கதை…
ஸ்கூல் பிடி மாஸ்டர் கிஷோர்.. இவரின் மனைவி சுபத்தரா-வும் இதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.. கிஷோருக்கு நல்ல பாடும் திறமை இருப்பதால் டிவி ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொள்கிறார்.. எனவே நிறைய தினங்களில் ஸ்கூலுக்கு லீவு போட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது..
இதனால் ஸ்கூல் பிரின்சிபாலுக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.. நீங்கள் வேலை விட்டு செல்லுங்கள் உங்களிடத்தில் நாங்கள் வேறு PT மாஸ்டர் வைத்துக் கொள்கிறோம் என்கிறார்..
இதனால் மனைவி.. நீங்கள் பாட வேண்டாம் ஸ்கூல் வேலையை கவனியுங்கள் என்று சொல்கிறார்..
இந்த சூழ்நிலையில் கிஷோர் என்ன செய்தார்.? குடும்பத்தை கவனித்துக் கொண்டாரா அல்லது தன் திறமையை நிரூபித்து வெளியே வந்து வாழ்வில் உயர்ந்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…
G.Kishore Kumar – As Rajan
Subatra Robert – As Vidya
George Maryan – As Chidambara Kumar
Harish Uthaman – As Guna
Dhananya Varshini – As Yaazhini
Jaswant Manikandan – As Deepak
கிஷோர் சுபத்ராவின் ஜோடி பொருத்தம் அருமை.. ஒரு நடுத்தர குடும்பத்து தம்பதிகளை கண்முன் காட்டி இருக்கின்றனர்.. தனக்கு என்ன தான் எக்ஸ்ட்ரா திறமை இருந்தாலும் மனைவியின் சூழ்நிலை பொருளாதாரம் இதனால் திறமையை நிரூபிக்க முடியாமல் படும் அவஸ்தைகளை கிஷோர் நடிப்பில் காட்டி இருக்கிறார்..
வில்லனாக ஹரிஷ் உத்தமன்.. பெரிய வேலை இல்லை.. ஆனால் கிளைமாக்ஸில் அவரின் முடிவு பாராட்டுக்குரியது..
யாழினி கேரட்டில் நடித்த தனன்யா படத்தில் மிகப்பெரிய பிளஸ்.. அவரே ஜூனியர் ஆகவும் சீனியர் ஆகவும் நடித்திருக்கிறார்..
தீபக் மற்றும் யாழினி அண்ணன் தங்கை.. இருவரும் தங்களுடைய குடும்ப பாசத்தை சொல்லும் காட்சிகளில் நம் கண்களில் கண்ணீர் வருகிறது..
சுபத்ராவும் அவரது தோழிகள் மற்றும் குடும்ப நண்பர்கள் என அனைவரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
Producer, Director – Dhirav
Music – Shankar Rangarajan
DOP – Devaraj Pugazhenthi
சங்கர் ரங்கராஜன் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.. மெல்லிசை என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப நிறைய இடங்களில் மிதமான மெல்லிசையை கேட்கவும் காணவும் முடிகிறது..
தேவராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. முக்கியமான யாழினி மற்றும் தீபக் வாழ்ந்த அந்த வீட்டை அழகாக காட்டி தன்னுடைய ஒளிப்பதிவில் கைத்தட்டல்களை பெறுகிறார்..
திரவ் என்பவர் இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.. ஒரு நாடு ஒரு நடுத்தர வர்க்கத்தின் வழியை சொல்லி இருக்கிறார் முக்கியமாக ஒரு சாதாரண வேலை பார்க்கும் ஒரு நபர் புகழ் பெற விரும்பினால் அவரால் அதையும் செய்ய முடியாமல் வேலையும் கவனிக்க முடியாமல் படும் அவஸ்தைகளை அப்பட்டமாக கிஷோர் கேரக்டர் மூலம் காட்டி இருக்கிறார்..
குடும்பத்தில் உள்ள ஒருவரின் திறமையை ஊரார் பாராட்டினாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் எவரும் புரிந்து கொள்ளாத சூழ்நிலையும் காட்டியிருக்கிறார்.. அதற்கெல்லாம் மிகப்பெரிய தடையாக இருப்பது பொருளாதாரம் மட்டுமே.. இதனால் தான் எவராலும் வெளியே வர முடியவில்லை.. ஜொலிக்க முடியவில்லை என்பதையும் கிஷோரின் ராஜன் கேரக்டர் நிரூபிக்கிறது..

