சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு!!

 ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா ஆகியோர்…

Read More

டிமான்டி காலனி 2 விமர்சனம் 3.75/5.. திகில் விருந்து

  கதை… டிமான்டி காலனி 2015 ஆம் ஆண்டு வந்தது.. அந்தப் படத்தில் நாயகன் அருள்நிதி இறப்பதாக கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.. அப்படி இருக்கையில் இந்த படம் எப்படி தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருக்கும்.. அதை அழகாகவே திரைக்கதை அமைத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு திகில் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆறு வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்த தன் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்து அவரது ஆவியுடன் பேச முற்படுகிறார் பிரியா.. முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அப்பா அருண் பாண்டியன் வேறு வழியின்றி மகளுக்காக ஒத்துக் கொள்கிறார்.. அதன்படி ஆவிகளுடன் பேசுவதற்காக ஆவிகள் உலகில் நுழைந்த பிரியா அவர்கள் அருள்நிதி ஆவியை நிஜ உலகிற்கு அழைத்து வருகிறார். நிஜ உலகில் அருள்நிதியின் (இரட்டை பிறவி)…

Read More

ரகு தாத்தா பட விமர்சனம் 3/5.. ஹிந்தி தெரியாது போயா..

 1970- களில் தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நடந்த காலத்தில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. கதை… வள்ளுவன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஆணாதிக்கத்தை எதிர்த்து இவர் எழுத்தாளராகவும் பல கதைகளை எழுதி வருகிறார். இவரது தாத்தா எம் எஸ் பாஸ்கர் வழியில் ஹிந்தியை எதிர்த்து போராடியும் வருகிறார்.. இந்த சூழ்நிலையில் தாத்தாவுக்கு கேன்சர் நோய் தெரிய வருகிறது.. தான் இறப்பதற்குள் பேத்தி கீர்த்திக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என எண்ணுகிறார் எம் எஸ் பாஸ்கர். ஒரு காலகட்டத்தில் வங்கியில் ப்ரமோஷனுக்காக ஹிந்தியை கற்க வேண்டும் என்ற நிலை கீர்த்திக்கு வருகிறது.. அதன் பிறகு என்ன ஆனது? புரட்சிப் பெண் எழுத்தாளர் கீர்த்தியின் நிலை என்ன.? ஹிந்தியை கற்றுக் கொண்டாரா? திருமணம் செய்து கொண்டாரா? என்பதெல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்…. கீர்த்தி சுரேஷ்,…

Read More

தங்கலான் பட விமர்சனம் 3.5/5… GOLDEN BOY

 ஆங்கிலேயர்களிடமிருந்து தன் மக்களை மீட்டெடுக்க தன் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை தேடி செல்லும் தங்கலான்.. கதை… 1850 இந்தியாவில் தங்க வேட்டைக்காக வாழ்ந்த காலகட்டம் அது.. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்தியர்கள் அடிமைப்பட்டு கிடந்த காலகட்டம் அது.. அப்போது பல சூழ்ச்சிகளால் தங்கள் நிலத்தை இழக்கிறார் தங்கலான் (விக்ரம்)… மேலும் மிராசுதார் பண்ணையார்களிடம் அடிமைப்பட்டு கிடைக்கின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாய மற்றும் கூலி வேலைகளை செய்து வருகின்றனர்.. இந்த சூழ்நிலையில் தங்க வேட்டைக்காக பிரிட்டிஷ் ஆட்சியர் விக்ரமை அழைக்கிறார். இதனால் தினமும் கூலியும் கிடைக்கிறது.. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் நன்மதிப்பை பெறுகிறார் விக்ரம்.. எனவே அவரின் நிலத்தை மீட்டெடுக்கவும் அவரின் வாழ்க்கை தரமும் உயர்கிறது. இந்த சூழ்நிலையில் தன் மக்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தங்க வேட்டைக்காக புறப்படுகிறார் விக்ரம்.. ஆனால் அப்பொழுதுதான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சுயரூபம் தெரிய…

Read More

’கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலையரசு, “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. ‘கூழாங்கல்’ படம் பார்த்ததும் நாங்கள் வினோத்துடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தோம். ‘கொட்டுக்காளி’ மூலம் அது நடந்துள்ளது. வினோத்ராஜ், சூரி, அன்னா பென் என அனைவரும் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரும் நன்றாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் பேசப்படும். இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். ஒளிப்பதிவாளர் சக்திவேல், “என்னுடைய…

Read More

குச்சிப்புடி நடனக் கலைஞரும், நடிகையுமான சந்தியா ராஜுக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு!

மதிப்பிற்குரிய குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜு, இந்த வருடம் 2024ல் நடைபெற இருக்கும் 77வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் மதிப்புமிக்க ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பைப் பெற்றுள்ளார். தனது முதல் தெலுங்குத் திரைப்படமான ‘நாட்டியம்’ படத்திற்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர் சந்தியா ராஜு. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தொழில்துறையின் தலைவர் தொழிலதிபர் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகள். ஹைதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலா ஃபிலிம்ஸின் நிறுவனராக சந்தியா ராஜூ உள்ளார். குச்சிப்புடியின் கிளாசிக்கல் நடன வடிவத்திற்கு ஜோதி கொடுத்து, அதை தனது நேரடி நிகழ்ச்சிகள், நடன அகாடமி மற்றும் சினிமா மூலம் உலகளாவிய…

Read More

சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின், டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 முதல், ஸ்ட்ரீம் செய்யப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸ், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸ், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான, ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும். இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார். நடிகர்…

Read More

நிமிஷா சஜயன் நடிப்பில், ஜிதேஷ் வி வழங்கும், கலமாயா பிலிம்ஸின் ‘என்ன விலை’!!!

பன்முகத்திறன் கொண்ட பல கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் நிமிஷா சஜயன் ஆர்வம் கொண்டவர். ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘போச்சர்’ என தான் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களின் ஆன்மாவையும் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் இப்போது ‘என்ன விலை’ என்ற புதிய தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு ஃபேமிலி டிராமா ஆகும். திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் விமர்சன மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ திரைப்படத்தின் அசாதாரண திரைக்கதைக்கு புகழ் பெற்ற சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் சிறந்த திரைக்கதைக்காக, சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் இவர்…

Read More

காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான ‘கியாரா கியாரா’ ஸ்னீக் பீக்கை வெளியிட்டது !!.

இந்தியா, 09 ஆகஸ்ட் 2024: மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம் வெள்ளிக்கிழமை மாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ZEE5 அதன் சமீபத்தில் வெளியிடப்பட்ட, மர்மத் திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3D ப்ரொஜெக்ஷனை நடத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம், மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள ‘கியாரா கியாரா’ சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்டோரியன் கோதிக் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்ற டேவிட் சாசூன் நூலகம், மும்பையின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நிகழ்ச்சியின் தொடக்க நாளான ஆகஸ்ட் 9…

Read More

‘மட்கா’ படத்தின் வருண் தேஜின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்!!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ் இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில் தோற்றமளிக்கிறார். கதாநாயகனின் 24 வருட பயணத்தை காணும் இத்திரைப்படத்தில், நான்கு விதமான கெட்-அப்களில் வருண் தேஜ் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடிதட்டு மனிதனாக இருந்து கிங்காக மாறியுள்ள அவரின் இரண்டு…

Read More