கதை…
கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் இளம் வயது முதல் அவர் செய்த தொழில் புரட்சி வரை இந்த படத்தில் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர காலத்திற்கு முன் அவரின் கண்டுபிடிப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனால் அவருக்கு ஆங்கிலேயர்கள் எந்த வகையான தடைகள் போட்டார்கள் தொல்லை கொடுத்தார்கள்.. அதையெல்லாம் எப்படி கடந்து இந்தியாவின் மாபெரும் சாதனையாளர் ஆனார் என்பதுதான் சரித்திர கதை..
நடிகர்கள்…
R. Madhavan
Priyamani
Jayaram
Dushara Vijayan
Sathyaraj
Vinay Rai
Aditi Balan
Karunakaran
Mohan Raman
Thambi Ramaiah
Tejeenthan Arunasalam
Brigida Saga
Sheela Rajkumar
Shilpa Sreekumar
ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து ஜிடி நாயுடு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மாதவன்.. 1930 அந்த காலகட்டத்திற்கு ஏற்ப உடல் மொழி.. அரசுக்கு அடிபணியாத நேர்மை.. உழைப்பாளி உன்னதமான மனிதர், எளிமையான உள்ளம் படைத்த மாமனிதர் என பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார் மாதவன்..
மாதவனுக்கு நிகராக சத்யராஜ் மற்றும் ஜெயராம்.. இருவரும் தங்களுடைய அனுபவ நடிப்பில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.. கல்வி இல்லாமல் உழைப்பை நம்பிய மனிதராக சத்தியராஜ்.. நேர்மையாக இருந்தாலும் உயர் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அதிகாரியாக ஜெயராம்..
இவர்களுடன் பிரியாமணி, துஷாரா விஜயன், ஷீலா, பிரிகிடா, வினய், அதிதி பாலன், கருணாக்கரன் உள்ளிட்ட பல கேரக்டர்களும் படத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளது..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
Director: Krishnakumar Ramakumar
Writers: Krishnakumar Ramakumar, R. Madhavan
Producers: R. Madhavan, Sarita Madhavan, Varghese Moolan, Vijay Moolan
Music Composer: Govind Vasantha
Cinematography: Aravind Kamalanathan
Editors: Bijith Bala, K. Sasi Kumar
Production Designer: Cyril Kuruvilla
Costume Designer: Jishad Shamsudeen
ஜிடி நாயுடுவுக்கு சர்வதேச அளவில் அவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் இந்திய நாட்டின் சில துரோகிகள் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்துக்கொண்டு (அரசு அதிகாரிகள்) அவரை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்தார்கள் என்பதை அப்பட்டமாக காட்டி இருக்கின்றார்.
இதனால் ஒரு தொழில் புரட்சியாளரை இந்தியா எப்படி அவமதிதது என்பதை இயக்குனர் கிருஷ்ணன்குமார் காட்டியிருக்கிறார்..
இயக்குனரும் இந்த படத்தில் என் எஸ் கே கேரக்டரில் தோன்றி சில காட்சிகள் வருகிறார்.. எம் ஆர் ராதா கேரக்டரில் ஜான்விஜய் நடித்திருக்கிறார்…
பெரும்பாலும் இது போன்ற வாழ்க்கை திரைப்படங்கள் ஒரு ஆவணம் படம் போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.. ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் படம் போல் பின்னணி இசை அதற்கான விறுவிறுப்பு என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்..
கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரின் பணியும் மிக சிறப்பானது.. அவர்கள் இந்த படத்தை 1930 – 50 கால கட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர்..
இதுநாள்வரை மெலோடி பாடல்களை கொடுத்து வந்த கோவிந்த் வசந்தா இதில் அதிரடியான பின்னணி இசை கொடுத்திருக்கிறார்.. பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம்..
