100 கோடி வானவில் – விமர்சனம்

 

கதை….

கோவாவில் ஒரு டிவி சேனலில் பணிபுரிகிறார் ஹரிஷ் கல்யாண்… ஒரு நிகழ்ச்சிக்காக நாயகி சித்தி இதானியை நிகழ்ச்சி தொகுப்பாளராக கேட்கிறார்..

 

முதலில் மறுக்கும் சித்தி… ஒரு கட்டத்தில் தன் காதலனுக்காக சிகிச்சைக்காக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் பணம் கிடைக்கும் என்று ஓகே சொல்கிறார்..

நாட்கள் செல்ல செல்ல சித்தி அழகின் மீது காதல் கொண்டு அவரை காதலிக்கிறார் ஹரிஷ்.. தன் காதலை சொல்கிறார்..

ஆனால் தனக்கு காதலன் இருப்பதை சித்தி சொல்ல என்ன செய்த ஹரிஷ் கல்யாண்.? என்பதெல்லாம் மீதி திரைக்கதை

நடிகர்கள்

ஒரு முக்கோண காதல் கதை… தன் காதலிக்கு இன்னொரு காதலன் இருப்பதை அறியும் காதலன் என்ன செய்வான் என்பதை தவிக்கும் மனநிலையில் அழகாக சித்தரித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்..

 

 

அழகு கொஞ்சம் நடிப்பு என ரசிகர்களை கவர்கிறார் சித்தி இதானி..

 

கோவை சரளா, தம்பி ராமையா, விஜே பார்வதி, சின்னி ஜெயந்த் ஆகியோர் உண்டு.. இதில் பார்வதி கொஞ்சம் காமெடியும் சேர்த்து கலகலப்பாகி இருக்கிறார்..

 

தொழில்நுட்ப குழு…

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார்.. கோவாவின் அழகை பிரம்மாண்டமாக காட்டி காட்சிகளுக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்..

படத்தொகுப்பாளர் எம்.சுபாரத்.. கொஞ்சம் எடிட்டிங் செய்திருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்…

சித்து குமார் இசையில்… ‘போதும் போ’, ‘கண்ணாட்டி’ ஆகிய பாடல்கள் ஓகே..

 

பூ ரோஜா கூட்டம் பிச்சைக்காரன் நூறு சாமி உள்ளிட்ட படங்கள இயக்கிய சசியின் திரைக்கதை தான்.. இது பெரும்பாலும் அவரது படங்களில் உணர்ச்சி பூர்வமான காட்சிகள் இருக்கும்.. ஆனால் இதில் முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் டைரக்டர் சசி..

Related posts

Leave a Comment