Don’t Trouble The Trouble விமர்சனம்.. – வில்லனிடமிருந்து தப்பிக்க பேயிடம் மாட்டிக் கொண்ட ஹீரோ

கதை…

நாயகன் பகத் பாசில் ஒரு கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்… அவரை மிரட்டும் வில்லன் 2 நாளில் 25 லட்சம் வேண்டும் என்கிறார்.. உயிருக்கு பயந்து பகத்தும் உடனே ஓகே சொல்கிறார்.

எப்படி பணத்தை ரெடி செய்வது என அவர் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் பகத்தை ஒரு மேஜிக் மேன் என நினைக்கும் சிறுமி சாரா.. நான் தவறுதலாக மேஜிக் செய்த போது என் பெற்றோர்களை மறைய வைத்து விட்டேன்.. அவர்களை மீட்டு தர வேண்டும் என்கிறார்..

உடனே இதை வைத்து அந்த குழந்தையை கடத்தினால் அவரின் பெற்றோர்களிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என திட்டம் போடுகிறார்…

சில மணி நேரங்கள் செல்ல செல்ல தான் கடத்தியது ஒரு குழந்தை அல்ல.. அது ஒரு குட்டி பேய் என்பதை தெரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? வில்லனிடம் இருந்து தப்பிக்க இந்த பேயிடம் மாட்டிக் கொண்ட பகத் பாசில் என்ன செய்தார்.?

நடிகர்கள்…

ஃபஹத் ஃபாசில் – சூரி
சாரா பாலேகர்– திவ்யா

பகத் பாசில் – சாரா இருவருக்கமான அன்பு பாசம் என அனைத்தும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்கும் படி உள்ளது.. ஒரு கட்டத்தில் சாராவிற்காக பகத் உருகுவதும்.. பகத் நீ என் க்ளோஸ் பிரண்டு என சாரா சொல்லும் காட்சிகளில் நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும்.. இருவருக்கும் நிச்சயம் விருது கிடைக்கும் என உறுதியாக சொல்லலாம்..

அப்படி ஒரு சிறந்த பங்களிப்பை இருவரும் கொடுத்து நம்மை பாசமலையில் கட்டி போட்டு உள்ளனர்.. இது பேய் படம் என்பதை விட பாசம் படம் என்றும் சொல்லலாம்..

மகேஷ் மஞ்ச்ரேகர் – அஸ்லம்
சௌரப் சச்தேவா – பிரதாப்
வெங்கடேஷ் காகுமானு – மல்லேஷ்
சுப்பராஜு – கிருஷ்ணா
திவ்யா பிள்ளை – பல்லவி
எஸ். எஸ். ஷஷாங்க் – சஞ்சய்

ஆகிய கதாபாத்திரங்கள் படத்தில் கதை ஓட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

தொழில்நுட்பக் குழு:

வழங்குபவர் – எஸ். எஸ். ராஜமௌலி
தயாரிப்பாளர்கள் –ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா
எழுத்து & இயக்கம் – ஷஷாங்க் யேலேட்டி

இசை – கால பைரவா
ஒளிப்பதிவு – பிராட் பிரான்சிஸ் ACS
ஆடை வடிவமைப்பு – ரமா ராஜமௌலி
படத்தொகுப்பு – பிரவீன் ஆண்டனி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

இது ஒரு தெலுங்கு படம் என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகள் அமைத்துள்ளது சிறப்பு.. பெரும்பாலும் பகத் மற்றும் சாரா இருவருக்கும் ஒரே ஆடை தான்.. ஆனாலும் அதைக் கூட அழகாக ஒரு பேய் தேவதையாக காட்டியுள்ளனர்..

இப்படி ஒரு பேய் படம் வந்திருக்குமா என்று தெரியாது… ஒரு பேயை கடத்து ஒரு ஹீரோ என்ற வித்தியாசமான முயற்சியில் இந்த படத்தை கொடுத்திருக்கின்றனர்.. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

பேய் மிரட்டும் காட்சிகள் கூட சுவாரசியமாகவும் காமெடியாகவும் மேஜிக் போல இருப்பதே பல காட்சிகள் உணர முடிகிறது.. ரத்தமும் இல்லை சத்தமும் இல்லை ஆனால் ஒரு அழகா உணர்வுபூர்வமான ஒரு பேய் படம் என்று சொல்லலாம்..

பேய் வரும் காட்சிகளில் அந்த கிராபிக் காட்சிகள் கூட குழந்தைகளை கவரும் வகையில் மிக சிறப்பாக படம் ஆக்கி உள்ளனர்..

கால பைரவா இசையமைத்துள்ளார் காட்சிகளும் பின்னணி இசையும் ஒன்றாய் பயணிக்கிறது.

எழுத்து & இயக்கம் – ஷஷாங்க் யேலேட்டி.. நீண்ட வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் பேய் படம் அல்ல பாச படம் என்றும் சொல்லும் அளவுக்கு ஒரு அழகான சிறப்பான காவியத்தை கொடுத்துள்ளனர்..

Related posts

Leave a Comment