அனந்தா – விமர்சனம் !

மறைந்த புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் மகிமையை சொல்லும் திரைப்படமாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உருவாக்கி இருக்கிறார்.

ஐந்து பக்தர்களின் குடும்பங்கள்…

ஜெகபதிபாபு.. ஒய் ஜி மகேந்திரன்… சுகாசினி.. அபிராமி.. ஒரு வெளிநாட்டுக்காரர்.. உள்ளிட்டவர்களின் வாழ்வில் நடந்த துயர சம்பவங்கள்.. அந்த சமயத்தில் அவர்களின் பிரச்சனை எப்படி சாய்பாபா தீர்த்து வைத்து அவர்களுக்கு அருளாசி வழங்கினார் என்பதை ஒவ்வொருவரும் நெகிழ்ச்சியாக சொல்கின்றனர்..

நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள்

ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, சுஹாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம்.. பக்தியுடன் பயத்துடன் பதட்டத்துடன் என ஒவ்வொருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் கவர்கின்றனர்..

பக்தர்கள் வாழ்வில் சந்தித்த துயரங்கள் அவருக்கு கடவுள் போன்ற சாய்பாபாவின் அருள் எப்படி கிடைத்தது என்பதை காட்சியாக நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா..

கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் பக்தி படமாக இருந்தாலும் இதன் ஒளிப்பதிவும் இசையும் ஒரு முழு நீள திரைக்காவியமாக உருவெடுத்திருக்கிறது. அதற்கு ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளரும் பக்கபலமாக இருக்கின்றனர்..

 

சத்யா அண்ணாமலை பாட்ஷா என அதிரடி ஆக்சன் படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை ஒரு பக்தி படமாக கொடுத்து ரசிகர்களை கூட பக்தி பரவசமாக்கி இருக்கிறார்..

நெகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் புட்டபர்த்தி சாய்பாபாவின் நிஜக் காட்சிகளையும் காட்டி பரவசப்படுத்தி இருக்கிறார்..

Related posts

Leave a Comment