நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதியும் ஃபானி புயல், கர்நாடகாவில் ரயில் தாமதம் ஆகிய காரணங்களால் தேர்வெழுத முடியாதவர்களுக்கு 20-ஆம் தேதியும் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் அதிக மாணவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in-ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதிய மாணவர்களில் கடந்த ஆண்டு 39 புள்ளி 56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 48 புள்ளி 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக நீட் தேர்வு எழுதியவர்களில் 56 புள்ளி 27 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 74 புள்ளி 92 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 701 மதிப்பெண்களுடன்…
Read MoreMonth: June 2019
நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் நாசர் & விஷால் அணி!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நாசர் தலைமையிலான நிர்வாகக் காலம் முடிவடைந்ததை யடுத்து, 2019 -2022 ஆண்டுகளுக்கான நிர்வாக குழுவைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மேலும், ஜூன் 14-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தேர்தல், சென்னை அடையாறு ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்தத் தேர்தலில் நாசர் – விஷால் அணி மீண்டும் போட்டியிடவுள்ளது.இதற்கான 26 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும்…
Read Moreநான், சலீம், பிச்சைக்காரன் வரிசையில் கொலைகாரன்
விஜய் ஆண்டனி முரட்டுத் தனமான கேரக்டரில், நான், சலீம் படங்கள் இரண்டும் நன்றாக ஓடி கல்லா கட்டி இருக்கிறது. மேலும் பக்கா செண்டிமெண்ட் ஆக நடித்த பிச்சைக்காரன் படமும் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி தூள் கிளப்பியது. தற்போது வரும் ஜுன் 7 ஆம் தேதி வெளிவர இருக்கும் கொலைகாரன் படமும் அந்த வரிசையில் சேரும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனென்றால் கொலைகாரன் படத்தில் நான் சலீம் படங்களில் போல் பக்கா திரில்லர் விசயங்களும் இருக்கிறதாம், பிச்சைக்காரன் படத்தைப் போல பக்கா செண்டிமெண்ட் மேட்டரும் இருக்கிறதாம். அதனால் படம் எப்படியும் பட்டயக் கிளப்பும் என்கிறார்கள். காத்திருப்போம்
Read Moreதேவி + 2- விமர்சனம்!
ரொம்ப நாட்களுக்குப் பிறகு சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். குழந்தைகளை கொண்டாட வைக்கும் அளவில் ஒருபடம் வந்துவிட்டால் நிச்சயம் அப்படங்களை குடும்பங்களும் கொண்டாடும். தேவி படத்தில் தமன்னாவை பெண் பேய் வந்து ஆட்டும். தேவி+2-வில் பிரபுதேவாவை இரண்டு ஆண் பேய்கள் வந்து ஆட்டுகின்றன. அந்தப் பேய்களிடம் இருந்து தமன்னா எப்படி கணவனை மீட்டு எடுக்கிறார், பேய்கள் போடும் கான்ட்ராக்ட் என்னாச்சு என்பது தான் 2 மணி நேர தேவியாட்டம். நடிகர் பார்த்திபன் குரலில் தேவி முதல்பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் உள்ள தொடர்போடு கதை துவங்குகிறது. அதனால் முதல் காட்சிக்கு முன்பே நாம் படத்தோடு ஒன்றி விடுகிறோம். மொரீசியஸ்க்கு தமன்னாவோடு செல்லும் பிரபுதேவாவிற்கு அங்கு தான் இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அந்த இரண்டுப் பேய்களுக்கும் உள்ள மோட்டிவேஷன் ஒரு காதல் என்பது தான் கலாட்டா ஏரியா. தமன்னா பிரபுதேவாவின்…
Read More