இருமுடி கட்டு – விமர்சனம் 4/5…

கதை…

சபரிமலை ஐயப்பன் முருகன் மீது அதீத பக்தி கொண்டவர் நாயகன் ரவி தேஜா… அதே சமயத்தில் தன் குடும்பம் மீதும் மகள் மீதும் பாசம் கொண்டவர்.. ஊரில் உள்ள அனைத்து பெண்களும் தன் மகளாக நினைப்பவர்.. யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் அடிதடியில் இறங்கி விளையாடுபவர்..

இவரிடம் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் சபரிமலைக்கு மாலை போடும் நாட்கள் தவிர மற்ற நாட்கள் குடி குடி குடி.. மதுபானம் தான் இவரது பலவீனம்..

இந்த நிலையில் இவருக்கு எதிராக சதி திட்டத்தை தீட்டுகிறார் வில்லன்.. அவர் சபரிமலைக்கு மாலை போடும் நாட்களில் சாந்தமாக இருப்பார் என்பதால் அந்த நாட்களில் அவரை கொல்ல திட்டமிடுகிறார்..

அப்போது என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை..


நடிகர்கள்…

Ravi Teja – Lead role
Priya Bhavani Shankar – Female lead
Sai Kumar – Important role
Baby Nakshathra – Ravi Teja’s daughter
Ajay Ghosh – Supporting role
Ramesh Indira – Supporting role
Swasika – Supporting role

வழக்கமான தெலுங்கு கமர்சியல் பாணியில் வந்திருக்கும் ஒரு படம் இது.. ரவி தேஜாவில் ஆக்சன் வரிசையில் இந்த படமும் இணையும்.. மகள் மீது பாசம்.. எதையும் செய்யும் துணிச்சல் என அசத்தியிருக்கிறார்.. மாலை போட்டு இவர் ஆடும் ஆட்டங்களும் ரசிக்க வைக்கிறது..

ப்ரியா பவானிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் தெலுங்கு இல்லத்தரசியாக கவருகிறார்.. அதே சமயம் மகளை இழந்து தவிக்கும் காட்சிகளை நம்மையும் ஆட வைக்கிறார்..

அஜய் கோஸ்.. ரமேஷ் இந்திரா உள்ளிட்டோரின் நடிப்பு மிரட்டல்.. குருசாமியாக வரும் சாய் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.. ஆனால் இவருடைய கேரக்டர் எதிர்பாராத திருப்பம்..

ரவி தேஜாவின் மகளாக நடித்த நட்சத்திராவும் அப்பாவுக்கு நிகராக பாசம் காட்டுகிறார் அக்காள் மீது மரியாதை வைத்திருக்கிறார்.. இவரது முடிவு எதிர்பாராத ஒன்று..

வில்லி ஸ்வாசிக்கா மிரட்டலான நடிப்பை கொடுத்திருகிறார்.

டெக்னீசியன்ஸ்

Director: Shiva Nirvana
Producers: Naveen Yerneni, Y. Ravi Shankar

Music Director: G. V. Prakash Kumar
Cinematography: Vishnu Sarma
Editor : Prawin Pudi

Art Direction: Bhargava Noundla
Action Choreographers: Ram-Lakshman, Real Satheesh
Choreographers: Baba Baskar, V. J. Shekar
Costume Designer: Rajesh Kamarsu
Makeup: I. Srinivasa Raju

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார்.. சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு அவர் போடும் மெட்டு இனி அடிக்கடி கேட்க தூண்டும்..

ஒளிப்பதிவும் படத்தொகுப்பம் கச்சிதம்..

குடும்ப செண்டிமெண்ட்… மகள் பாசம்.. ஆன்மீகம்… பாலியல் தொல்லை… அரசியல்வாதியின் அதிகார திமிரு என அனைத்தும் கலந்து கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வானா..

Irumudi Kattu movie review

Related posts

Leave a Comment