ஜெயிலர் 2 விமர்சனம் 5/5 – ரஜினி ராஜாங்கம் சூப்பர் ஸ்டார் சூப்பர்…

கதை…

சிலை கடத்தல் விநாயகனை கொன்றுவிட்ட ‘ஜெய்லர்’ ரஜினியை தேடி அலைகின்றனர் வில்லன் கும்பல்..

மிதுன் சக்கரவர்த்தி – வித்யா பாலன் – எஸ் ஜே சூர்யா – சூரஜ் வஞ்சரமோடு என அனைவரும் ரஜினியை தேடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ரஜினியின் தகவல் கிடைக்கிறது..

அதன் பிறகு அவர்கள் ரஜினியை என்ன செய்தனர்..? ரஜினி வில்லன்களை எப்படி தீர்த்து கட்டினார்.? அவர் போட்ட திட்டம் என்ன.? என்பதெல்லாம் மிரட்டலான ஸ்கிரீன் ப்ளே…


CAST

Super Star Rajinikanth
SJ Suryah
Mithun Chakraborty
Suraj Venjaramoodu
Vidya Balan
Ramya Krishnan
Yogi Babu
Mirnaa
Master Rithvik
Jatin Sarna
Namo Narayana
Bjorn Surrao
Anna Rajan
P. L. Thenappan
Jaffer Sadiq
Padam Kumar
Apeksha Porwal
Tamizh
Saravana Vel
Bagavathi Perumal
Kottayam Nazeer
Sunil Sukhada
Sujith Shankar
Hakim Shahjahan
Vineeth Thattil David
Ramachandran Durairaj

என்றுமே ராஜா நீ ரஜினி என்பது போல ரஜினி ராஜாங்கம் நடத்திருக்கிறார்.. பல காட்சிகளில் ஸ்லோமோஷனில் வந்தாலும் நம் மனதில் ஸ்லோவாக வருகிறார்.. இடைவேளைக்குப் பிறகு மாஸாக மனதில் மலர்ந்து விடுகிறார்.. ரஜினிக்காக தனியாக பாட்டு சைட் இல்லை என்றாலும் கதைக்குத் தேவையான இடத்தில் ரஜினியின் பங்களிப்பு சிறப்பு..

ரஜினியின் ஜோடியாக ரம்யா… மருமகளாக மீர்னா.. பேரனாக ரித்து உள்ளிட்ட அனைவரும் எமோஷனல் நடிப்பில் சூப்பர்..

வழக்கமான வில்லன் போல இல்லாமல் கத்தாமல் அடக்கி வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார் எஸ் ஜே சூர்யா.. வித்தியாசமாக வில்லியாக வித்யா பாலன்… சிகரெட் பிடித்துக் கொண்டே ரஜினியை மிரட்டும் காட்சிகளில் அசத்தல்..

யோகி பாபு, நமோ நாராயணா, சூரஜ் உள்ளிட்ட அனைவரும் காமெடியும் செய்து காட்சிகளில் ரசிக்க வைக்கின்றனர்..

Cameo:
Mohanlal
Shiva Rajkumar
Jackie Shroff
Poorna
Rajesh Madhavan
Nora Fatehi
Hirthik Roshan
Vijay Sethupathi

ஜெய்லர் முதல் பாகம் போலவே இவர்களுக்கு கொஞ்சம் நேரம் காட்சிகள் தான்.. ஆனாலும் மாஸ் காட்டி மிரட்டி இருக்கிறார்கள்… அதிலும் ஹிருத்திக் ரோஷன் ஆக்ஷன் காட்சி அசத்தல் ரகம்..

ஜெயிலர் பார்ட் 3 பாகத்திற்காக விஜய் சேதுபதி சீன் வச்சிருக்காங்க போல..

TECHNICAL CREW

Produced by Sun Pictures
Written And Directed By Nelson
Music: Anirudh
DOP: Vijay Kartik Kannan
Editor: R.Nirmal
Production Designer: DRK. Kiran
Action: Chethan D’Souza
Costume Designers: Pallavi Singh, Muthul Hafeez
Sound Mix: Suren.G
Sound Design: Suren G, S.Alagiakoothan
Colorist: Andreas Brückl
DI Lab: Annapurna Studios
VFX Producer: Santosh Raju
Make-up: Pattanam Rasheed, C.Harinath
Stills: V.Sittrarasu
Publicity Design: Kabilan Chelliah
PRO: Riaz K Ahmed, Paras Riyaz
Production Controller: D Ramesh Kuchirayar, R.S.Suresh Maniyan
Executive Producer: Sunil Reddy

அனிருத் பட்டையை கிளப்பி இருக்கிறார் பின்னணி இசை மிரட்டல் பாடல்களும் வேற லெவல் ரகம்.. ஒளிப்பதிவாளரும் சண்டை பயிற்சியாளரும் படத்திற்கு பெரிய பலம்..

பிரம்மாண்ட படத்தைக் கொடுத்து பிரம்மாண்ட நடிகர்களை வைத்து ரஜினி என்ற பிராண்டை தூக்கி நிறுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் கலாநிதிமாறன்..

ரஜினியின் வழக்கமான காட்சிகள் வைக்காமல் வித்தியாசமாக மாஸ் காட்டி இன்ட்ரோ பாட்டு இல்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு மாஸ் இருந்து கொடுத்திருக்கிறார் டைரக்டர் நெல்சன்..

Jailer 2 movie review

Related posts

Leave a Comment