டெலிவரி பாய் விமர்சனம்…

கதை…

கோவையில் வசிக்கின்றனர் ராதிகா மற்றும் அவரது மகன் லியோ சிவக்குமார்.. உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.. அதனுடன் போலீஸ் வேலைக்கு முயற்சித்து வருகிறார்.. மாதம் மாதம் சென்னைக்கு கௌதம் என்ற நபரை தேடி ஒரு அப்பார்ட்மென்ட்க்கு சென்று வருகிறார்…

அங்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் காளி வெங்கட்.. நீ ஏன் அடிக்கடி வந்து செல்கிறாய் என்று கேட்கிறார்.. நான் கௌதமை சந்திக்க வேண்டும் அவரிடம் பணம் கொடுக்க வேண்டும் என்கிறார்..

அவர் உனக்கு யார் என்று கேட்க… என்னை அவருக்கு தெரியாது என்கிறார்… அப்படி பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கும் போது ஒரு அருமையான பிளாஷ்பேக்..

அப்படி என்ன நடந்தது என்ன நடக்கப் போகிறது என்பது தான் மீதிக்கதை..

நடிகர்கள்…

பட்டிமன்ற பேச்சாளர்  திண்டுக்கல் லியோனியின் மகன் தான் சிவக்குமார்.. இவர்தான் கதைநாயகன்.. தவறை தட்டிக் கேட்கும் நபராக அப்பாவி இளைஞனாக அசத்தியிருக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவர் போடும் ஆக்ஷன் காட்சி ரசிகர்களுக்கு செம வேட்டை.. ஆக்சன் அளவுக்கு ரொமான்ஸ் பத்தவில்லை ப்ரோ..

ஹீரோயின் பிரிகிடா.. வழக்கம்போல ஹீரோயின் பெரிய ஸ்பேஸ் இல்லை..

இத்துடன் ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்வந்த், உதயா தீப் என மற்ற நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

துஷ்யந்த் ஜெயபிரகாஷ் தன் கேரக்டரில் அசத்தியிருக்கிறார்..

மெயின் வில்லன் மற்றும் ஏழு ரவுடி இளைஞர்கள் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளனர் படத்தில் பெரிய தாக்கத்தை கிளைமாக்ஸ் காட்சியில் இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்..

தொழில்நுட்ப குழு…

பாடல்கள் ஓகே ரகம் பின்னணியில் மிரட்டி இருக்கிறார்.. ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிட்டுள்ளார் இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி..

பிரசன்னா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை..

ஒரு சின்ன பட்ஜெட் படம் என்று நாம் நினைத்தால் படத்தின் மேக்கிங் பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர் நானி.. நாம் என்றோ யாருக்கோ செய்த உதவி நமக்கு நிச்சயம் பலனை கொடுக்கும்… நமக்கும் ஒருவர் கை கொடுப்பார் என்ற கோணத்தில் படத்தை முடித்து இருப்பது நம்மை நெகிழச் செய்கிறது…

இப்படி ஒரு கிளைமாக்ஸ் ஃபைட்  சமீபத்தில் வந்ததில்லை என்ற சொல்லும் அளவுக்கு ஆக்ஷனில் தூள் கிளப்பி இருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர்  பீனிக்ஸ் பிரபு..

Related posts

Leave a Comment