அவரது கணவரும், தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்க தலைவருமான பிரேம்நாத், நடிகை தமிழ் செல்வியின் 30’ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, (27.05.2026) நாளை காலை 10′ மணிக்கு, சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்கத்தில், நடிகையும், சங்க உறுப்பினருமான தமிழ் செல்வி திருவுருவ படத்திறப்பு நிகழ்வும், அதனை தொடர்ந்து, 1000 பேருக்கு அன்னதானமும் வழங்குகிறார்!
மனிதநேயம் லயன் டாக்டர் EG.சுவாமிநாதன் மற்றும் இளம் தொழிலதிபர் துபாய் மதன் ஆகியோர் தலைமையில், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் எம்எல்ஏக்கள் தி.நகர் பி.சத்யா, வி.என்.ரவி, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், நடிகர்கள் மன்சூர் அலிகான், ஜீவா, தாமு, கிங்காங், விஜய் கணேஷ், நாமக்கல் எம்ஜிஆர் ஆகியோர் மறைந்த நடிகை தமிழ் செல்வியின் திருவுருவ படத்தை திறந்து வைக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் திரை நட்சத்திரங்கள், மேடை நடன கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் கலந்துக் கொள்கிறார்கள்!

