கதை…
அரசு உயர் பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை வைத்து இந்த எக்ஸாம் என்ற இணைய தொடர் உருவாகியுள்ளது..
ஒரு பகுதியில் உள்ள அரசு பதவிப் பணியில் சேர வருகிறார் அதிதி பாலன்.. வரும் வழியில் அவரை கடத்தி விடுகிறார் துஷாரா விஜயன்.. கடத்தி விட்டு அந்த இடத்திற்கு பணியில் சேர நுழைகிறார்.. அவரை விட்டு இவர் அந்த பணியில் சேர என்ன காரணம்.? இதன் பின்னணியில் நடந்தது என்ன.? அரசு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் என்ன.? அதற்கு சில அதிகாரிகளை உடந்தையாக இருப்பதன் பின்னணி என்ன.? இதனால் திறமையானவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் பாதிக்கப்படுவது ஆகியவைகளை EXAM இணைய தொடர் விவரிக்கிறது..
நடிகர்கள்…
துஷாரா விஜயன் – ஜான்சி
அதிதி பாலன் – மரமல்லி
அப்பாஸ் – ஜெயச்சந்திரன்
வசுந்தரா. சி – சரண்யா
நரேன் மணி – குமரேசன்
இந்த அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை கொடுத்து இந்த இணைய தொடரை மேலும் சிறப்பாக்கி இருக்கின்றனர்.. அரசு தேர்வு முறைகேடு முக்கியமாக வினாத்தாள் கசிவும் காரணம் என்பதையும் அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர் இயக்குனர்..
இறுதியில் துஷாரா விஜயன் மற்றும் நரேன் மணி நடத்தும் உரையாடல்கள் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது..
தொழில்நுட்ப குழு…
எழுத்து & இயக்கம் : ஏ. சற்குணம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் : புஷ்கர் & காயத்ரி
வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து வழங்கியுள்ளது
தயாரிப்பாளர்கள்: கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார்
ஒளிப்பதிவு : அருண் அமரேந்திரன்
இசையமைப்பாளர்: சாம் சி எஸ்
எடிட்டர் : ரிச்சர்ட் கெவின். ஏ
ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஏழு எபிசோடுகளை இந்த எக்ஸாம் இணைய தொடர் கொண்டுள்ளது.. அதில் முதல் மூன்று எபிசோடுகள் மிகவும் பரபரப்பானவை என்றும் சொல்லலாம்.. அடுத்தது என்ன நடக்கும் என்ற பதபதைப்பை நம் மனதில் உருவாக்குகிறது..
இறுதியான எபிசோட் மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூட சொல்லலாம்.. அரசு ஊழியர்கள் அரசு தேர்வுகள் அதில் நடக்கும் முறைகேடுகள் அதற்கு பின்னணியில் இருக்கும் அரசு அதிகாரிகள்.. அதற்குப் பின்னால் இயங்கும் கார்ப்பரேட் என அனைத்தையும் அப்பட்டமாக இந்த தொடர் விவரிக்கிறது..
அதேநேரம் காவல்துறை உயர் அதிகாரி ஆள்மாராட்டம் செய்வது எளிதான காரியம் அல்ல.. அவரின் புகைப்படம் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டிருக்கும் அப்படியான சூழ்நிலையில் ஆள் மாறாட்டம் நடக்காத காரியம்.. என்ற லாஜிக் மிஸ்டேக் படத்தில் கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது..
—
