எப்படியும் ஹிட்டு கொடுத்தே ஆகணும் என்ற வேட்கையோடு இருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏனென்றால் காளி, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் அவருக்கு சரிவர கை கொடுக்கவில்லை. அதனாலே கொலைகாரனை பெரிதாக நம்பி இருக்கிறார். படத்தின் ட்ரைலர் ஸ்னீக்பீக் எல்லாம் பெரிய அளவில் ரீச் ஆகி இருப்பதால் படம் எப்படியும் ஹிட்டடிக்கும் என்று நம்புகிறார் விஜய் ஆண்டனி. அவரின் நம்பிக்கைக்கு உரமூட்டுவது போல படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பாப்டா தனஞ்செயன் கொத்தாக படத்தை ரேட் பேசி அள்ளிக்கொண்டார். அதனால் கொலைகாரன் எப்படியும் கொலவெறி ஹிட்டடிக்கும் என்பது கன்பார்ம். மேலும் படம் வெளியாகும் நாள் விடுமுறை தினமான ரம்ஜான் என்பதால் வசூலுக்குப் பஞ்சம் இருக்காது என்கிறார்கள். நல்லது நடக்கட்டும்.
கொலைவெறியில் வரும் கொலைகாரன்
