அன்பே டயானா – விமர்சனம் 4/5…

கதை…

சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கிறார் நாயகன் பாரி இதே பகுதியில் வசிக்கிறார் ஆங்கிலோ இந்தியன் பெண் ரம்யா ரங்கநாதன்.. அப்பாவின் ஆசைப்படி ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறார்..

எனவே ரம்யா விடம் நெருக்கமாக பழகி காதலை சொல்கிறார்.. ஆனால் ரம்யா முதலில் மறுத்து அதன் பிறகு ஒரு டெஸ்ட் வைக்கிறார்..

இருவருக்கும் தெரியாமல் இருவரும் ஒரு டெஸ்ட் வைக்கின்றனர்.. அதில் ரம்யா தோல்வியடைகிறார்.. பாரி ஜெயித்து விடுகிறார்

இந்த பெண் நம் குடும்ப பாரம்பரியத்திற்கு செட்டாக மாட்டாள் என எண்ணுகிறார்..

அதன் பிறகு நடந்தது என்ன.? திருமணம் செய்து கொண்டார்களா என்பதெல்லாம் மீதிக்கதை…

நடிகர்கள்….

பாரி இளவழகன் – CSK சிருமாமில்ல சீதா கிருஷ்ணா
ரம்யா ரங்கநாதன் – மேஜிக் கோன்சால்வ்ஸ்
சேத்தன் – சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர்
ரோஜா செல்வமணி- சரளா
பரிதாபங்கள் கோபி – பெங்களூர் பாபா
செல் முருகன் – மங்கபாபு
நிகிலா சங்கர் – தனிஷா
இஸ்மத் பானு – சத்தியவதி
சுதர்சன் காந்தி – சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர்

பெரம்பூர் லோக்கல் பையனாகவே மாறி இருக்கிறார் நாயகன் பாரி இளவழகன்.. காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் போதும் அதன் பிறகு காதல் வேண்டாம் என வெறுக்கும் வேளையிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் நான்கு மொழி பேசி கைத்தட்டலை அள்ளுகிறார்..

பாரியின் அப்பாவாக சேத்தன்.. அனைவருக்கும் போட்டி போட்டு ஸ்கோர் செய்து இருக்கிறார்.. குடித்து விட்டு ஒரு கலாட்டா குடிக்காமல் ஒரு கலாட்டா என பின்னி எடுத்து இருக்கிறார்..

மீண்டும் தமிழில் ரோஜா.. குடும்பத்தை தாங்கும் பெண்மணியாக உயர்ந்திருக்கிறார்.. மாவு வித்தாலும் மாசான கேரக்டரில் ஜொலிக்கிறார்..

ஆங்கிலோ இந்திய பெண்ணாக ரம்யா ரங்கநாதன்.. அவர்களுக்கே உரிய கெத்தான நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.. அழகிலும் அரைகுறை ஆடையிலும் கவர்கிறார்..

பாரியின் தம்பியாக சுதர்சன் காந்தி.. அரசு உத்தியோகம் பொறுப்பான பிள்ளை என அசத்தியிருக்கிறார்.. ஆனால் இவரது காதல் ட்விஸ்ட் செம சூப்பர்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு விவேக் இல்லாமல் செல் முருகன்.. தாய் மாமனாக வந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்..

பரிதாபங்கள் கோபி.. எல்லாருக்கும் வணக்கம் பா ஆங்கிலோ இந்தியனை பற்றி எனக்கு தெரியாதது ஒன்னும் இல்லப்பா… என்று கோபி அடிக்கடி சொன்னாலும் ஒரு கட்டத்தில் அதுவே போர் அடிக்கிறது.. ஆனாலும் கிளைமாக்ஸில் இவரது ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.. கலக்கியிருக்கிறார்..

நிகிலா ஷங்கர் & இஸ்மத் பானு உள்ளிட்டோர் தங்கள் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பேனர்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்,  நியோ கேசில் கிரியேஷன்ஸ்  &  Era Entertainment
தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் &  Era Entertainment
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்

எழுதி, இயக்கி, நிகழ்த்தியவர்: பாரி இளவழகன்
இசை: பரத் சங்கர்


ஆடை வடிவமைப்பாளர்: அபிநந்தினி எம்
தலைமை ஒப்பனை கலைஞர்: F. சசி குமார்
சண்டைக் காட்சி: டான் அசோக்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

பரத் சங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.. துள்ளல் இசையை கொடுத்திருக்கிறார்…ஆனால் பெரும்பாலான பாடல்கள் கானா ரகத்தில் ராகத்தில் அமைந்துள்ளது..

ஒளிப்பதிவாளர் :  ஷெல்லி கேலிஸ்ட்
படத்தொகுப்பு : பார்த்தா MA
கலை இயக்குனர்: மகேந்திரன்

மூவரும் சரியான விகிதத்தில் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர.. முக்கியமாக ஒளிப்பதிவில் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் அந்த இடம் அழகோ அழகு..

ஆங்கிலோ இந்தியன் வீட்டின் அழகு.. தமிழ் தெலுங்கு பேசும் மக்களின் வீட்டு அலங்காரம் என அனைத்தையும் வேறுபடுத்தி காட்டி இருக்கிறார் கலை இயக்குனர்..

ஜமா என்ற வித்தியாசமான தரமான படைப்பை கொடுத்த பாரி இளவழகன் இந்த முறை முற்றிலும் கமர்சியல் பாணிக்குத் திரும்பி இருக்கிறார்.. அதிலும் வெற்றி பெற்று இருக்கிறார்.. கலகலப்பான இயக்குனராகவும் ஜாலியான நடிகராகவும் ஸ்கோர் செய்திருக்கிறார்..

கடுகடுப்பான அம்மா.. ஜாலியான அப்பா.. பாசமான அக்கா.. பொறுப்பான தம்பி… அனைவரையும் சமாளிக்கும் அத்லெட்டிக் பாரி என கவர்ந்திருக்கிறார்..

Anbe Diana movie review

Related posts

Leave a Comment