கதை..
பெரும்பாலும் ஒரு படத்தில் ஒரு கதையில் ஒரு விளையாட்டு போட்டி இருக்கும்.. ஆனால் இதில் மூன்று கதைகளை அமைத்திருக்கிறார்.. மூன்று விளையாட்டுகளிலும் ராம்சரண் ஆட்டநாயகன்
மலைவாழ் மக்களில் ஒருவன் ராம்சரண் இவரது அம்மா குயிலி.. அந்த பகுதி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்… பெத்தி என்றால் கிரிக்கெட்டில் பயங்கர ஃபேமஸ்… எனவே இவரை வைத்து பலரும் கூலி ஆட்டக்காரனாகபந்தயம் கட்டி வருகின்றனர்.. இவரும் பல சாதனைகள் படை த்து வருகிறார்..
ஆனால் இவருக்கும் இவரது இன மக்களுக்கு என்று எந்த அடையாளமும் இல்லை.. இவரது ஊரில் ஒரு ரயில்வே நிலையம் கூட கிடையாது.. இதனால் ஒருநாள் முழுக்க இவர்கள் ஊருக்கு நடந்து வருகின்றனர்..
இப்படியான சூழ்நிலையில் தனக்காகவும் தன் மக்களுக்காகவும் ஓர் அடையாளத்தை உருவாக்க நினைக்கிறார் ராம்சரண்..
எனவே அடுத்த கட்டத்திற்கு குஸ்தி பயிற்சியை மேற்கொள்கிறார்.. சிவராஜ்குமார் இடம் குஸ்தி கற்க்கிறார்.. அதன்படி இந்திய அளவிலும் புகழ் அடைகிறார்..
பின்னர் ஒரு விபத்தில் தன் கால்களை இழக்க வேண்டிய சூழ்நிலை.. அதன் பிறகு இவர் என்ன செய்தார்.? இவரால் மேலும் இந்திய அளவில் சாதிக்க முடிந்ததா? ஊருக்கு ரயில் நிலையம் வந்ததா.? மக்களுக்கு அடையாளத்தை உருவாக்கினாரா? என்பதெல்லாம் கதை..
நடிகர்கள்…
கிரிக்கெட் பிளேயராக.. குஸ்தி வீரனாக.. ஓட்டபந்தய வீரனாக.. என ஒவ்வொரு கேரக்டருக்காக தன்னுடைய முழு அர்ப்பணிப்பை கொடுத்து இருப்பது ஒவ்வொரு ஃப்ரைமிலும் தெரிய வைக்கிறார் ராம்சரண்..
குஸ்தி போட்டியில் ஒரே ஆட்டத்தில் இரு பயில்வான்வுடன் ராம்சரண் மோதும் காட்சி இந்தப் படத்தின் பெரிய ஹைலைட்.. அதுபோல ரன்னிங் பந்தயத்திலும் அசத்தியிருக்கிறார்..
கிரிக்கெட் பேட் டே ஸ்டைலாக தூக்கி போடுவதும் பீடி குடிப்பதும் என படம் முழுவதும் பக்கா மாஸ் காட்டியிருக்கிறார்…
அதுபோல தன்னுடைய கால் முறிந்த பிறகு ஆஸ்பத்திரியில் அழும் காட்சிகள் ரசிகர்களை கண்கலங்கம் வைத்திருக்கிறார் ராம்சரண்..
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.. பாவம் கதைக்கு கொஞ்சம் கூட ஒட்டாமல் கவர்ச்சிக்காக மட்டுமே வருகிறார் ஜான்வி..
குஸ்தி வாத்தியாராக சிவராஜ்குமார்.. ஒரு கை தேர்ந்த வீரனாக தன்னுடைய நிதானமான நடிப்பை கொடுத்துள்ளார்..
ஜான் விஜய் வந்தாலும் இவரது நடிப்பு எரிச்சல்.. காரணம் ஓவர் ஆக்டிங்…
ரயிலை நிறுத்தச் சொல்லி முப்பது வருட போராட்டம் சிவப்பு கொடி காட்டும் ஜெகபதிபாபு நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.. இவரது முடிவு பெரும் சோகம்..
தொழில் நுட்ப குழு…
இசை – ஏ ஆர் ரஹ்மான்.. தன்னுடைய அதிரடி பின்னணி இசையால் படத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா மைலேஜ் கொடுத்து இருக்கிறார் ரகுமான்.. ராம்சரண் ஆட்டத்திற்கு இவர இசை பெரிய பலம்..
சிக்கிரி பாடலுக்கு தியேட்டரை அதிரவிட்டிருக்கிறார்..
ஒளிப்பதிவாளர் – ஆர்.ரத்னவேலு.. படத்தை முழுவதுமாக ரசிக்க இவரது ஒளிப்பதிவு முக்கியம்.. 1980 காலகட்டங்களை அப்படியே கொண்டு வந்து நிறுத்திருக்கிறார்… படத்தில் கிரிக்கெட் காட்சி ஆகட்டும் குஸ்தி காட்சி ஆகட்டும் ரன்னிங் ரேஸ் ஆகட்டும் என ஒவ்வொன்றையும் காலகட்டத்திற்கு ஏற்ப இவரது கேமரா படம் பிடித்து இருப்பது ரத்தினமாய் ஜொலிக்கிறது..
நடன இயக்குனர் மற்றும் சண்டை பயிற்சியாளர் இருவரும் பெத்தியை குதிரை வேகத்தில் ஓட்டி செல்லும் நபர்கள்.
ஷாம் கௌஷல், மைபம் நபகன்டா & சுப்ரீம் சுந்தர் ஆகியோர் சண்டைக் காட்சிகளை அதிரடியாக தெறிக்க விட்டுள்ளனர்..
இயக்குநர் – புஜ்ஜி பாபு சனா… தெலுங்கில் பல வெற்றி படங்களை குவித்தவர் தமிழ் இயக்குனர்களுக்கு சவால் விட்டு உள்ளார்.. திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.. ஆனால் படத்தின் மேக்கிங் படத்தை மெய் சிலிர்க்க வைக்கிறது..
நாயகன் ராம் சரணை சரியாக தேர்வு செய்த இவர் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை ஏன் எப்படி கவர்ச்சி பொம்மையாக்கி இருக்கிறார் தெரியவில்லை.. நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஒட்டவில்லை… அப்படி இருக்கும்போது நாயகனை நினைத்து ஜான்வீ தனக்குத்தானே தாலி கட்டிக் கொள்வதெல்லாம் ரொம்ப ஓவர்..
Peddi movie review
