கதை…
நாயகன் – திரிகுன்
நாயகி – ஸ்ரீஜித்தா கோஷ்
இருவரும் காதலிக்கின்றனர் ஒருநாள் இவர்கள் உடலுறவு கொள்ளும் போது சில ரகசியங்களை உடைக்கிறார் நாயகன்.. தான் ஏற்கனவே தன்னைவிட மூத்த இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன் என்கிறார்.. இதை பெரிது படுத்தாத நாயகி ஒரு கட்டத்தில் திருமணமும் செய்து கொள்கிறார்..
அதன் பிறகு ஒரு நாள் மனைவியின் வீட்டிற்கு சென்ற பின்னர்தான் அங்கு இனியா மற்றும் ராதா இருப்பதை அறிந்து அதிர்ச்சியாக்கிறார் நாயகன்.. அப்படி என்றால் இதற்குப் பின்னணியில் இதற்கு முன்பு என்ன நடந்தது.? என்பதுதான் கதை..
நடிகர்கள்…
Thrigun, Srijita Ghosh, Iniya, Radha, Thambi Ramaiah, Sathyan, Ravi Mariya, Aali, Jawa Sundaresan, Madhan Babu, Vijay TV Danasekar, Vinoth
மச்சக்காரன் என்று நாயகன் திரிகுன்னை குறிப்பிட்டு சொல்லலாம்.. அப்படி ஒரு ஆட்டம் ரொமான்ஸ் என குஷியாகி இருக்கிறார் த்ரிகுன்..
நாயகியாக ஸ்ரீ ஜீத்தா கோஷ்.. இப்படி ஒரு மன்னிக்கும் மனைவி நமக்கு கிடைக்க மாட்டாரா என ஆண்களை ஏங்க வைத்து விட்டார்..
பல படங்களில் குடும்ப பெண்ணாக கவர்ந்த இனியா இதில் கவர்ச்சியின் எல்லைக்கு நம்மை அழைத்துச் சென்று இருக்கிறார்.. ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ ராதா
ரீ என்ட்ரி கொடுத்து அதிகமாகவே நம்மை சுண்டி இழுத்து உடல் சூடேற்றுகிறார்.
தம்பி ராமையா, ரவி மரியா, சத்யன், ஆலி, சாம்ஸ் என்ற ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, உள்ளிட்ட காமெடி நடிகர்களும் உண்டு.. முழுக்க முழுக்க அடல்ட் காமெடி தான் படமே..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
Produced By : Arun Visualz – Covai Ramesh
Directed By : Rajasekar.G
Music By : Arunagiri
சி.விஜய்ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. மார்கழி மாதம் முடிந்தாலும் மனதிற்கு இதமான கவர்ச்சியை படமாக்கி நம்மை மூடேற்றி இருக்கிறார்..
படத்தொகுப்பாளர் கே.குமார் : எடிட்டிங்கில் எதை எதை எல்லாம் பார்த்தாரோ. என்று ஏங்க வைக்கிறார்..
அருணகிரி இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் இளமை துள்ளல் ரகம்..
ஜி ராஜசேகர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. முழுக்க முழுக்க காமெடி காம நெடி என இரண்டையும் கலந்து கொடுத்து இருக்கிறார்.. கவர்ச்சி ஆபாசம் என பெண்களைக் காட்டி இருந்தாலும் அதில் நடித்தவர்களும் பெண்கள்தானே.. அப்புறம் நமக்கு என்ன என்ற மனநிலைக்கு வரவைக்கிறார்..
லாஜிக் பாக்காதீங்க.. ஜாலியான மேஜிக் பாருங்க என்று காம நெடி விருந்து வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்..
