Double Occupancy விமர்சனம்…

கதை…

டபுள் ஆக்குபன்சி.. ஒரே உருவம் ஒரே நாளில் 12 மணி நேரம் ஆண் 12 மணி நேரம் பெண் என்று இருந்தால் எப்படி இருக்கும்.? இந்த லாஜிக் இல்லாத கதையை நம்ப வைக்கும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி..

போஸ் வெங்கட் & வினோதினி தம்பதிகளுக்கு கடவுள் அர்த்தநாரீஸ்வரர் அருளுடன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கிறார் சந்தோஷ் என்ற ரேஷ்மா. ரஜினியின் பிறந்தநாளில் இவர் பிறந்ததால் இவருக்கு ரஜினி என்று பெயர் வைக்கின்றனர்..

பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இவர்கள் வாழ்கின்றனர்.. பகலில் ஒருவர் வாழும் வாழ்க்கை இரவில் உள்ளவருக்கு தெரியாது… இரவில் வாழும் வாழ்க்கை பகலில் உள்ளவர்க்கு தெரியாது..

இப்படியான சூழ்நிலையில் இவர்கள் வாழ்ந்தது எப்படி.? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது எப்படி.? இவர்களின் லைப் ஜெயித்தது எப்படி என்பதெல்லாம் ஜாலியான டபுள் ஆக்குபன்சி..

நடிகர்கள்…

Santhosh, Reshma Venkatesh, Samyuktha Viswanathan, Vinoth Kishan and VTV Ganesh…

படத்தில் பாதி ஆண்.. பாதி பெண் என்ற கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்ட சந்தோஷ் & ரேஷ்மாவை நிச்சயம் பாராட்ட வேண்டும்..

இரவில் 12 மணி நேரம் ஆம்பளையாக சந்தோஷ் நடித்திருக்கிறார்.. மீதி நேரம் பகலில் பெண்ணாக ரேஷ்மா நடித்திருக்கிறார்.. கேரக்டர் பெயர் ரஜினி..

ஒரே கேரக்டரில் இருவர்… இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் என்று சொல்லலாம்.. அவரின் டிரஸ் இவருக்கு.. இவரின் டிரஸ் அவருக்கு என மாறும் போதும் ரசிக்க வைக்கிறார்கள்..

பார்ட்னர் கிடைத்துவிட்டால் 24 மணி நேரம் பரவாயில்லை 12 மணி நேரம்.. அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் என்று வினோத் கிஷன் சொல்வது சிரிப்புடன் ரசிக்க வைக்கிறது..

ரேஷ்மாவை காதலிக்கிறார் வினோத் கிஷன். சந்தோஷை காதலிக்கிறார் சம்யுக்தா.. வினோத்தை ரேஷ்மா காதலிப்பதும்… சம்யுக்தாவே சந்தோஷ் காதலிப்பதும் அதை சொல்ல முடியாமல் தங்களது பிரச்சனையை மறைக்கும் காட்சிகளில் பரிதவிப்பை அழகாக காட்டியுள்ளனர்..

இந்த முக்கோண காதல் கதையில் சிரிப்புக்காக இணைந்திருக்கிறார் VTV கணேஷ்.. அவர் காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமில்லை..

தொழில்நுட்ப குழு…

Editor: Praveen Antony
Costume Designer: Sruthi R. Kannan
Pro: Riaz K Ahmed

Director: Aswin Kandasamy
Producers: ACS Arun Kumar (Benzz Media) and Khushbu Sundar (Avni Movies)

Creative Producer: Anandita Sundar
Music: Sam CS
DOP: Santhakumar Chakravarthy

சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. படத்தை கலர்ஃபுல்லாக யூஸ் புல்லாக கொண்டு சென்று இருக்கிறார்.. ஆண் பெண்ணாக பெண் ஆணாக மாறும் காட்சிகளில் கிராபிக்ஸ் அழகாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது…

சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.. பாடல்களில் இளைஞர்களை கவரும் வகையில் மெட்டு அமைத்து இருக்கிறார்..

மின்னல் அடிக்குதே.. மின்னல் அடிக்குதே.. பெண்ணே உன்னை கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி.. என்ற பாடல் சூப்பர்..

உயிரே. உயிரே.. அழகே… அழகே.. பாடல் பாடலில் சம்யுத்தா – சந்தோஷ ஜோடி நம்மை சூடேற்றி இருக்கிறார்கள்..

ஒரு நாளில் 12 மணி நேரம் ஆண் 12 மணி நேரம் பெண் என்ற நம்ப முடியாத கற்பனை கதையாக இருந்தாலும் அந்த லாஜிக் ஏதும் இல்லாமல் மேஜிக் செய்து இருக்கிற அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி..

இந்த மேஜிக்கை முழுவதுமாக நம்பி இணை தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் குஷ்புவின் மகள்.. மகளுக்காக கிளைமாக்ஸ் காட்சியில் கெஸ்ட் ரோலில் டாக்டராக என்ட்ரி கொடுக்கிறார் குஷ்பூ..

வி டிவி கணேஷ் வரும் காட்சிகள் சிரிப்புக்கு கேரண்டி.. ஆனால் சில இடங்களில் டபுள் மீனிங் குறைத்திருக்கலாம்.. ஆனால் எந்த இடத்திலும் கவர்ச்சி இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் அஸ்வின் படத்தை கொடுத்து இருப்பதற்காக நிச்சயம் பாராட்டலாம்..

Double Occupancy movie review

Related posts

Leave a Comment