எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரன்.. 1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் மரணமடையும் அதே நேரத்தில் இவருக்கு கார்த்தி (பேரன்) பிறக்கிறார்.. எனவே எம்ஜிஆரின் ஆத்மா தான் தற்போது தனக்கு பேரனாக கிடைத்திருக்கிறார் என்ன நெகிழும் ராஜ்கிரன் அவரை ஒரு எம்ஜிஆர் ரசிகராகவே வளர்த்து வருகிறார்…
கார்த்தி சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் அவருக்கு லாட்டரியில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கிறது.. இதை தாத்தாவிடம் கொண்டு செல்கிறார் கார்த்தி.. ஆனால் ராஜ்கிரனோ இது உழைப்பால் கிடைத்த பரிசு அல்ல.. இது உழைக்காமல் கிடைக்கும் பணத்தை நான் எடுக்க மாட்டேன் என வாத்தியார் சொல் படி தான் நடப்பேன் என மறுக்கிறார் ராஜ்கிரண்..
இதனை எடுத்து கார்த்தி கடுப்பாகிறார்.. எனவே தன்னுடைய வழியை எம்ஜிஆர் வழி இல்லாமல் நம்பியார் வழிக்கு மாற்றுகிறார் ஒரு கட்டத்தில் இவர் போலீசாகவும் பணியில் சேருகிறார்..
தன் பேரனை எம்ஜிஆர் போல நல்லவனாக வளர்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அவரோ நம்பியார் போல கெட்டவனாக வளர்ந்து நிற்கிறார் என வருத்தமடைகிறார் ராஜ்கிரண்.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.
*CAST*
Karthi – Rameshwaran (a) Ramu) /Vaathiyaar
Raj Kiran – Bhoomipichai
Sathyaraj – Periyasaami
Krithy Shetty – Wu
Anandaraj – Babu
GM Sundar – Mani
Karunakaran – Govindha Raman
Shilpa Manjunath – Malini
Ramesh Thilak – Ramesh
Nilazhgal Ravi – Chief Minister
Yaar Kannan – Madhi Chozhan
Nivas Adithan – Nivas
PL Thenappan (Ramu’s Father) – Jai Ganesh
Vidya (Ramu’s Mother) – Susila
படம் முழுக்க கார்த்தி வாத்தியார் பாணியில் கலக்கி இருக்கிறார்.. முக்கியமாக கார்த்தியாகவும் எம்ஜிஆர் வாத்தியாராகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் போது ரசிக்க வைக்கிறார்.. பல எம்ஜிஆர் படங்களை பார்த்து அவரது உடல் மொழியை பின்பற்றி நடித்திருக்கிறார்.. அதற்கு பாராட்டுக்கள்..
கார்த்தியை தவிர மற்ற நடிகர்களுக்கு பெரும் பங்கு இல்லை.. முக்கியமாக கீர்த்தி, சத்யராஜ், ஜி.எம் சுந்தர், ஆனந்தராஜ், கருணாகரன், சில்பா மஞ்சுநாத் ஆகியோருக்கு வேலை கொடுக்கவில்லை இயக்குனர் என்று தெரிகிறது..
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.. அவரது இசை பாணி பல காட்சிகளில் தெரிகிறது… எம்ஜிஆர் பாடல் ரீமிக்ஸ் செய்திருந்தாலும் எம்ஜிஆர் பாட்டு அப்படியே போட்டிருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்..
கார்த்தி கண்களுக்கு மட்டும் மாஸ்க் போட்டுக் கொண்டு வருவது எம்ஜிஆர் தோற்றம் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை… அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதெல்லாம் ஓவர் கற்பனை..
சூது கவ்வும் பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.. அவரது பிளாக் காமெடி எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம்தான் புதிய முயற்சியாக புதிய கோணத்தில் எம்ஜிஆர் பாதையில் வாத்தியார் ரசிகர்களுக்காக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி..
பல தடைகளை தாண்டி இந்த படத்தை ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்திருக்கிறார்..
