கதை…
நாயகன் நிகில் ஏலகிரியில் உள்ள ஒரு விடுதியில் ரூம்பாயாக வேலைக்கு சேர்கிறார்.. அங்கு சேர்ந்த பின் தான் அவருக்கு அங்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் தெரிய வருகிறது..
இதனையடுத்து நேர்மையாக செயல்பட நினைக்கிறார் நிகில். அங்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே கொண்டு வருகிறார்.. இதனால் அந்த அங்கு உள்ளவர்களுக்கும் நிகில்க்கும் பிரச்சினை ஏற்படுகிறது..
அதன் பிறகு நடந்தது என்ன.? நிகில் இந்த குற்றச்சாட்டுகளை வெளியே கொண்டு வந்தாரா.? காவல்துறை என்ன செய்தது.? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
நாயகன் C.நிகில் (சஞ்சய்), நாயகி ஹர்ஷா (நிஷா) இமான் அண்ணாச்சி (Sunny Funny அண்ணாச்சி), பிர்லா போஸ் (சந்துரு), youtube புகழ் காத்து கருப்பு கலை (பிச்சாண்டி), இன்ஸ்டா புகழ் கற்பகம் (சுமதி), கவிதா விஜயன் (இனியா), சமீர் (James Zakiria), சிட்டி ராஜா (TPT Guna), அருண்ராஜா (Villain), பிரபாகர் (இன்பதுரை ) கேரளா பெஹமின் (ஷாலினி)
இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
ஆக்சன் மற்றும் டான்ஸ் என இரண்டிலும் அசத்தியிருக்கிறார் நாயகன் நிகில்.. முதல் படம் என்றாலும் தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்து விடுகிறார்..
நாயகி ஹர்ஷா.. சில காட்சிகள் மட்டும் வந்து சினிமா கதைக்கு நாயகி தேவை என்பதை உணர வைக்கிறார்..
வில்லனாக அருண் ராஜா நடித்திருக்கிறார்.. காப்பாளராக பிரபாகர் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்..
இமான் அண்ணாச்சி, காத்து கருப்பு கலை, பிர்லா போஸ் அனைவரும் படத்தின் கேரக்டர் பங்களிப்பிற்கு உதவியிருக்கின்றனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் Dft
வீடு விடுதி சொகுசு பங்களா என அனைத்தையும் பல கோணங்களில் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்..
பாடல்கள் – சூரியமூர்த்தி
இசை – வேலன் சகாதேவன்
படத்தொகுப்பு – D.V. மீனாட்சி சுந்தர்
பட்டர்பிளை பாடலும் அப்பா பெருமை பேசும் பாடலும் வரிகள் ரசிக்க வைக்கிறது.. எடிட்டரும் தன் பணியில் பாராட்டுகளை பெறுகிறார்..
நடனம் – தினா
ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன்
விளம்பர வடிவமைப்பு S.B.ராஜா
உடைகள்- வளையாபதி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு நிறுவனம் – ACM சினிமாஸ்
தயாரிப்பு – சூரியகலா சந்திரமூர்த்தி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.
இவர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.
சொகுசு பங்களாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் அதன் மூலம் கோடிகளை குவித்து சொகுசு வாழ்க்கை வாழும் மனிதர்கள் என பல விஷயங்களை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. ஒரு உண்மைச் சம்பவத்தை கிரைம் பாணியில் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜெகன் ராயன்..
