கதை…
கேரளாவில் இருந்து சென்னைக்கு தன் மகளின் சிகிச்சைக்காக வருகிறார் இந்திரன்ஸ்.. வந்த இடத்தில் தன் நகை பணத்தை பறி கொடுக்கிறார்.. எனவே புகார் கொடுக்க அது வழக்காக மாறி விசாரணைக்கு வருகிறது.. அவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்து விடலாம் என திட்டம் போடுகிறார் வக்கீல் ஆர்.ஜே பாலாஜி..
இவரின் சாம்ராஜ்ஜியம் அந்த நீதிமன்றம் என்ற சொல்லலாம்.. நீதிமன்றத்தையும் நீதிபதியையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வக்கீல் ஆர் ஜே பாலாஜி..
வழக்கு மெல்ல மெல்ல நகரும் நேரத்தில் தன் மகளையும் பறிகொடுக்கிறார் இந்திரன்.. இதனை எடுத்து அந்த கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பு சாமியிடம் தன் பிரச்சனையை முறையிடுகிறார்.. அப்போது சூர்யா கருப்பசாமியாக வக்கீலாக உருவெடுத்து வருகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை

நடிகர்கள்…
படத்தின் கதாநாயகன் சூர்யா என்றாலும் கதையின் நாயகன் ஆர் ஜே பாலாஜி தான் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் சூர்யா வருகிறார்.. அதுவரை ஆர் ஜே பாலாஜியின் ஆட்டம் தான் படம்.. இதை ஒப்புக்கொள்ள சூர்யாவிற்கு தாராள மனசு தான்..
ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார் சூர்யா.. கருப்புசாமிக்கு பில்டப்பும் கொடுத்திருக்கிறார்..
நாயகியாக த்ரிஷா வக்கீலாக வந்து கொஞ்சம் கதைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்..
நீதிபதியாக நடராஜ்.. இப்படியும் வழக்கறிஞர்கள் இருப்பார்களா என்று நம்மை வியக்க வைக்கிறார்கள்..
மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் அவரது மகள் இருவரும் சென்டிமென்ட் நடிப்பில் கண்கலங்க வைக்கின்றனர்..
தொழில்நுட்ப குழு…
சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் பரவாயில்லை.. பின்னணி இசை மிரட்டல் ரகம்..
ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாக்கி இருக்கிறது.. படத்தொகுப்பாளரும் தன் பணியில் சிறப்பு சேர்த்திருக்கிறார்..
இயக்குனர் கதையின் நாயகன் என ஒட்டுமொத்த பாராட்டுகளையும் அள்ளிக் கொள்கிறார் ஆர் ஜே பாலாஜி.. தன் பக்தனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு ரூபத்தில் கடவுள் வருவார் என்பது போல காட்சிப்படுத்தி இந்த கருப்புசாமிக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்..

