மழை பிடிக்காத மனிதன் – விமர்சனம்.. 3/5

கதை…

படம் தொடங்கியவுடன் இரண்டு நிமிடங்களில் வரைபடத்துடன் வாய்ஸ் ஓவரில் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

ஒரு அடாத மழையினால் தன் காதல் மனைவி இழக்கிறார் விஜய் ஆண்டனி.. இதனையடுத்து விஜய் ஆண்டனியை எவருக்கும் தெரியாத வகையில் அந்தமானுக்கு கொண்டு செல்கிறார் இவரது நண்பர் சரத்குமார்.

அதே சமயம் நடந்த சம்பவத்தில் விஜய் ஆண்டனி இறந்து விடுகிறார் என மக்களை நம்ப வைக்கிறார்.. அப்படி அவர் சொல்ல என்ன காரணம் என்பது கிளைமாக்ஸ் இல் தெரியும்.

அந்தமானுக்கு சென்ற விஜய் ஆண்டனி அங்கு ஒரு பிரச்சனையில் தன் நண்பனுக்காகவும் தன் காதலிக்காகவும் களம் இறங்குகிறார்.. அடுத்தது நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

நாயகனாக விஜய் ஆண்டனி.. சமீப காலமாக ரோமியோ உள்ளிட்ட படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக மாறி இருந்தார் விஜய் ஆண்டனி.. ஆனால் மீண்டும் பழையபடி சீரியஸ் கேரக்டருக்கு வந்து விட்டார் என்றே தோன்றுகிறது..

நாய் மீது பாசம்.. நண்பனுக்காக ஆக்சன்.. காதலிக்காக நேசம் உள்ளிட்ட காட்சிகள் ஓகே..

மேகா ஆகாஷ் மென்மையான நாயகியாக வந்து செல்கிறார்.. இவரின் தங்கை கேரக்டரும் கவனிக்க வைக்கிறது..

மேகா ஆகாஷ், முரளி ஷர்மா மற்றும் இயக்குனர் ரமணாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.. விஜய் ஆண்டனிக்கு ஏற்றவாறு நிதானமாக நிறுத்தி பேசி மேகா ஆகாஷ் கவர்கிறார்..

வில்லனாக வரும் ‘டாலி’ தனஞ்சய்வின் கேரக்டர் மிரட்டல்… செகண்ட் ஹீரோவை (பிரித்வி) இவர் அடிக்கும் காட்சியில்.. நீ டாலி ஆள்னு சொல்லிட்ட.. ஆனா உன்ன போலீஸ அடிச்சுட்டா அப்புறம் எனக்கு எப்படிடா மரியாதை கிடைக்கும்? என்ற தோணியில் அவர் விசாரிக்கும் போது வில்லத்தனம் செம..

கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ போல வரும் பிரித்வி துள்ளல் கேரக்டர் ரசிக்க வைக்கிறது.. ஆனால் சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்..

சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரின் கேரக்டர்கள் வீணடிக்கப்பட்டு இருக்கிறது.. ஒருவேளை ஸ்டார் வேல்யூ-காக இவர்களை படத்தில் நடிக்க வைத்தாரா டைரக்டர்?

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் ‘தீரா மழை’ , இசையமைப்பாளர் ஹரி டபுசியா இசையமைத்த ‘தேடியே போறேன்’ ஆகிய பாடல்கள் கவனம் பெறுகின்றன. விஜய் ஆண்டனி பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக சண்டைக் காட்சியில் ஒலிக்கும் பாடலும் வித்தியாசமான விறுவிறுப்பான ஒன்றாகும்.

படத்தின் இயக்குனர் விஜய் மில்டனே இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எனது காட்சிகளை சுவாரசியமாக ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார்.

மழையில் நனையும் நாய்க்குட்டி முதல் அந்தமான் அழகு வரை அனைத்தையும் அழகாக படம் எடுத்திருக்கிறார் பல காட்சிகளில் கவித்துவமான கோணங்களை பார்க்க முடிகிறது..

ஆக்ஷன் காட்சிகளில் விறுவிறுப்பு காணப்பட்டாலும் கூடுதல் எடிட்டிங் கொடுத்து கட்டிங் செய்திருப்பது சண்டையை முழுவதுமாக ரசிக்க முடிய இல்லை என்றே சொல்லலாம்..

கெட்டவனை அழிப்பதை விட கெட்டதை அழித்தால் நலம் பெறலாம் என்ற நல்ல நோக்கத்துடன் படத்தை முடித்து இருப்பது சிறப்பு.. அதிலும் வில்லனுக்கு விஜய் ஆண்டனி சொல்லும் அட்வைஸ் தியேட்டரில் கைத்தட்டலை பெற வைக்கிறது..

Related posts

Leave a Comment