கதை…
நாயகன் தேவ்.. நாயகி காயத்ரி..
மலைப்பகுதிகளில் ட்ரக்கிங் செல்ல ஆசைப்படும் இரண்டு காதல் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு செல்கின்றனர்.. இவர்கள் கூடவே இவர்களின் போட்டோகிராப் நண்பரும் இணைந்து கொள்கிறார்.. இவர்களுக்கு வழி துணையாக டூரிஸ்ட் கைட் பால சரவணன் இணைகிறார்..
அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது இது தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு பலகையை காண்கின்றனர்.. அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற அறிந்து கொள்ள காயத்ரி திட்டமிடுகிறார்..
இது எங்கள் கிராமம் இந்த காடு பற்றி நன்கு அறிந்தவன் நான்.. அங்கு ஒரு மர்மம் இருக்கிறது.. அங்கு செல்லக்கூடாது சென்றால் நமக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார் பாலசரவணன்.. ஆனாலும் அவரின் எதிர்ப்பை மீறி அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகின்றனர்.
அந்த பகுதியில் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர்.. தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்பது என்ன? அங்கு என்ன பிரச்சனை நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும்தான் டிரெக்கிங் செல்லும் நண்பர்கள்..
சமீபகாலமாக பால சரவணன் காமெடியை விட்டு விலகி குணச்சித்திர கேரக்டரில் ஜொலிக்கிறார்.. அதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.. இவர் பலமுறை சுற்றுலா பயணிகளை எச்சரித்தும் அவர்கள் அங்கே செல்வது பால சரவணன் செல்வதை யாருமே கேட்க மாட்டார்களா என்ற பதைபதைப்பு நமக்கே தொற்றிக் கொள்கிறது..
விஜய் சேதுபதியின் பல படங்களில் காயத்ரி ஹோம்லியான கேரக்டரில் நடிப்பார்.. இதில் டிரெக்கிங் செல்லும் பெண்ணாக மாடர்ன் உடையில் நடித்திருக்கிறார். ஆண்களே செல்ல அச்சப்படும் இடத்தில் சவாலாக இவர் உள்ளே செல்வது எல்லாம் அசால்ட்.. இவரது கேரக்டர் கிளைமாக்ஸ் இல் காட்டப்படும் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.
கதையின் நாயகனாக தேவ் நடித்திருக்கிறார்.. படு ஸ்மார்ட் தான்.. ப்ரீத்தி நெடுமாறன் மற்றொரு நாயகியாக வருகிறார் இவரது கண்ணழகும் இவருக்கு கூடுதல் பலம்.
ஒரே உடை.. ஒரு காட்டுக்குள் நடக்கும் கதை.. அந்த திகில் சம்பவங்களுக்கு ஏற்ப கேரக்டர்களை உணர்ந்து அதற்கான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
பேச்சி பாட்டியாக வருபவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இவரது முகத்திற்கு கொடூரமான மேக்கப் போட்டவரை பாராட்ட வேண்டும்.. நமக்கே அந்த முகத்தை பார்க்க பயம் வந்துடும்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
வழக்கமான பேய் படங்கள் போல அல்லாமல் பேய் பழிவாங்கல் கதை என்று சொல்லாமல் நரபலி கொடுக்கும் கதையை திகிலாக கொடுத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்..
திகில் படத்துக்கு ஏற்ற கலங்கலான ஒளிப்பதிவு பயத்தை அதிகரிக்கிறது. பேச்சி வீடு.. அதற்குள் பாதாள சுரங்கம் என சிறப்பான பங்களிப்பில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன்.
கலை இயக்குநர் குமார் ஞானப்பன் காட்டுக்குள் பெரிய வேலையில்லை என்றாலும் பயமுறுத்தும் திகிலான மணிகள் பேச்சி மேக்கப் பேச்சியின் உருவம் உள்ளிட்டவைகளை அழகாகவே செய்திருக்கிறார்..
ராஜேஷ் முருகேசனின் இசை படத்துக்கு பலம்.. ஒவ்வொரு நண்பர்களாக காணாமல் போகும் போது வரும் இசை வேற லெவல் ரகம்.. பெரும்பாலும் இருட்டில் மட்டுமே திகில் காட்சிகளை இதுவரை பார்த்திருக்கிறோம்.. ஆனால் பகலில் திகிலை கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் இயக்குனரும் இசையமைப்பாளரும்..
இக்னேசியஸ் அஸ்வினின் படத்தொகுப்பும் சிறப்பு… படத்தை எங்கும் போர் அடிக்காமல் நகர்த்தி இருப்பது சிறப்பு..
இயக்குனர் ராமச்சந்திரன்.. காதல் நட்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு கதையை நீட்டாமல் எடுத்து வேகத்திலேயே கதைக்குள் சென்று இருப்பது சிறப்பு.. அதுபோல பிளாஷ்பேக் என நீட்டாமல் அதற்கும் சார்பான விளக்கம் கொடுத்து உடனே முடித்து இருப்பது செம..
பேய் படங்கள் எல்லாம் இருட்டில் தான் இருக்க வேண்டுமா பகலில் பேய் வராதா? என இருட்டு அறையில் கதை சொல்லும் இயக்குனர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராமச்சந்திரன்..