BLAST விமர்சனம்..குடும்ப ஆக்சன் திரைப்படம் [. 4.5/5.. ]

கதை…

தனது மனைவி அபிராமி.. மகள் ப்ரீத்தி.. தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கராத்தே மாஸ்டர் அர்ஜுன்…

சிறுவயது முதலே தன் மகளுக்கு கராத்தே கற்றுக் கொடுத்து அநியாயத்தை தட்டிக் கேட்கும் மனப்பக்குவம் என்றும் வேண்டும் என தைரியப் பெண்ணாக வளர்த்து வருகிறார்.. இதனால் அடிக்கடி பல அடிதடி பிரச்சனைகளை வீட்டுக்கு கொண்டு வருகிறார் ப்ரீத்தி.. இதனால் கோபமடைகிறார் அபிராமி..

பெண்ணுக்கு வரன் பார்க்கும் நேரத்தில் இதுபோல பிரச்சனைகளை கொண்டு வந்தால் மகனின் வாழ்க்கை பாதிக்கப்படும் என எண்ணுகிறார்..

இந்த சூழ்நிலையில் வில்லன் ஜான் கொக்கேன் மூலம் இவரது குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை வருகிறது.. ஆனால் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் அர்ஜுன் குடும்பத்திற்கு வரவே அந்த குடும்பம் என்ன செய்தது.? பெரிய ரவுடி கும்பலை இவர்களால் எதிர்த்து போராட முடிந்ததா? என்பதெல்லாம் மீதி திரைக்கதை.

நடிகர்கள்…

நாட்டுப்பற்று மிக்கவராக காவல் அதிகாரியாக இப்படி பல பரிமாணங்களில் ஆக்ஷன் கிங் அர்ஜுனனை பார்த்திருப்போம்.. இதில் ஒரு சராசரியான நடுத்தர வாழ்க்கை வாழும் குடும்பஸ்தனாக வருகிறார்..

கராத்தே என்பது தற்காப்புக்கு மட்டுமல்ல அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டும் என்ற இவரது எண்ணம் இவரது கேரக்டருக்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது.. ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கிறார்..

இவர் ஆக்ஷன் கிங் என்றால்.. அபிராமி மற்றும் ப்ரீத்தி ஆக்சன் கியூன் எனலாம் இருவரும் பின்னி பெடல் எடுத்துள்ளனர்.. ஆப்ஷன் அட்டகாசம் செய்துள்ளனர்..

ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர்

இவர்களுடன் நடித்துள்ள ஒவ்வொரு கலைஞர்களுக்கும் பெரிய அடையாளம் கொடுக்கும்படி கேரக்டர் அமைந்திருப்பது ஹீரோவின் பெரிய மனதையும் இயக்குனரின் அழகான திரைக்கதையும் காட்டுகிறது..

காவல்துறை அதிகாரிகளும் ரவுடி கும்பல் நபர்களும் மிகச் சிறப்பாக தங்கள் கேரக்டரை பிரதிபலித்துள்ளனர்..


தொழில்நுட்ப குழு…

இசை: ரவி பஸ்ரூர்

ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன்

இயக்கம்: சுபாஷ் கே ராஜ்

பிஆர்ஓ: நிகில் முருகன்

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன்.., பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங்.. 80% படம் கிட்டத்தட்ட ஒரே இரவில் நடக்கிறது.. அதை அழகாக லைட்டிங் கொடுத்து அதற்கு ஏற்ப படமாக்கியிருப்பது சிறப்பு.

முக்கியமாக படத்தின் திரைக்கதை வேகத்திற்கு ஏற்ப எடிட்டிங் செய்து நம்மை சீட்டு நுனியில் எடிட்டரும் உட்கார வைத்திருக்கிறார்.

ஒரு பெரிய இன்டர்நேஷனல் ரவுடி கும்பலை ஒரு சின்ன குடும்பம் எதிர்க்கிறது என்பது நம்ப முடியாத லாஜிக்காக இருந்தாலும் அதற்கு கராத்தே பக்கபலமாக இருப்பது சிறப்பு.. அது எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்..

முக்கியமாக குழந்தைகளுக்கு பள்ளியில் கராத்தே பயிற்சி அவசியம் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.. இன்று அதிக அளவில் நாம் பார்க்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு இது ஒரு தீர்வாக அமையும்..

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை வேற லெவல்.. இதுபோல இடைவெளி காட்சியை சமீபத்தில் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்..

சண்டைப் பயிற்சியாளர் பீனிக்ஸ் பிரபு… படம் முழுக்க ஆக்சன்.. படம் முழுக்க பிளாஸ்ட்.. சண்டைக் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார் பீனிக்ஸ் பிரபு..

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ளார்.. இவர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்..

எங்கும் தன்னுடைய குருநாதரின் சாயல் இல்லாத அளவிற்கு படத்தை வேற ரூட்டில் ஆக்சன் மூடில் பயணிக்க வைத்திருக்கிறார்.. பெரும்பாலும் ஆக்சன் என்றால் ஹீரோதான்.. ஆனால் இதில் முழுக்க அபிராமி அவரது மகள் ப்ரீத்தி முகுந்தன் என குடும்பம் முழுவதையும் ஆக்ஷனில் அட்டகாசம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர் சுபாஷ்

தயாரிப்பு : கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாக்கம்

தனி ஒருவன்.. லவ் டுடே உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமையும்..

Blast movie review

Related posts

Leave a Comment