தேர்தல்களத்தில் குஷ்பூ காணாமல்போன கௌதமி

ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கலாச்சாரம் நிறைந்த பா.ஜ.க தமிழகத்தில் இந்த சட்டசபைத் தேர்தலில் முத்திரை பதிக்க முடிவுசெய்து நடிகைகளைக் களத்தில் இறக்க முயன்றது. பா.ஜ.க சார்பில் போட்டியிட நடிகை குஷ்புவிற்கு சீட் கொடுக்கப்பட்டது. கவுதமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராஜபாளையத்தில் கவுதமியும், சேப்பாக்கத்தில் குஷ்புவும் களமிறங்க விரும்பினர். பா.ஜ.க தலைமையும் அவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து, அந்தந்த ஊர்களுக்குச் சிலமாதங்களுக்கு முன்பே அனுப்பியது. இருவரும் தொகுதிக்குள் நகர்வலம் துவங்கியதால், பா.ஜ.க வட்டாரமே களைகட்டியது. திடீர் திருப்பமாக, சேப்பாக்கம் தொகுதி, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. ‘சிவகாசி வேண்டாம்’ என, ராஜபாளையம் வந்து விட்டார், ராஜேந்திர பாலாஜி.

இதனால் ‘அப்செட்’ ஆனாலும், இரு நடிகைகளும் காட்டிக் கொள்ளவில்லை. ‘கட்சி முடிவை ஏற்கிறேன்’ என்றார் குஷ்பு. ‘ராஜபாளையம் மக்கள் காட்டிய அன்புக்குத் தலைவணங்குகிறேன். அவர்களுடன் உறவு நிலைத்திருக்கும்’ என்றார் கவுதமி.

இதற்கிடையில், குஷ்புக்கு ஆயிரம் விளக்கு தொகுதி கிடைத்ததால் குஷியாகி விட்டார். கவுதமியின் விரக்தி அவரது வாழ்த்தில் தெரிகிறது. ‘அனைத்து, பா.ஜ.க வேட்பாளர்களும் வெற்றி பெற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!’ என்றார்.

இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்வேன் என்றுகூறி குஷ்பு இன்று நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆனால் ராஜபாளையத்தில் வீடு எடுத்து உறவினர்களுடன் தங்கிய கவுதமி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. விருதுநகர் மாவட்டத்திலாவது தேர்தல் பிரச்சாரம் செய்வாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் மநீம நிறுவனத் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் களத்தில் இறங்கியுள்ளார். சரிபோட்டியாக வானதி சீனிவாசன் தீவிர தேர்தல் பணியைத் துவங்கிச் செயல்படுத்தி வருகிறார்.

Related posts

Leave a Comment