சந்திரன்’, ‘பெவின்ஸ் பால்’ தயாரித்து இருக்கும் ‘பற’ படத்தை கீரா இயக்கியுள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசப்பட்டவை… இயக்குநர் கீரா – “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும்போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்த ‘பற’ படத்தில் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாக ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..!” நடிகர் சமுத்திரக்கனி – “இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித்தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர்…

Read More

‘மெஹந்தி சர்க்கஸ்’ உருவானது எப்படி?

ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின்  கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது, விழாவில் …

Read More

வெள்ளைப் பூக்கள் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

காமெடி நடிகர் விவேக், சார்லி ஆகியோருடன்  பூஜா தேவரியா  ஹாலிவுட் நடிகையான Paige Henderson- போன்றோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கணிணி அறிவியல் பொறியாளர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இத் திரைப்படத்தை ‘டெண்ட் கொட்டா’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் திகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 19ம் இப்படம் ரிலீஸாவதையடுத்து  வெள்ளைப்பூக்கள் பட டீம் பத்திரிகையாளளை சந்தித்து அளவளாவியது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விவேக், சார்லி, தேவ், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் விவேக் இளங்கோவன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சார்லி பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிக முக்கியக் காரணம் என் நண்பன் விவேக்தான். விவேக் எனக்கு தொடர்ச்சியாக பல உதவிகளைச் செய்து வருகிறார். பல…

Read More

தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!!

நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடிய வர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது, “இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்கு தான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம்…

Read More

கோடீஸ்வரர்களும், கேடிகளுமா நம் மக்கள் பிரதிநிதிகள்?

இந்தியாவில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டசபைகளிலும் கோடீஸ்வர எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பெருகிவிட்டார்கள். தற்போது நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் கோடீஸ்வரர்களின் பங்கு 82 விழுக்காடு. இது, 2004இல் 36 விழுக்காடாகவும், 2009இல் 53 விழுக்காடாகவும் இருந்தது. இது போதாதென்று, குற்றவியல் வழக்குகளைக் கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. குற்றவியல் வழக்கும் இருந்து, பெரும் செல்வந்தராகவும் இருந்தால், தேர்தலில் அவரின் வெற்றி வாய்ப்பு, அவர் போட்டியிடும் தொகுதியில் குறைந்த சொத்து மதிப்புள்ள வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைவிடச் சராசரியாக 50 விழுக்காடு அதிகம் என்பதை When Crime Pays: Money and Muscle in Indian Politics எனும் புத்தகத்தில் மிலன் வைஷ்ணவ் என்பவர் புள்ளிவிவரங்களோடு நிறுவியுள்ளார். தமிழகத்தை எடுத்துக்கொண்டால், இந்த நூற்றாண்டில் நடந்துள்ள மூன்று பொதுத்தேர்தல்களில் கோடீஸ்வர எம்.பி.க்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்தது.…

Read More

சென்னை-சேலம் இடையிலான 8 வழி சாலை திட்டம் ரத்து! – ஐகோர்ட் தீர்ப்பு முழு விபரம்!

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்து வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 6 மாவட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. இந்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ள இந்த 8 வழி சாலைக்கு காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட…

Read More

கோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் ஒரு படம்தான் ‘ வாட்ச்மேன்’

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம் தான் வாட்ச்மேன். இயக்குனர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார், அவர்கள் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வந்திருக்கிறார்கள். அவர் இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எங்கள் முதல் படத்திலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்தது எங்களுக்கு கிடைத்த வரம், இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் அருண்மொழி…

Read More

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை படமாக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறார்.  ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். இக்கதையை ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இந்த படம் அமைந்திருக்கும்.சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை,  அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட்…

Read More