லீடர் – விமர்சனம்

 

 

கதை…

தாய் இல்லாத தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் லெஜென்ட் சரவணன்.. இவர் ஒரு கார் மெக்கானிக்.. ஹார்பரில் உள்ள கார்களுக்கு இவர்தான் மெயின் மெக்கானிக்.. எனவே இவருக்கு ஹார்பருக்குள் எளிதாக சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்..

இந்த சூழ்நிலையில் அங்கு போதை மருந்து கடத்தல் நடைபெறுவதாக போலீஸ் ஷாம் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தெரிய வருகிறது..

ஆனால் அங்கு போலீஸ் நுழைய முடியாத சூழ்நிலையில் லெஜென்ட் சரவணன் இடம் சில உதவிகளை கேட்கின்றார் ஆண்ட்ரியா..

ஆனால் அது என்னுடைய வேலை இல்லை நான் என்னுடைய கஷ்டமருக்கு துரோகம் செய்ய முடியாது என்று மறுத்து விடுகிறார் லெஜென் சரவணன்.. இந்த சூழ்நிலையில் இவரின் குழந்தை கடத்தப்படுகிறது..

குழந்தை ஹார்பரில் உள்ள ஒரு கண்டெய்னரில் இருப்பதாக தெரிய வருகிறது.. இதன் பின்னர் சரவணன் என்ன செய்தார்.? குழந்தையை கடத்தியவர் யார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

Legend Saravanan – Sakthivel (A.K.A) Ponmaran
Sham – Bakthavachalam
Andrea Jeremiah – Indra Sathyamoorthy
Santhosh Prathap – Devil
Payal Rajput – Meera
Lal – Sathyamoorthy
“Bahubali” Prabaharan – Salt
Amirtha Aiyer – Renuka
VTV Ganesh – Thangapazham
Iyal – Irene
Aishwarya – Durga
Mariam George – Father
Pathmen – Vinoth
Yogiram – Yogi
Velarunchalam – Velu
Niranjan Thomas – Niranjan
Aranthanki Nisha – Devi
“Adithya” Kathir – Ferrari
Badava Gopi – Government staff
Ashok Pandiyan – IG (Arunagiri)
Shoban Babu – DSP (James Kannan)
Vijayalakshmi – Fathima
Murugan – Constable (Indra Sidekick)
Jayasmirtha – Anusha
Kumar Natarajan – Team Lead

லெஜண்ட் சரவணன்.. ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் எடுத்து அதில் மிகச் சரியாக தன்னை பொருத்திப் பார்த்திருக்கிறார் லெஜன்ட்.. ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் கொஞ்சம் மெனக்கடல் தேவை..

ஆக்சன் காட்சியில் அதிர வைத்துள்ளார்.. முக்கியமாக வந்தே பாரத் டிரெயின் ஆக்சன் காட்சி அதிரடி.. அதுபோல கார் சேஸிங் சீன் வேற லெவல்..

பாயல் ராஜ்புத் பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும் அதிரடி ஆக்ஷனில் மிரட்டி இருக்கிறார்..

சந்தோஷ் பிரதாப், ஷாம், ஆண்ட்ரியா, லால்,.. அனைவரும் அருமை.. அதிலும் முக்கியமாக சந்தோஷ் பிரதாப் ஸ்டைலிஷ் வில்லனாக மாஸ் காட்டி இருக்கிறார்.. ஷாம் யதார்த்த போலீசாக சபாஷ் பெறுகிறார்..

குழந்தை நட்சத்திரம் இயல்.. காது கேளாத சிறுமியாக நடித்திருக்கிறார்.. பார்த்தவுடனே நம் அன்பையும் அனுதாபத்தையும் அள்ளிக் கொள்கிறார்..

விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்…

தொழில்நுட்ப கலைஞர்கள்…

Writer & Director : R. S. Durai Senthilkumar
Producer : Legend Saravana Stores Productions
Music: Ghibran Vaibodha
Director Of Photography: Venkatesh S
Editor : Pradeep E Ragav
Art Director: G. Durairaj
Stunts: Mahesh Mathew
Costume Designer : Deepthi RJ (Legend Saravanan) , Poorthi Pravin (Andrea)
Dubbing Studio : Knack Studios
Dubbing : G.Kothandan B.Sc, D.F.Tech, G.VishnuvardhanM.sc.
VFX: PhantomFX
DI: LV Prasad Studios
COLOURIST: Ranga
Sound MIXING : T.Udaykumar
Mixing Studio : Sound Vibe
Sound Design : A. Sathish Kumar
Sound Studio : Bang Studios
Publicity Designer : Prathool NT
Titles and Animation : Aaradhana Studios, Chennai
Songs : Kabilan, Viveka, Mohan Rajan
Dance : Sankkaraiyya D
PRO : Nikil Murukan
Digital Marketing: Digitally Powerful
Stills: SP Suresh
Costumer: P.Rangasamy
Make Up: N.Sakthivel
Audio Label : Think Music

படத்திற்கு பக்க பலமாக பின்னணி இசையில் அதிர விட்டுள்ளார் ஜிப்ரான்.. சாதாரண காட்சிகளில் கூட இவரது மாஸ் இசை மிரட்டல் ரகம்.. அதிலும் முருகர் பாடல் பக்தி பரவசம்..

பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்து இருக்கிறார்.. படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் ஒரு காட்சி கூட சோர்வடையாமல் படத்தை முழுவதுமாக ரசிக்க வைக்கிறார்..

வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் தூத்துக்குடி ஹார்பர் காட்சி அசத்தல்.. இவ்வளவு பெரிய ஹார்பர் அதில் சேசிங் கண்டெய்னர் லாரிகள் என அனைத்தையும் மிரட்டலாக படம் பிடித்துள்ளார்.. அது போல தாய்லாந்து உள்ளிட்ட ஃபாரின் காட்சிகளும் அருமை..

படம் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் வேகம் பிடிக்கிறது.. அத்தனையும் விறுவிறுப்பு.. கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது.. எதிர்பாராத திருப்புமுனை காட்சிகள் ஏராளம்.. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களில் நிச்சயம் இந்த லீடர் இணையும் அளவுக்கு மாஸ் காட்டி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்..

Related posts

Leave a Comment