BIKER [பைக்கர்] – விமர்சனம்

கதை…

ராஜசேகர்.. இவரின் மகன் சர்வானந்த்.. தன்னால் முடியாததை மகன் சாதிக்க வேண்டும் என நினைத்து அவருக்கு பைக் ரேஸில் பல பயிற்சிகளை கொடுக்கிறார்.. சிறு வயது முதலே மகனின் கவனம் எதிலும் சிதறி விடக்கூடாது என்பதற்காக கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்..

தன்மகன் உலக அளவில் பைக் ரேசர் சாம்பியன் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக பல போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் சர்வானந்த் & மாளவிகா இருவரும் காதலிக்கின்றனர். அப்போது அவர்களின் நெருக்கமான உறவால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகிறார் மாளவிகா..

அந்த சமயத்தில் நடைபெறும் போட்டியில் ஒரு விபத்து ஏற்படவே இனி நீங்கள் பைக் ரேஸ் ஓட்டக்கூடாது என கட்டளை இடுகிறார் மனைவி.. இதன் பிறகு சர்வானந்த் என்ன செய்தார்.? தந்தையின் ஆசையை லட்சியத்தை காப்பாற்றினாரா அல்லது மனைவியின் ஆசைப்படி நடந்து கொண்டாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.

நடிகர்கள்…

ஷர்வானந்த் – விகாஸ் நாராயன்
டாக்டர் ராஜசேகர் – புல்லட் சுனில்
மாளவிகா நாயர் -அனன்யா
நிரூப் – அன்வர்
மாஸ்டர் சௌர்யா – இஷான் நாராயன்

நிஜ பைக் ரேஸ்ராகவே மாறிவிட்டார் ஷர்வானந்த்.. 22 வயது இளைஞன் 42 வயது தந்தை என இரண்டிலும் உடல் மொழியிலும் வேறுபாடு காட்டி மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.. கடினமான உழைப்பை கொடுத்திருப்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர வைத்திருக்கிறார்..

இரண்டாம் கதாநாயகன் போல படம் முழுக்க தன்னுடைய நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார் டாக்டர் ராஜசேகர்.. கண்டிப்பான தந்தை, பாசமான தாத்தா, என நடிப்பை கொடுத்திருக்கிறார்..

நாயகியாக மாளவிகா.. ஜாலியான காதலியாக வந்து பொறுப்பான மனைவியாக மாறி இருக்கிறார்..

அன்வர் கேரக்டர் நடித்த பைக் ரேஸ்சரும் (நிரூப்) அருமையான நடிப்பு.. அதுபோல குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் சௌர்யா பாராட்டுக்கள் பெறுகின்றனர்

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எழுத்து & இயக்கம் : அபிலாஷ் ரெட்டி
வழங்குபவர்: விக்ரம் ரெட்டி
தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி
இசை: ஜிப்ரான் வைபோதா
பேனர்: UV கிரியேஷன்ஸ்
DOP: ஜே யுவராஜ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்
எடிட்டிங் : அனில் பசாலா
கலை இயக்குனர்: ஏ பன்னீர் செல்வம்
எழுத்தாளர்கள்: எம்.வி.எஸ். பரத்வாஜ், ஷ்ரவன் மாதால
சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்
நடன இயக்குனர்கள்: ராஜு சுந்தரம், சேகர் விஜே, விஸ்வ ரகு
ஒலி வடிவமைப்பு: Sync Cinema
ஆடை வடிவமைப்பாளர்கள்: தோட்டா விஜய பாஸ்கர், ரஜினி, ரேகா பொக்கரபு
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெகதீஷ் தலசிலா
மக்கள் தொடர்பு – யுவராஜ்

பைக் என்றாலே அந்த சப்தம் தான்.. அந்த சப்தத்தை படம் முழுக்க தெறிக்கவிட்டுள்ளார் ஜிப்ரான்.. இடைவேளைக்குப் பிறகு பைக் சத்தம் நம் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். பல பைக்குகள் செல்லும் அந்த சப்தத்தை எப்படி எல்லாம் பின்னணிசையில் சேர்த்தாரோ தெரியவில்லை.. அவ்வளவு அழகாக ரசிக்கும் படி செய்து இருக்கிறார் ஜிப்ரான்..

யுவராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் நிஜ பைக் ரேஸ்களை நேரில் சென்று பார்த்தது போல உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.. அதற்கு ஏற்ப எடிட்டரும் பக்காவாக எடிட்டிங் செய்து நம்மை சீட்டு நுனியில் உட்கார வைத்து விட்டார்

படம் முழுக்க பைக் – பைக் ரேஸ் – சாம்பியன் இதுதான் போட்டி களம் என்றாலும் அந்த பரபரப்பில் கூட தந்தை மகன் பாசம், தாத்தா பேரன் பாசத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லி கண்கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி..

Related posts

Leave a Comment