தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது.இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலின்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், காட்பாடி தொகுதியில் துரைமுருகனும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இதேபோன்று தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கின்றனர்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் போட்டியில் களம் இறங்குகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்றாகும்.
வ.
மறைந்த தி.மு.க. பொதுசெயலாளர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. பொருளாளர்டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. மன்னார்குடி தொகுதியிலும், கட்சியின் துணை பொதுசெயலாளர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பழனி தொகுதியிலும் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
லால்குடி தொகுதிக்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உடல்நல குறைவால் மரணமடைந்ததால், இந்த முறை அவரது சகோதரர் கே.பி.சங்கருக்கு திருவொற்றியூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதே போன்று மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதிக்கு தியாகராயர்நகர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவின் மகனும், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி நிர்வாகியுமான பிரபாகர் ராஜாவுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜூக்கு திருச்சி கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
1.பத்மநாபபுரம் – த.மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.
2.நாகர்கோவில் – என்.சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.
3.கன்னியாகுமரி- எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.
4.ராதாபுரம் – எம்.அப்பாவு
5.பாளையங்கோட்டை – மு.அப்துல் வகாப்
6.அம்பாசமுத்திரம் – இரா.ஆவுடையப்பன்
7.நெல்லை – எ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ.
8.ஆலங்குளம் – டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ.
9.சங்கரன்கோவில் (தனி) – ஈ.ராஜா.
10.ஒட்டப்பிடாரம் (தனி) – எம்.சி.சண்முகய்யா
11.திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
தங்கம் தென்னரசு, தங்க தமிழ்செல்வன்
12.தூத்துக்குடி- பி.கீதா ஜீவன் எம்.எல்.ஏ.
13.விளாத்திகுளம் – ஜி.வி.மார்க்கண்டேயன்
14.முதுகுளத்தூர் – ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
15.ராமநாதபுரம் – கா.காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்
16.பரமக்குடி -சே.முருகேசன்
17.திருச்சுழி – தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.
18.அருப்புக்கோட்டை -கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி
19.விருதுநகர்- ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ.
20.ராஜபாளையம் – சௌ.தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
21.கம்பம் – கம்பம் என்.ராமகிருஷ்ணன்
22.போடிநாயக்கனூர்- தங்க தமிழ்ச்செல்வன்
23.பெரியகுளம்- கே.எஸ்.சரவணக்குமார்
24.ஆண்டிப்பட்டி- எ.மகராஜன்
25.திருமங்கலம் – மு.மணிமாறன்
26.மதுரை மேற்கு -சி.சின்னம்மாள்
பழனிவேல் தியாகராஜன், ரகுபதி
27.மதுரை மத்தியம் – பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.
28.மதுரை வடக்கு – கோ.தளபதி
29.சோழவந்தான் -எ.வெங்கடேசன்
30.மதுரை கிழக்கு- பி.மூர்த்தி எம்.எல்.ஏ.
31.மானாமதுரை- ஆ.தமிழரசி
32.திருப்பத்தூர் (சிவகங்கை) – கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ.
33.ஆலங்குடி- சிவ.வீ.மெய்யநாதன் எம்.எல்.ஏ.
34.திருமயம் – எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ.
35.புதுக்கோட்டை – டாக்டர் முத்துராஜா
36.விராலிமலை- எம்.பழனியப்பன்
37.பேராவூரணி- என்.அசோக்குமார்
38.பட்டுக்கோட்டை- கா.அண்ணாதுரை
39.ஒரத்தநாடு- எம்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.
40.தஞ்சாவூர்- டி.கே.ஜி.நீலமேகம்
41.திருவையாறு- துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ.
42.கும்பகோணம்- க.அன்பழகன் எம்.எல்.ஏ.
43.திருவிடைமருதூர் (தனி) – கோவி.செழியன் எம்.எல்.ஏ.
44.நன்னிலம்- எஸ்.ஜோதிராமன்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
45.திருவாரூர்- பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ.
46.மன்னார்குடி- டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.
47.வேதாரண்யம்- எஸ்.கே.வேதரத்தினம்
48.பூம்புகார்- நிவேதா எம்.முருகன்
49.சீர்காழி (தனி) -மு.பன்னீர் செல்வம்
50.புவனகிரி – துரை கி.சரவணன் எம்.எல்.ஏ.
51.குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.
52.கடலூர்-கோ.அய்யப்பன்
53.நெய்வேலி-சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.
54.திட்டக்குடி (தனி) – சி.வி.கணேசன் எம்.எல்.ஏ.
55..ஜெயங்கொண்டம்- கே.எஸ்.கே.கண்ணன்
56.குன்னம்-எஸ்.எஸ்.சிவசங்கர்
57.பெரம்பலூர் (தனி) – எம்.பிரபாகரன்
58.துறையூர் (தனி) -செ.ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ.
59.முசிறி- ந.தியாகராஜன்
கே.என்.நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி
60.மணச்சநல்லூர்- சீ.கதிரவன்
61.லால்குடி- அ.சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ.
62.திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.
63.திருச்சி கிழக்கு-இனிகோ இருதயராஜ். (கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர்).
64.திருச்சி மேற்கு -கே.என்.நேரு எம்.எல்.ஏ.
65.ஸ்ரீரங்கம்- எம்.பழனியாண்டி
66.குளித்தலை-இரா.மாணிக்கம்
67.கிருஷ்ணராயபுரம்- க.சிவகாமசுந்தரி
68.கரூர்- வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.
69.அரவக்குறிச்சி -மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
70.வேடசந்தூர்-எஸ்.காந்திராஜன்
71.நத்தம்- எம்.ஏ.ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ.
72.ஆத்தூர்-ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ.
73.ஒட்டன்சத்திரம்-அர.சக்கரபாணி எம்.எல்.ஏ.
74.பழனி-ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.
75.மடத்துக்குளம்-இரா.ஜெயராமகி
76.பொள்ளாச்சி-டாக்டர் கே.வரதராஜன்
77.கிணத்துக்கடவு-குறிச்சி பிரபாகரன்
78.சிங்காநல்லூர்- நா.கார்த்திக் எம்.எல்.ஏ.
79.தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி
டி.ஆர்.சண்முகசுந்தரம், சாமிநாதன்
80.கோவை வடக்கு – வ.ம.சண்முகசுந்தரம்
81.கவுண்டம்பாளையம் -பையா என்கிற ஆர்.கிருஷ்ணன்
82.திருப்பூர் தெற்கு -க.செல்வராஜ்
83.மேட்டுப்பாளையம்-டி.ஆர்.சண்
84.கூடலூர் -எஸ்.காசிலிங்கம்
85.குன்னூர் – கா.ராமச்சந்திரன்
86.கோபிச்செட்டிபாளையம் -ஜி.வி.மணிமாறன்
87.அந்தியூர்-எ.ஜி.வெங்கடாசலம்
88.பவானி-கே.பி.துரைராஜ்
89.காங்கேயம்-மு.பெ.சாமிநாதன்
90.தாராபுரம் (தனி) -கயல்விழி செல்வராஜ்
91.மொடக்குறிச்சி-சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க. துணை பொதுசெயலாளர்).
92.ஈரோடு மேற்கு-சு.முத்துசாமி
93.குமாரபாளையம்-எம்.வெங்கடா
94.பரமத்திவேலூர்-கே.எஸ்.மூர்த்
95.நாமக்கல்-பெ.ராமலிங்கம்
96.சேந்தமங்கலம்-கே.பொன்னுசாமி
97.ராசிபுரம்- டாக்டர் மா.மதிவேந்தன்
98.வீரபாண்டி- டாக்டர் ஆ.கா.தருண்
99.சேலம் தெற்கு – எ.எஸ்.சரவணன்
100.சேலம் வடக்கு- இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.
பொன்முடி, எ.வ.வேலு
101.சேலம் மேற்கு -சேலத்தாம்படி அ.ராஜேந்திரன்
102.சங்ககிரி- கே.எம்.ராஜேஷ்
103.எடப்பாடி -த.சம்பத்குமார்
104.மேட்டூர் -எஸ்.சீனிவாச பெருமாள்
105.ஏற்காடு (பழங்குடி) – சி.தமிழ்செல்வன்
106.ஆத்தூர் (தனி) -ஜீவா ஸ்டாலின்
107.கெங்கவல்லி (தனி) -ஜெ.ரேகா பிரியதர்ஷினி
108.சங்கராபுரம் -தா.உதயசூரியன் எம்.எல்.ஏ.
109.ரிஷிவந்தியம் -வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.
110.உளுந்தூர்ப்பேட்டை -எ.ஜெ.மணிகண்ணன்
111.திருக்கோவிலூர் -க.பொன்முடி எம்.எல்.ஏ.
112.விக்கிரவாண்டி – நா.புகழேந்தி.
113.விழுப்புரம் – டாக்டர் ஆர்.லட்சுமணன்
114.திண்டிவனம் (தனி) -பி.சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ.
115.மைலம் -டாக்டர் இரா.மாசிலாமணி எம்.எல்.ஏ.
116.செஞ்சி -கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ.
117.வந்தவாசி (தனி -எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ.
118.செய்யார் -ஒ.ஜோதி
119.ஆரணி -எஸ்.எஸ்.அன்பழகன்
120.போளூர் -கே.வி.சேகரன் எம்.எல்.ஏ.
121.கலசப்பாக்கம் – பெ.சு.தி. சரவணன்
122.கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ.
123.திருவண்ணாமலை -எ.வ.வேலு எம்.எல்.ஏ.
வேலூர், அணைக்கட்டு
124.செங்கம் (தனி) – மு.பெ. கிரி எம்.எல்.ஏ.
125.பாப்பிரெட்டிபட்டி -டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்
126.தர்மபுரி -தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ.
127.பென்னாகரம் -பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ.
128.பாலக்கோடு -பி.கே.முருகன்
129.ஓசூர் – ஒய்.பிரகாஷ்
130.வேப்பனபள்ளி -பி.முருகன் எம்.எல்.ஏ.
131.கிருஷ்ணகிரி-டி.செங்குட்டு
132.பர்கூர் -தே.மதியழகன்
133.திருப்பத்தூர் (வேலூர்) -எ.நல்லதம்பி எம்.எல்.ஏ.
134.ஜோலார்பேட்டை -க.தேவராஜி
135.ஆம்பூர் – ஆ.செ.வில்வநாதன்
136.குடியாத்தம் -வி.அமலு
137.கீழ் வைத்தினான்குப்பம் (தனி) – கே.சீத்தாராமன்
138.அணைக்கட்டு -ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.
139.வேலூர்- ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.
துரைமுருகன்
140.ஆற்காடு- ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.
141.ராணிப்பேட்டை -ஆர்.காந்தி எம்.எல்.ஏ.
142.காட்பாடி- துரைமுருகன் எம்.எல்.ஏ. (தி.மு.க. பொதுசெயலாளர்).
143.காஞ்சீபுரம்- சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.
144.உத்திரமேரூர் – க.சுந்தர் எம்.எல்.ஏ.
145.செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ.
146.தாம்பரம் -எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.
147.பல்லாவரம்- இ.கருணாநிதி எம்.எல்.ஏ.
148.ஆலந்தூர் -தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ.
149.சோழிங்கநல்லூர் -எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ.
150.ஆவடி-சா.மு.நாசர்
151.பூந்தமல்லி (தனி) -ஆ.கிருஷ்ணசாமி.
152.திருவள்ளூர்-வி.ஜி.ராஜேந்தி
153.திருத்தணி-எஸ்.சந்திரன்.
154.கும்மிடிப்பூண்டி-டி.ஜெ.கோ
155.திருவொற்றியூர்- கே.பி.சங்கர்
மு.க.ஸ்டாலின், உதயநிதி
156.மாதவரம் -எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ.
157.அம்பத்தூர்-ஜோசப் சாமுவேல்
158.மதுரவாயல் – காரம்பாக்கம் க.கணபதி
159.மயிலாப்பூர் – த.வேலு
160.தியாகராயநகர்- ஜெ.கருணாநிதி
161.சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.
162.விருகம்பாக்கம்- ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா
163.அண்ணா நகர் -எம்.கே.மோகன் எம்.எல்.ஏ.
164.ஆயிரம்விளக்கு -டாக்டர் நா.எழிலன்
165.திருவல்லிக்கேணி-சேப்பாக்
166.துறைமுகம் -பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.
167.ராயபுரம்-ஐட்ரீம் இரா.மூர்த்தி
168.எழும்பூர் (தனி) -இ.பரந்தாமன்
169.திரு.வி.க. நகர் (தனி) – தாயகம் கவி எம்.எல்.ஏ.
170.வில்லிவாக்கம் -அ.வெற்றி அழகன்
171.பெரம்பூர்-ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ.
172.ஆர்.கே.நகர்-ஜே.ஜே.எபினேசர்
173.கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. (தி.மு.க. தலைவர்)
11 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில், கடந்த முறை வெற்றி பெற்ற 11 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 91 பேர் மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இதில் 74 பேர் எம்.எல்.ஏ.க்கள் ஆவர். 59 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
12 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர்களில் 9 டாக்டர்கள், 11 என்ஜினீயர்கள், 33 வக்கீல்கள், 55 பட்டதாரிகள் உள்ளனர்.