கோயம்புத்தூரில் குடியேறுகிறாரா கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதிமன்றகட்சி தலைவருமான கமல்ஹாசன், கோவையில் குடியேற திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “என்னுடைய உறவினர்களும், நான் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் அதிகம் வசிக்கும் ( சென்னை) மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட்டிருந்தால், எனக்கு பாதுகாப்பாகவும், மிக எளிமையான கணக்காகவும் இருந்திருக்கும்.  ஆனால் அதை நான் விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி தான் மோசமான அரசியல்வாதிகளால் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.  அதனால் தான் அந்த தொகுதியில் நேரடியாக களம் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதுமட்டுமன்றி, கோவை தெற்கு தொகுதியில் தேசிய கட்சிகளால் தூண்டப்பட்டு சமூக நல்லிணக்கம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களே அங்கு போட்டியிடவும் செய்கிறார்கள். அதனால் இது தான் எனக்கு நேரடி சவால்!”  என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, “இத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் கோவையிலேயே கமல் குடியேறுவார்” என்று ஒரு தகவல் பரவியது.

மக்கள் நீதி மய்யம் கட்சியினரிடேயே, “கமல் எப்போதுமே ரிஸ்க் எடுப்பதை விரும்புவார். கோவை தெற்கு தொகுதியை அவர் தேர்ந்தெடுத்ததும் அதற்கு ஒரு உதாரணம்.

சாதி, மதம், ஊழல் என அரசியல் செய்வோரை களத்திலேயே நேரடியாக சந்திககவே கோவையை தேர்ந்தெடுத்தாக அவரே சொல்லியிருக்கிறார்.  அங்கேயே குடியேறவும் திட்டமிட்டுள்ளார்.

தற்போது தகவல் தொடர்பு மிகவும் வளர்ந்திருக்கிறது. அவரது அடுத்தபடத்துக்கான திட்டமிடல்களை கணினி மூலம் எளிதாக செய்துவிடலாம். தேவையானால் ஒரு மணி நேரத்தில் சென்னைக்கு விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ வந்துவிட முடியும். தவிர கமல் எப்போதுமே மாற்றத்தை விரும்புபவர். ஆகவே அவர் இத்தனை நாள் வசித்த சென்னையைவிட்டு, கோவையில் குடியேற இருக்கிறார்!” என்று ஒரு பேச்சு எழுந்தது.

தற்போது அதை உறுதி செய்யும் விதமாக, ம.நீ.ம. கட்சியின் துணைத்தலைவர் மருத்துவர் மகேந்திரன் பேசியிருக்கிறார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அவர், “எங்கள் கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அந்த தொகுதியில்தான் வசிக்க வேண்டும். அது கமல் சாருக்கும், எனக்கும், – அனைவருக்கும் பொருந்தும். அப்படிப் பார்த்தால் எனக்கும், கமல் சாருக்கும்  கோவைதான்  ஊரு. இனி கோவையில் தான் வீடு!” என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து கமலும் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

Leave a Comment