அன்பில் அவன் விமர்சனம் 4. 25/5…

கதை….

பெற்றவர்களை விட்டு தன் காதலுக்காக தன்னை நம்பி வந்த மனைவி பிரீத்திக்கு அவளின் லட்சிய கனவுப்படி Home Stay வீடு வாங்க நினைக்கிறார் அசோக் செல்வன்..

அதன்படி சென்னையில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் ஒரு அழகான இடத்தைப் பிடித்து அங்கு HOME STAY ஒரு வீட்டை வாங்குகிறார்.. அங்கு சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்து கட்டணம் பெற்று அதன் மூலம் சம்பாதிக்க நினைக்கிறார்..

முதலில் அந்த வீட்டை விற்க மறுக்கும் ரேவதி ஒரு கட்டத்தில் அசோக் செல்வனின் பிடிவாதத்தால் அந்த வீட்டை விற்கிறார்..

தான் எத்தனையோ முறை முயன்றும் அந்த வீட்டை தனக்கு தரவில்லை ரேவதி என ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனில் இருக்கிறார் அந்த ஊர் எம் எல் ஏ.. இதனால் அசோக் செல்வனுக்கு சுற்றலாத்துறை மூலமாக பல இடைஞ்சல்களை கொடுக்கிறார்..

ஆனால் அசோக்செல்வன் விடாப்பிடியாக அந்த வீட்டுக்கு அரசு விதிமுறைகளை படி சான்றிதழ்களைப் பெற முயற்சிக்கிறார்..

அதனால் சட்டத்துறை மற்றும் காவல்துறை மூலமாக டார்ச்சர் கொடுத்து அசோக் செல்வனை அந்த ஊரில் இருந்து விரட்ட நினைக்கிறார் எம்எல்ஏ..

இதையெல்லாம் அசோக் செல்வன் எப்படி எதிர்கொண்டார்.? அரசியல்வாதியை அவரால் எதிர்க்க முடிந்ததா.? நீதி காவல் சவால்களை அவர் எப்படி எதிர்கொண்டார்.? இறுதியில் என்ன ஆனது.? என்பது தான் மீதி திரைக்கதை…

நடிகர்கள்…

அசோக் செல்வன் – சூர்யா
பிரீத்தி முகுந்தன் – இயல்
கதிர் பாலு – எம்.எல்.ஏ. ராஜநாயகம்
மஹா டெல்லி கணேஷ் – இன்ஸ்பெக்டர் தவசி

ரேவதி – ராணி பத்மினி

அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன்… இருவருக்கும் இடையில் காதல் மோதல் ஊடல் உண்டு.. செல்ல செல்ல சண்டைகள் போட்டாலும் மனைவிக்காக அவர் எடுக்கும் ரிஸ்க் கணவன் மீதான மரியாதையை கொடுக்கும்… ரியல் காதல் ஜோடிகள் போல ரொமாண்டிக்கில் கலக்கியுள்ளனர்..

இவர்களைத் தவிர ரேவதி மட்டுமே முகம் தெரிந்த நடிகை.. மற்றபடி அந்த ஊர் எம் எல் ஏ.. மிரட்டலான தோற்றம் நக்கலான நடிப்பு என கலக்கியிருக்கிறார்..

டேனியல் பாலாஜி சாயலில் இருக்கும் போலீஸ்… பழி வாங்கும் காவலராக நடிப்பில் மெச்சூரிட்டி காட்டியிருக்கிறார்…

சாபுமோன் அப்துசமத் – வழக்கறிஞர் மார்ட்டின்… நிறைய தமிழ் கொஞ்சம் மலையாளம் கலந்து அவர் மிரட்டும் பேச்சு நமக்கு எரிச்சலை உண்டாக்கும்.. அப்படி ஒரு சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்..

அசோக் செல்வனின் அம்மாவாக ஷீலாராஜ்குமார்.. ஒரு நூலகம் எவ்வளவு முக்கியமானது என்பதை அழகாக காட்சிப்படுத்திருக்கிறார்..

தொழில்நுட்பக் குழு…

இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : கௌதம் ராஜேந்திரன்
படத்தொகுப்பு : செல்வா ஆர்.கே.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்… பச்சை பசுமையை கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்..

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் வரிகள் புரிந்து கொள்ள ரசிக்க தக்க வகையில் உள்ளது..

சண்டைக்காட்சிகள் : பீட்டர் ஹெய்ன்

கத்தி உள்ளிட்ட படங்களில் நாம் பார்த்த டார்ச் லைட் சண்டை காட்சி ரசிக்க வைக்கிறது… மிரட்டலான சண்டைகளை வடிவமைத்துள்ளார்..

கதை : விக்னேஷ் ராஜா
திரைக்கதை : விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன், அசோக் செல்வன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார்… ஒரு வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் அரசியல்வாதி.. என சாதாரண திரைக்கதையாக இருந்தாலும் அதை மேக்கிங்கில் தரமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர். கார்த்திகேயன்..

இயக்கம் : ஆர். கார்த்திகேயன்
தயாரிப்பு : கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம்

அன்பில் அவன் என்ற தலைப்பைப் பார்த்தால் காதல் ரொமான்ஸ் இருக்கும் என நினைத்தால் காதலை விட ஆக்ஷன் அதகளம் செய்து இருக்கிறார் அசோக் செல்வன்..

தங்கள் கனவு லட்சியத்தை நிறைவேற்ற ஒரு ஜோடி படும் பாட்டை அழகாக உணர்வு பூர்வமாக மிரட்டலாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன்..

Related posts

Leave a Comment