அனந்தன் காடு விமர்சனம்…

கதை…

கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடக்கும் கதை இது.. தமிழ் ரசிகர்களுக்காக மலையாள நடிகர்களும் தமிழ் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது..

இலங்கையில் வாழும் ஆரியா தமிழர்.. ஒரு கட்டத்தில் அகதியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்.. திருவனந்தபுரத்தில் வசிக்கும் போது அங்கு உள்ள ஒரு கூலிப்படையில் இணைகிறார்..

நால்வர் அணியில் உள்ள அந்த கூலிப்படையில் இணைந்த பிறகு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களுக்கு ஆரியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? அந்த சதி திட்டங்களுக்கு அவர் துணை சென்றாரா.? அவர்களின் நோக்கம் என்ன.? கூலிப்படையாக செயல்படுவதால் கேரளா அரசியலில் ஏற்படும் நிகழ்வுகள் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்யாவின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி காணப்படுகிறது.. பேச்சு குறைவு செயல் அதிகம் என்பது போல ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்..

முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத்.. இந்த நால்வரின் கதாபாத்திரங்கள் படத்திற்கு பெரிய பலம்.. போராளிகளின் ஒற்றுமையை இவர்களின் கதாபாத்திரங்கள் சொல்லும்..

இதில் இந்திரன்ஸ் கதாபாத்திரம் அவரது தோற்றத்திற்கு சம்பந்தமில்லை. ஆனாலும் கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பில் கலங்கடித்து விட்டார்.. சமீபத்தில் கூட சூர்யாவின் கருப்பு படத்தில் நடிப்பில் அசத்தியிருந்தார் இந்திரன்ஸ்..

சுனில், விஜயராகவன், ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல்.. ஆகியோரின் கேரக்டர்கள் கதை ஓட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளது.. சுனில் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு கேரளாவின் அடர்ந்த பகுதிகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.. அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை சிறப்பு.. ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகளுக்கு ஏற்ற விறுவிறுப்பை கொடுத்துள்ளது..

எழுத்தாளர் முரளி கோபி.. தமிழீழ அரசியல்… கேரள அரசியல்… கூலிப்படை போராளி தலைவன்… குடும்ப ஒற்றுமை.. குழந்தை கடத்தல்.. இப்படியான கலவையான கதைகளைக் கொண்டு இந்த அனந்தன் காடு திரைக்கதையை அமைத்திருக்கிறார்..

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார்.. தரமான மலையாள படம் என்றாலும் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது.. படத்தின் மேக்கிங் அதன் பிரம்மாண்டம் அதற்கான காட்சிகள் அனைத்தும் பார்த்து ரசிக்கும் படியாக அமைந்துள்ளது…

ஆனால் கதை ஒரு பக்கம் வேகம் எடுக்கும் சூழ்நிலையில் திடீரென சென்டிமென்ட் நுழைந்து அதன் வேகத்தை தடுப்பதாகவே இருக்கிறது..

Related posts

Leave a Comment