BEEP பீப் – விமர்சனம்…

கதை…

எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராகவ் இந்த படத்தில் கதாநாயகன்..

இவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெண் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைகிறார்… ஒரு பக்கம் இது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் மறுபக்கம் இது கொலை என சந்தேகிக்கப்படுகிறது..

இதனால் அந்த பெண்ணுக்கு நெருக்கமான ராகம் மீது போலீஸ் விசாரணை திரும்புகிறது.. ஆனால் அந்த மரணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்..

ஒரு கட்டத்தில் இவரின் எக்ஸ்ட்ரா சக்தியை நம்பும் போலீஸ் நித்திஷ் வீரா இவர் சொல்வதைக் கேட்கிறார்.. அதாவது இவர் நிரபராதி என்று நிரூபிக்க அவகாசம் கொடுக்கிறார்.. அதன் படி ஒரு மரணத்திற்கு இரண்டு பக்கமும் விசாரணை தொடர்கிறது..

யார் அந்த கொலையாளியை கண்டுபிடித்தனர்.? போலீஸ் கண்டுபிடித்தார்.? நாயகன் ராகவ் கண்டுபிடித்தார்.? அப்படி ராகவிடம் இருக்கும் அந்த அதிசய சக்தி என்ன என்பதுதான் திரைக்கதை..

நடிகர்கள்…

Raghav – ilanDevan
Sunaina – Yamini Lakshmanan
Kavya – Prerna Khanna
Nayana Kapoor – ItI Acharya
Suraj – Arun Mohan
Santa – Shravan Ramakrishnan
Helen – Juhi Sharma
Laya – Priyadharshini
Inspector – Nithish Veera
SI – Balaji
Vinodh – Rajavel
Harsh – Atul
Yohaan – G. Sivakumar
Hero Father – Venkat Ramesh
Prof Father in Law – Col R Ganesan
Prof Chidhambaram – L Shanmuga Sundar

பல ஆண்டுகளுக்கு முன்பே ரெடியான இந்த படம் BEEP தற்போது தான் திரைக்கு வந்துள்ளது.. எனவே ராகவ் காலேஜ் பையன் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. கிட்டத்தட்ட அவருக்கு ஒரு 25 வயது படத்தின் கேரக்டர் படி..

போலீசுக்கு தெரியாத கோணங்களில் அவர் கொலைக்கான காரணத்தை நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்கும்போது நமக்கும் அந்த விசாரணையில் இறங்க வேண்டும் என்று எண்ணம் வருகிறது..

நாயகி யாமினி… அழகிலும் உடலிலும் நடிப்பிலும் கவர்கிறார்..

சில வருடங்களுக்கு முன்பு மறைந்த நித்திஸ் வீரா (அப்படி என்றால் இந்த படம் எப்போது ரெடியாகி இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..) போலீஸ் ஆக நடித்திருக்கிறார்..

ப்ரொபஸர் கேரக்டரில் இந்தப் படத்தின் இயக்குனர் சண்முக சுந்தர் நடித்திருக்கிறார்.. இவரது கேரக்டர் படத்தில் மிகப்பெரிய திருப்புமுனை.. கிளீன் ஷேவிங் செய்து அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு மனைவிக்கும் தெரியாமல் இவர் செய்யும் சில்மிஷங்கள் தான் படத்தின் ஹைலைட்…

தொழில்நுட்ப குழு…

Director – L. Shanmuga Sundar
Executive Producer – Col R Ganesan
Cinematography – Pradeep Padma Kumar
Music Director – Prashanth Vihari
Art Director – Umesh Kumar
Editors – Abishek, Vignesh RL

PRO – A. John

பின்னணி இசை பாராட்டுப்படி இல்லை என்றாலும் ஓகே ரகம்.. ஒளிப்பதிவு ஏதோ பழைய பிரிண்ட் போல உள்ளது.. படம் ரிலீஸ் ஆகும் போது கொஞ்சம் மெனக்கெட்டு கலரிங் செய்து படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கலாம்..

பெரும்பாலும் ஹீரோ போலீஷ் இல்லையென்றாலும் அவரே போலீஸ் போல தன்னை நினைத்துக் கொண்டு தன் நுண்ணறிவு மூலம் விசாரணையில் இறங்குவார்.. அதுபோல தான் இந்தப் படத்தின் திரைக்கதை..

ஒரு பக்கம் போலீஸ் விசாரணை… ஒரு பக்கம் ஹீரோ விசாரணை… என இரு பக்கமும் விசாரணை இருக்கும்போது… அட நாமும் விசாரணை செய்யலாமா என்ற எண்ணத்தை இந்த ஸ்கிரீன் ப்ளே செய்துள்ளது..

அங்கே இயக்குனர் சண்முகசுந்தர் ஜெயித்திருக்கிறார்..

Related posts

Leave a Comment