கதை…
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய ஆள் அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்.) ஒரு பக்கம் நல்லவர் என்ற போர்வையில் இருந்தாலும் திரை மறைவாக பல கொலை சம்பவங்களை செய்பவர் இவர்.
இவரின் நண்பரின் மகளே இவரை கட்டிக் கொள்ள ஆசைப்பட கல்யாணம் செய்து கொள்கிறார்.. அதே சமயத்தில் இவரது முன்னாள் காதலியும் இவரை தேடி வருகிறார்.. ஆக இரண்டு மனைவிகளுடன் வாழும் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது..
அதாவது முன்னாள் காதலியின் கணவர் பேய் ரூபத்தில் மர்ப நபராக வருகிறார்.. அவர் யார்.? அந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்.? இவர் போட்ட வேஷம் கலைந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள்
குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா
படத்தில் ஏகப்பட்ட துணை நட்சத்திரங்கள் இருந்தாலும் அண்ணாச்சி தான் ஹைலைட்.. வேட்டிக்கு சாக்ஸ் போட்ட சூ.. வேட்டி சட்டைக்கு பிளேசர்.. ஹீரோயினுக்கு பிரச்சனை என்றால் ஹெலிகாப்டரில் வருவது.. இப்படியாக பல சாகசங்களை செய்து இருக்கிறார் குகன் சக்கரவர்த்தியார்..
பறந்து பறந்து ஃபைட் போடுவது… பிரச்சனை என்றால் சரக்கு அடிப்பது.. பெண்கள் வந்தால் குத்தாட்டம் போடுவது இப்படியாக அனைத்து மசாலா ஐட்டங்களையும் இந்த வங்காள விரிகுடாவில் கலந்து இருக்கிறார்..
ஒரு படம் உருவாவதற்கு என்னென்ன தேவையோ… அதாவது கதை திரைக்கதை வசனம் பாடல் இயக்கம் ஒளிப்பதிவு டப்பிங் எடிட்டிங் தயாரிப்பு இப்படியாக 21 கிராப்டுக்களை அனைத்தையுமே அண்ணாச்சி குகன் சக்கரவர்த்தியார் மட்டும்தான் செய்திருக்கிறார்..
அப்துல் கலாம் போல் தன்னால் வாழ முடியவில்லை.. அவர் கனவு காணுஙகள் என்று சொன்னார்… ஆனால் தான் கெட்ட கெட்ட கனவுகளை கண்டு கெட்ட வழியில் மாறிவிட்டேன் திருந்தி வாழ வேண்டும் என நினைக்கிறார்.
இவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் வங்காள விரிகுடா கடலில் படுத்து ஆறுதல் கொள்கிறார்.. எனவே வங்காள விரிகுடா என்ற தலைப்பையும் வைத்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதாவது மெரினா கடற்கரையில் தமிழக தலைவர்களின் சமாதி கல்லறைகள் உள்ளது… அண்ணாதுரை கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் கல்லறைகள் இருப்பதால் அதை மெரினா கடற்கரை என்ற சொல்லாமல் திராவிட கடற்கரை என்று அழைக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த குகன் சக்கரவர்த்தியார்..
