டோரதி – விமர்சனம்..

கதை…

மதுரை கதைகளம்… 1990 காலகட்டம்..

அப்பா முத்துக்குமார்.. மூத்த அண்ணன் சௌந்தரராஜா… அவரது தம்பி சனந்த்.. சிறுவயதிலேயே அம்மா மற்றும் அக்காவை இழந்தவர்.. சொல்ல முடியாத வேதனையில் இருக்கும் சனந்த்க்கு ஆறுதலாக நண்பனாக வருகிறார் ரிஷிகாந்த்..

ஒரு கட்டத்தில் நண்பர்கள் பிரிந்து விடுகின்றனர்.. அப்போது தான் பெற்ற மகனையே கொலை செய்ய சொல்லி ரிஷிகாந்துக்கு தந்தை சொல்கிறார்..

இதனால் அதிர்ச்சி அடையும் ரிஷி என்ன செய்தார்? நண்பனை கொலை செய்தாரா என்பதெல்லாம் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை..

நடிகர்கள்..

ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.. இருவரும் நடிப்பில் போட்டி போட்டு செய்துள்ளனர்.. இதில் ஒரு படி மேலாக சனத் வித்தியாசமான தோற்றத்தில் நம்மை நடிப்பால் மெய்சிலிர்க்க வைக்கிறார்..

டோரதி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்.. மலையாள பெண் குட்டி ஆக வந்து நம்மை மயக்கி விடுகிறார்.. கொஞ்ச நேரம் வந்தாலும் இவரது கேரக்டர் பேசும் படியாக அமைந்துள்ளது..

இதுவரை ஏற்காத கேரக்டரில் முத்துக்குமார் அதிரடியான உடல் மொழியுடன் கொடுமைக்கார அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்..

கிராமத்து கெத்து இளைஞனாக சௌந்தரராஜா..

ரிஷிகாந்த் அம்மா கேரக்டர், திருநங்கை ஜீவா சுப்ரமணியம், கஜராஜ், ராம்ஸ் ராமச்சந்திரன் துரைராஜ், உள்ளிட்டோர் படத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்..

தொழில்நுட்ப குழு…

இளையராஜா இசையால் நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறார்… முத்துமணி.. கல்யாண விருந்து பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பின்னணி இசையில் என்றுமே நான் ராஜா தான் எனது என்பதை நிரூபித்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் எஸ். திரு.. அந்தக் காலத்து மதுரை மாவட்ட வீடுகளை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திருக்கிறார் கலை இயக்குனர்.. அவருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் திரு..

கணேஷ் சிவாவின் படத்தொகுப்பும் சிறப்பு..

இது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படம்.. அவரது இயக்கத்தில் இதுவரை வந்த படங்களில் இருந்து மாறுபட்ட ஒரு திரை காவியம் இது என்று சொல்லலாம்.. சிறந்த படைப்புக்காக தான் இளையராஜா உடன் இணைய காத்திருந்தார் போல..

இடைவேளை வரை கமர்சியல் விருந்து படைத்த அவர் இடைவேளைக்குப் பிறகு திருநங்கைகளின் வலியை அவர்களின் காதல் உணர்வுகளை எதார்த்தமாக உணர்வுபூர்வமாக உணர்ச்சி பொங்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்..

Related posts

Leave a Comment